சினேகனின் 1 வயது குழந்தைகள் குறித்து அவதூறு.. சரியான பாடம் புகட்டிய கன்னிகா! உஷாரய்யா உஷாரு
சென்னை: தமிழ் சினிமாவில் கவிஞராகவும், நடிகராகவும், அரசியல் பிரமுகராகவும் அறியப்படும் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா தம்பதிகள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, தங்களுடைய குடும்ப வாழ்க்கையையும், குறிப்பாக இரட்டை பெண் குழந்தைகளின் அழகான தருணங்களையும் அடிக்கடி ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தன்னுடைய இரண்டு குழந்தைகள் குறித்து மோசமாக கமெண்ட் போட்ட நபருக்கு கன்னிகா சரியான சம்பவம் செய்திருக்கிறார்.

அழகான குடும்பம் குடும்பம்
சினேகன் கன்னிகா குழந்தைகள் செய்யும் குறும்புகள், சின்ன சின்ன சேட்டைகளை கன்னிகா அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். அந்த வீடியோக்கள் பார்ப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக மாறிவிடுகிறது. இதனால் பலரும் "இன்னும் இப்படிப் பல வீடியோக்கள் போடுங்கள்" என்று கேட்டு வருகிறார்கள். அதே நேரத்தில், "கண்ணே பட்டுடாதே", "திருஷ்டி சுத்தி போடுங்க" என்று அன்பாக கவலைப்படும் கமெண்ட்களும் அதிகம்.
சினேகன் கன்னிகா தம்பதி
ஆனால் இந்த மகிழ்ச்சியான சூழ்நிலையில்தான் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஒரு நபர், அந்த சிறிய குழந்தைகளை குறித்தே மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும் கமெண்ட் செய்துள்ளார். இதை சும்மா விடாமல் கன்னிகா நேரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
கன்னிகா எடுத்த சட்ட நடவடிக்கை
அவர் இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு போலீசில் புகார் அளித்ததோடு, அந்த நபரின் சமூக வலைதள கணக்கையும் "child abuse" என்ற காரணத்தால் ரிப்போர்ட் செய்து பிளாக் செய்ய வைத்துள்ளார். இதைப்பற்றிய முழு விபரங்களையும் அவர் ஒரு அவர்னஸ் வீடியோவாக தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், "இது மாதிரி கமெண்ட் பண்ணுறவர்களை சும்மா விட்டுடக்கூடாது. குழந்தைகள் பற்றிய விஷயம்னா இன்னும் கவனமாக இருக்கணும். இது ஒரு குற்றம். இதுக்கு சட்டப்படி தண்டனை இருக்கும்" என்று தெளிவாக கூறியுள்ளார். மேலும், தாம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நபருக்கு 3 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்
இந்த தைரியமான முடிவுக்காக கன்னிகாவை பலரும் பாராட்டி வருகின்றனர். "இது மாதிரி தான் ரியாக்ட் பண்ணணும்", "சும்மா விட்டுடக்கூடாது", "மற்ற பெண்களுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு" என்று சமூக வலைதளங்களில் ஆதரவு குரல்கள் எழுந்து வருகின்றன.
தம்பதிகளின் பின்னணி
சினேகன், தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை எழுதிய கவிஞர். பின்னர் நடிகராகவும், அரசியல் துறையிலும் தனது பயணத்தை தொடர்ந்தார். கன்னிகாவும் பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்தவர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு, தற்போது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தங்களுடைய குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரத்தை ரசிகர்களுடன் பகிர்வது இவர்களின் வழக்கமாகி விட்டது.
சமூக வலைதளங்களில் அதிகரிக்கும் பிரச்சனை
இன்று சமூக வலைதளங்கள் எல்லோருக்கும் திறந்த ஒரு இடமாக மாறிவிட்டது. அதே நேரத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது அவதூறு, ஆபாச கருத்துக்கள் போன்றவை அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம். "கமெண்ட் தான் பண்ணேன்" என்று சிலர் நினைத்தாலும், அது சட்ட ரீதியாக பெரிய குற்றமாக மாறும் என்பதை பலர் புரிந்து கொள்ளவில்லை.
பெண்களுக்கு ஒரு முக்கியமான செய்தி
யாராவது இப்படி அவதூறாக அல்லது ஆபாசமாக பேசினால் சும்மா இருக்க வேண்டாம். உடனே ஸ்கிரீன்ஷாட் எடுத்து சேவ் பண்ணி வைக்கவும். அந்த கணக்கை ரிப்போர்ட் செய்யவும். தேவையானால் போலீசில் புகார் அளிக்கவும். நமக்கு ஏன் பிரச்சனை என்று அவர்களே பிளாக் செய்தால் போதும் என்று நினைத்தால் அவர்கள் அது வேற வேற ஐடியில் இருந்து இதுபோல தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் அல்லது நம்மைப் போல இன்னொருவருக்கு தொந்தரவு கொடுப்பார்கள் அதனால் அவர்களுக்கு சட்டத்தின் மூலம் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
இது ஒரு சாதாரண விஷயம் இல்லை. குறிப்பாக குழந்தைகளை குறித்துக் பேசுவது மிகவும் கடுமையான குற்றம். அதனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கையை சந்திக்க வேண்டி வரும்.
மொத்தத்தில், கன்னிகா எடுத்த இந்த முடிவு ஒரு குடும்பத்தை மட்டும் பாதுகாக்கும் செயல் அல்ல; சமூக வலைதளங்களில் தவறாக நடக்கும் பலருக்கும் ஒரு எச்சரிக்கை. "பெண்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை, தைரியமாக எதிர்த்து நிற்க வேண்டும்" என்ற ஒரு வலுவான செய்தியையும் இது வெளிப்படுத்துகிறது.
-
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு














Click it and Unblock the Notifications