வயசு வித்தியாசம் பார்த்தீங்களே.. சின்ன வயசிலும் கன்னிகா சினேகனுக்கு எத்தனை பக்குவம் பாருங்க!
சென்னை: கன்னிகா ரவி, சினேகனுக்கு தாயாக மாறி அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார். அவர் ஷூட்டிங்கிற்காக வெளியூர் செல்வதிலிருந்து கவிதை எழுவது வரை அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்.
கவிஞர் சினேகன் திரைப்படத் துறையில் பாடலாசிரியராக இருந்து வருகிறார். ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் பாண்டவர் பூமி படத்தில் எழுதிய தோழா தோழா பாடல் மிகவும் பிரபலம்.
இவர் ஏராளமான பாட்டுகளை எழுதியுள்ளார். பெரும்பாலானாவை இளசுகளின் மனங்களை கவர்ந்த பாடல்களாகும். இவர் சீரியல் நடிகை கன்னிகா ரவியை 9 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கமல்ஹாசன்
இவர்களது திருமணத்தை கமல்ஹாசன் திருமாங்கல்யம் எடுத்துக் கொடுத்து நிகழ்த்தி வைத்தார். திருமணமான சில நாட்களிலேயே பிக்பாஸ் அல்டிமேட்டிற்கு சென்றார் சினேகன். உள்ளே அவரை நினைத்து வெளியே கன்னிகா நிறைய வீடியோக்களை இன்ஸ்டாவில் போட்டு கண்கலங்கி வந்தார்.

சினேகன் காதல்
மேலும் சினேகன் காதலை சொன்னவுடன் அவருக்கு பதில் அளிக்க கார்த்திகை தீபத்திருநாள் அன்று விளக்கு ஏற்றி அவருக்கு காதலை சொன்னேன். அப்போது கையில் தாலி கயிற்றையும் எடுத்துச் சென்றேன். அந்த திருமாங்கல்யத்துடன் இருவரும் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

பொக்கிஷம்
அதை பொக்கிஷமாக வைத்திருந்த நிலையில் தற்போது அதை யாரோ திருடிவிட்டார்கள் என கண்கலங்கி கன்னிகா தெரிவித்த கருத்து ரசிகர்களின் மனங்களை உருக வைத்தது. சினேகன் எழுதிய பாடல்களை தினந்தோறும் ஒலிக்கவிட்டு அதை வைத்து கன்னிகா ரீல்ஸ் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

பாடல்கள்
தான் எழுதிய பாடல்களை தானே மறந்த நிலையில் அதை கன்னிகா எடுத்து ரீல்ஸ் செய்வது சினேகனை ஆச்சரியப்படுத்தியது. சினேகனுக்கு தந்தை மட்டும்தான், அவருக்கு தாய் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இத்தனை வயது வித்தியாசத்தில் கன்னிகாவை சினேகன் திருமணம் செய்து கொண்டாரே இது எப்படி சரியாக வரும் என பலர் கேள்வி எழுப்பினார்கள்.

தாய் போல்
ஆனால் இன்று கன்னிகாவோ சினேகனை ஒரு தாயை போல் பார்த்து வருகிறார். சினேகனுக்கு கொஞ்சி கொஞ்சி விளையாடுவது, அவரை சீண்டி கொண்டே இருப்பது, சுட்டித்தனம், குறும்புத்தனமாக செய்வது என இருக்கும் கன்னிகா சமையல் செய்வது, கிராப்ட் வொர்க் செய்வது, பெயிண்டிங் என அசத்தி வருவதோடு, சினேகன் எழுதிய வரிகளுக்கு மெட்டுகளை அமைத்து பாடியும் வருகிறார்.

டிஸ்யூ பேப்பரில் ரோஜா
டிஸ்யூ பேப்பரில் கன்னிகா செய்த வெண்மையான ரோஜா மலரை கண்ட நெட்டிசன்கள் கன்னிகாவுக்குள் இத்தனை திறமையான பாராட்டி வருகிறார்கள். இருவரும் பொது இடங்களிலும், சமூக வலைதளங்களிலும் மிகவும் அன்யோன்யமாக இருந்து வருவது பலரையும் முகம் சுளிக்க வைத்திறது. மேலும் தாய் இல்லாத சினேகனை மிகவும் கண்ணும் கருத்துமாக பார்த்து வருவதை எண்ணி ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications