சினேகனுக்கு ஏத்த சினேகிதி...வைரலாகும் கன்னிகா ரவியின் சிலம்பாட்ட வீடியோ
சென்னை: பாவாடை தாவணியில் கம்பு சுத்தி ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார் கன்னிகா ரவி.
திருமணத்திற்கு பிறகு இவர் வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
கன்னிகாவின் சிலம்பாட்டத்தினை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சினேகனின் காதல் மனைவி
பாடலாசிரியர் சினேகனின் காதல் மனைவியான கன்னிகா ரவி சுத்தமான தமிழ் பெண் என்பது அனைவருக்குமே தெரியும். இவர் அருப்புக்கோட்டையில் பிறந்து இருந்தாலும் இவருடைய தந்தையின் ஆசைக்காக சினிமா துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். சினிமாவில் மட்டுமல்லாமல் தற்காப்பு கலைகளையும் நன்கு கற்று தெளிந்து இருக்கிறார். இவர் காலேஜ் படிக்கும்போது இசையருவி சேனலில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அழகான கூந்தல்
இவர் ஒரு தொகுப்பாளராக இருக்கும்போது கே பாலச்சந்திரனின் ஆச்சரியக்குறி சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை விட்டுவிடாமல் இவரும் முதல் சீரியலில் காலடி எடுத்து வைத்த பிறகு இவருக்கு பல சீரியல்கள் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான் இவர் அழகான கூந்தலை வைத்திருப்பவருக்கான அழகி பட்டம் பெற்றிருக்கிறார். இந்த பட்டத்தை வெற்றி பெற்ற பிறகு இவருக்கு பல விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஷாம்பு மற்றும் சீயக்காய் போன்ற விளம்பரங்களில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வந்தது.

திரைப்படங்களில் அறிமுகம்
இவர் சீரியலில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த தீயா வேலை செய்யனும் குமாரு என்னும் திரைப்படத்தில் இவர் அறிமுகமாகியிருக்கிறார். இந்த திரைப் படத்தில் சின்ன ரோலில் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு பல திரைப்படங்களில் இவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். இவர் சினிமாவுக்காக சிலம்பமும், பறை இசையும் கற்றிருக்கிறார். இவருடைய சிறப்பான திரைப்படங்களில் தேவராட்டம் ஒன்று அதில் இவர் தன்னுடைய அனைத்துத் திறமைகளையும் காட்டி இருப்பார்.

பல திறமை கைவசம் இருக்கு
இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளராக இருந்து வருகிறார். கிராமத்து சமையலில் கெட்டிக்காரராக இருக்கும் இவர் தனக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. இவருடைய திறமையை பார்த்ததும் ரசிகர்கள் மெய்மறந்து ரசித்து வருகிறார். பாவாடை தாவணியில் இவர் பம்பரமாக சுற்றி வருவதை பார்த்ததும் ரசிகர்கள் சினேகன் வாய் பேசினா எலும்பு முறிந்து விடுமோ??என்றெல்லாம் கண்டமேனிக்கு கலாய்த்து வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications