சினேகன் செய்த செயல் தான் எனக்கு வேதனையாக இருக்கிறது.. உருக்கமாக கூறிய கன்னிகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன் செய்த செயல் அவருடைய மனைவியான கன்னிகாவை அதிகமாக பாதித்து இருக்கிறதாம்.

காதலித்து திருமணம் செய்துகொண்ட கன்னிகா ரவி தற்போது தன்னுடைய கணவரை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

கன்னிகாவின் ஆரம்ப காலம்

கன்னிகாவின் ஆரம்ப காலம்

கன்னிகா ரவி தமிழ் நடிகையாக இருந்தாலும் ஆரம்பத்தில் அவர் ஒரு விஜே வாக தான் காலடி எடுத்து வைத்திருக்கிறார். தீயா வேலை செய்யணும் குமாரு, சத்திரபதி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தலும் அவருக்கு அந்த வாய்ப்பு சிறப்பாக அமையவில்லை. கன்னிகா வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்துள்ளார். இவர் தமிழ்நாட்டின் விருதுநகரில் பிறந்திருந்தாலும் வளர்ந்தது எல்லாமே திண்டுக்கல் தானாம். கன்னிகா முதன்முதலில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான அமுதா ஒரு ஆச்சர்யக்குறி சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார்.

கிடைத்த முதல் வாய்ப்பு

கிடைத்த முதல் வாய்ப்பு

முதல் சீரியலை தொடர்ந்து சபாஷ் சரியான சிரிப்பு என்ற நிகழ்ச்சியின் விஜேவாகவும் பணியாற்றியிருக்கிறார். அதற்கு பிறகு தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. ஏற்கனவே இந்த சீரியலின் வேற ஒரு கேரக்டர் நடித்துக் கொண்டிருந்தாலும், அவர் பாதியிலே விலகிவிட இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. கல்யாண வீடு சீரியல் இவருக்கு சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை கொடுத்தது. இவருடைய நீண்ட முடி இவருக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்திருக்கிறது. கன்னிகா நீண்ட முடிக்கான அழகி பட்டத்தையும் பெற்றிருக்கிறார். ஆனாலும் வெள்ளித்திரையில் இவருக்கு தகுந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது இவருடைய ஏக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில்தான் இவர் பாடலாசிரியர் சினேகனை காதலித்து கடந்த வருடம் ஜூலை மாதம் திருமணம் செய்திருக்கிறார்.

கன்னிகாவின் வருத்தம்

கன்னிகாவின் வருத்தம்

பல வருடங்களாக ரகசியமாக தங்களுடைய காதல் வாழ்க்கையை வைத்திருந்த சினேகன், கன்னிகா தம்பதியினர் திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்புதான் தங்களுடைய காதல் வாழ்க்கையை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தனர். ஏற்கனவே சினேகன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு இருந்தாலும், அப்போது காதலித்து கொண்டிருந்ததால் அது கன்னிகாவிற்கு பெரிய கவலையாக தெரியவில்லையாம். ஆனால் தற்போது திருமணம் முடிந்த பிறகு ஒரே வீட்டில் ஒன்றாக இருந்து கொண்டிருக்கும் போது திடீரென்று பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன் கலந்து கொண்டிருப்பது கன்னிகா வருத்தமாகத்தான் இருக்கிறது.

உருக்கமான வார்த்தைகள்

உருக்கமான வார்த்தைகள்

திருமணத்திற்கு பிறகு சினேகன் எங்கே சென்றாலும் கன்னிகாவை கூட்டிக்கொண்டு தான் செல்வாராம். அரசியல் வேலையாக இருந்தாலும் சரி, சினிமா சம்பந்தப்பட்ட வேலையாக இருந்தாலும் சரி சினேகன் கன்னிகாவை கூட்டிக் கொண்டே செல்வதால் தற்போது அவர் அருகில் இல்லை என்பது வேதனையாக இருந்தாலும், அவர் வெற்றியோடு வரவண்டும் என்று தான் இவர் நினைத்துக் கொண்டிருக்கிறாராம். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கன்னிகாவை நினைத்து உருக்கமாக பேசியது கன்னிகாவிற்கு வருத்தமாக இருந்ததாம். சினேகன் கன்னிகாவிருக்கு அதிகமான வேலைகளை கொடுத்துவிட்டுதான் சென்று இருக்கிறாராம். அதனால் தற்போது கன்னிகா பிசியாக இருந்தாலும் இவரை நினைத்து சினேகன் ஃபீல் பண்ணுவதை பார்க்கும் போது மனது வேதனையாக இருக்கிறது என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+