இன்னும் ஒரு தடவை செய் மாமா.. இன்னும்... இன்னும்.. என்னடா நடக்குது அங்கே!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் கண்மணி சீரியல் கண்ணன் முதலில் தனது அக்கா மகள் சவுந்தர்யா மேல் காதல் கொண்டாலும், பின்னர் அவள் ஆகாஷை காதலிப்பதை அறிந்து கண்ணன் விலகிக் கொள்கிறான்.

முதலில் ஆகாஷை காதலித்ததால், கண்ணன் சவுந்தர்யா கல்யாணம் மணமேடை வரை வந்து நின்று போனது.அடுத்து, கண்ணன் மீது கொண்ட கோபத்தால், ஆகாஷின் அம்மா ஆகாஷ், சவுந்தர்யா கல்யாணத்தை மணமேடை வரை வந்து நிறுத்தினாங்க.

இப்போது கண்ணனின் உண்மையான பாசம், அன்பை புரிந்துகொண்ட சவுந்தர்யாவுக்கு கண்ணன் மாமா மீது காதல் வந்துவிடுகிறது. அன்றிலிருந்து கவனம் எடுத்து தனது மாமா கண்ணனை கவனிக்கிறா. இதை வீட்டில் உள்ளவர்கள் புரிந்துகொண்டாலும் கண்ணனுக்கு மட்டும் புரியலை என்பதால், குறி, ஜோதிடம் பார்த்த சவுந்தர்யாவின் பெற்றோர், முருகன் வள்ளி திருமணம் நடத்தினால் சவுந்தர்யா-கண்ணன் கல்யாணம் நடக்கும்னு சொன்னதா சொல்றாங்க.

திருமண கூத்து

திருமண கூத்து

முருகன், வள்ளியை காதலித்த கதையை சொல்லி கூத்து நடத்த வெளியூரிலிருந்து ஆட்கள் அழைச்சுக்கிட்டு வந்து கூத்து ஒத்திகை பார்க்கறாங்க. அப்போ கண்ணன் அதை தோப்பு வீட்டுக்கு வெளியில் கட்டிலில் உட்கார்ந்து பார்க்கிறான். ஆட்களை அழைச்சுட்டு வந்தது முத்துசெல்வியின் அப்பாதான்.முத்து செல்வியும் கூத்து பார்க்கிறாள்.

சவுந்தர்யாவிடம்

சவுந்தர்யாவிடம்

சவுண்டு சவுண்டு என்று கூப்பிட்டு கொண்டே சவுந்தர்யாவின் அறைக்குள் வாறான் கண்ணன். என்ன மாமா சொல்லுன்னு கேட்கறா சவுந்தர்யா.
வள்ளி திருமணம் கூத்து பார்த்தேன்.. அடடா.. என்னா காதல்... எப்படிப்பட்ட கல்யாணம்னு புகழறான்.

நீ பார்த்தியா

நீ பார்த்தியா

நீ வள்ளித் திருமணம் கூத்து பார்த்துட்டியா மாமா.. என்னை அழைச்சுட்டு போயிருக்கலாமே மாமான்னு சிணுங்கறா. ஆமா, இல்லே.. சரி விடு.. இப்போ ஒத்திகைதானே நடக்குது... நிஜமா கூத்து நடக்கறப்போ பார்க்கலாம் சவுண்டுன்னு சொல்றான். ஏன் மாமா வள்ளி திருமணம் கூத்து அவ்ளோ நல்லாவா இருந்துச்சுன்னு கேட்கறா சவுந்தர்யா.

வேற லெவல்

வேற லெவல்

ஆமா சவுண்டு.. என்னதான் சினிமா, சீரியல்னு பார்த்தாலும்.. இந்த கூத்து வேற லெவல் சவுண்டு. முருகன் வேணும்னே வயசான வேஷத்துல வந்து வள்ளிக்கிட்டே காதல் வலை வீசறது...வள்ளி சீச்சீ கிழவனான்னு ஒத்துக்காம .. நடிக்கறதுன்னு ஒரே ஊடல் போ..இதெல்லாம் பார்க்கணும்னா குடுத்து வச்சிருக்கணும்னு சொல்றான்..

இன்னும் சொல்லு

இன்னும் சொல்லு

மாமா அப்புறம் என்ன நடந்துச்சு.. இன்னும் சொல்லு மாமான்னு கேட்கறா சவுந்தர்யா. சவுண்டு.. வள்ளிக்கு முருகன் தாலி கட்றார் பாரு...அப்படியே நைசா வந்து இப்படியே கழுத்துகிட்ட கையைக் கொண்டு வந்து மெதுவா இப்படி தாலி கட்டினாருன்னு சவுந்தர்யா கழுத்துல தாலி கட்டுவது போல செய்து காமிக்கறான் கண்ணன்.

காத்திருக்கும் சவுந்தர்யா

காத்திருக்கும் சவுந்தர்யா

ஏற்கனவே தன்னை கண்ணன் மாமா எப்போது கைப்பற்றுவார் என்று உருகி உருகி காதலித்து காத்து இருக்கும் சவுந்தர்யாவுக்கு இது ஆனந்த பூரிப்பை தருது. எப்படி மாமா தாலி காட்டினார்.. இன்னொரு தடவை சொல்லுன்னு சொல்றா.. மறுபடியும் செய்யறான் கண்ணன்.

தாலி கட்ட

தாலி கட்ட

மீண்டும் மீண்டும் எப்படி மாமா பிளீஸ் பிளீஸ் எனக்காக ஒரே ஒரு தடவைன்னு கேட்டே நாலு முறை இப்படி செய்ய சொல்றா சவுந்தர்யா. கண்ணனும் மக்கு போல செய்கிறானே தவிர, ஒவ்வொரு முறையும் தான் தாலி கட்டுவது போல பாவனை செய்வதை சவுந்தர்யா எவ்வளவு பூரிப்போடு ரசிக்கிறா என்பதை அறியாம இருக்கான்.

சப்புன்னு அறைஞ்சேன்..

சப்புன்னு அறைஞ்சேன்..

16 வயதினிலே படத்தில் சப்பாணி ஸ்ரீதேவியை ஏமாத்திய டாக்டரை சப்புன்னு அறைஞ்சேன்னு சொல்வார். எப்படி அறைஞ்சேன்னு மறுபடி மறுபடி சந்தோஷத்தில் கேட்பாங்க ஸ்ரீதேவி. சவுந்தர்யா தாலி எப்படி காட்டினார் மாமான்னு அடிக்கடி கேட்டது 16 வயதினிலே காட்சியை நினைவு படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+