Kara Review: ‘கர’ பட கதை இதுதான்! பீரியட் பிலிம்ன்னு சொன்னாங்க, ஆனால்.. ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ
சென்னை: தனுஷ் நடித்தும், விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் வெளியாகியுள்ள கர படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பிரபல யூடியூப் விமர்சகர் ப்ளூசட்டை மாறன் அளித்த விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கதை என்ன சொல்கிறது?
"கர" படம் 1990களின் பின்னணியில் அமைந்துள்ளது. அப்போது உலக அளவில் நடந்த போர் சூழ்நிலை, பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு, விவசாயிகளின் பொருளாதார நெருக்கடி போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கதை நகர்கிறது. இந்தச் சூழலில், சின்ன சின்னதாக திருட்டு வேலை செய்து வாழும் மனிதராக தனுஷ் காட்டப்படுகிறார்.
ஒரு சம்பவத்தில் அதிகாரியை தாக்கி தப்பி ஓடும் அவர், காதலியுடன் ஆந்திரா சென்று ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கிறார். ஆனால் அந்த வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி, நேர்மையான வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் குடும்பம் எதிர்கொள்ளும் நெருக்கடி அவரை மீண்டும் பழைய பாதைக்கு தள்ளுகிறது.
டிராக்டர் கடன், வங்கி கடன், நிலம் ஜப்தி-இவை எல்லாம் சேர்ந்து பெரும் பணத் தேவையை உருவாக்குகிறது. தந்தையை தன் நிலத்தில் புதைக்க முடியாத நிலையும் கதைக்கு ஒரு சென்டிமென்ட் தருணத்தை கொடுக்கிறது. இதனால், கடனை அடைக்க வங்கி கொள்ளையில் இறங்கும் நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார். அதன்பின் போலீஸ் அதிகாரியுடன் நடைபெறும் பூனை-எலி விளையாட்டே கதையின் மையம்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
ப்ளூசட்டை மாறன் தனது விமர்சனத்தை தொடங்கியதிலேயே, "இது ஒரு பீரியட் படம் என்று சொல்லிக்கொண்டு வர்றாங்க... ஆனால் அந்த காலக்கட்டத்தை உணர்த்தும் வித்தியாசமும், டீட்டெய்லும் படத்தில் சரியாகவே இல்லை" என்று குற்றம் சாட்டுகிறார்.
90களில் நடக்கும் கதை என்று சொல்லப்பட்டாலும், அந்த காலத்தின் அரசியல், பொருளாதார சூழ்நிலை, மக்கள் வாழ்க்கை ஆகியவை ஆழமாக பிரதிபலிக்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார். ஈராக்-குவைத் போர், பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு போன்ற விஷயங்கள் வெறும் பின்னணி தகவலாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன; கதை சொல்லும் மையமாக மாற்றப்படவில்லை என்பது அவரது கருத்து.
கதையின் அடிப்படை மீது விமர்சனம்
படத்தின் மையக்கரு வங்கி கொள்ளை என்றாலும், அதற்கான திரைக்கதை விறுவிறுப்பாக இல்லை என்று அவர் கூறுகிறார்."வங்கி கொள்ளை நடக்கப் போகுது என்று முன்னதாகவே போலீசுக்கு தெரியும். ஆனாலும் அவர்கள் எடுக்கும் நடவடிக்கை மிகவும் சாதாரணமாக காட்டப்படுகிறது. அதில் எந்த சஸ்பென்ஸும், பதட்டமும் இல்லை" என்கிறார்.
மேலும், கதாநாயகன் மீண்டும் மீண்டும் திருட்டில் ஈடுபடுவதற்கான காரணங்கள் உணர்ச்சிகரமாக இருந்தாலும், அதை த்ரில்லர் ஸ்டைலில் மாற்றி காட்ட இயக்குனர் தவறிவிட்டார் என்று அவர் விமர்சிக்கிறார்.
லாஜிக் குறைகள்
ப்ளூசட்டை மாறன் குறிப்பிட்ட முக்கிய குறை-லாஜிக் பிரச்சனைகள்: "சின்ன விவசாயிகள் கூட வீட்டு வீடாக டிராக்டர் வாங்கி வைப்பது நம்ப முடியாத விஷயம்", "வங்கி அதிகாரிகளை கந்து வட்டிக்காரர்கள் மாதிரி காட்டுறது மிகைப்படுத்தலாக இருக்கிறது. கடன் வசூல் செய்யும் செயல்முறை நிஜத்துக்கு அருகில் இல்லை" இந்த விஷயங்கள் படத்தின் நம்பகத்தன்மையை குறைக்கின்றன என்று அவர் கூறுகிறார்.

கதாபாத்திரங்கள்
போலீஸ் அதிகாரியாக வரும் சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திரம் குறித்து, "அவர் ஒரு சீரியஸ் அதிகாரி மாதிரி இல்ல... சிரிப்பூட்டும் கேரக்டர் மாதிரி காட்டிருக்காங்க. வில்லன் போல் வெயிட்டான கேரக்டர் இல்லை" என்று கூறியுள்ளார்.
வங்கி அதிகாரி மற்றும் மற்ற கதாபாத்திரங்களும் ஒரே மாதிரி கருப்பும் வெள்ளையும் என்ற அளவில் மட்டுமே எழுதப்பட்டுள்ளன; யாருடைய கேரக்டரும் ஸ்ட்ராங்காக இல்லை என்பதும் அவரது கருத்து.
மெதுவான திரைக்கதை
படத்தின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அதன் வேகம் தான் என்று ப்ளூசட்டை மாறன் சொல்கிறார். "படம் முழுக்க டெட் ஸ்லோ... எப்போ முடியும் என்று தோன்றும் அளவுக்கு போர் அடிக்குது" என்று அவர் நேரடியாக கூறியுள்ளார்.
முதல் பாதியில் இருந்து கிளைமாக்ஸ் வரை, எந்த இடத்திலும் த்ரில் அல்லது சஸ்பென்ஸ் அதிகரிக்கவில்லை என்பதால், பார்வையாளர்கள் ஈர்க்கப்பட மாட்டார்கள் என்றே அவர் கூறுகிறார்.
எதிர்பார்ப்பு vs நிஜம்
"போர்த்தொழில் மாதிரி ஒரு வெற்றி படம் எடுத்த இயக்குனர் என்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு இந்த படம் செல்லவில்லை" என்று அவர் கூறுகிறார்.
அதாவது, இயக்குனரின் முந்தைய படத்தின் தரத்தை வைத்து பார்க்கும் போது, "கர" படம் ஒரு பின்னடைவு போல இருக்கிறது என்பதே அவரது மொத்த கருத்து.

ஒரே பாசிட்டிவ்
ப்ளூசட்டை மாறன், படத்தில் தனுஷின் நடிப்பை மட்டும் முழுமையாக குறை சொல்லவில்லை.
"தனுஷ் தன் வேலையை செய்திருக்கிறார். ஆனால் அவரை முழுமையாக பயன்படுத்தும் வகையில் காட்சிகள் இல்லை" என்ற வகையில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ப்ளூசட்டை மாறனின் முழு விமர்சனத்தை ஒரு வரியில் சொல்ல வேண்டுமெனில்: நல்ல கரு இருந்தும், விறுவிறுப்பில்லாத திரைக்கதை காரணமாக சலிப்பூட்டும் அனுபவமாக மாறிய படம் "கர" என்று சொல்கிறார்.
இந்த விமர்சனம் வெளியாகிய பிறகு, சமூக வலைதளங்களில் படம் குறித்து மீண்டும் விவாதம் தீவிரமடைந்துள்ளது. ஒருபக்கம் ரசிகர்கள் படம் நன்றாக உள்ளது எனக் கூறினாலும், மற்றொரு பக்கம் ப்ளூசட்டை மாறன் கூறிய குறைகளை ஏற்றுக்கொள்ளும் குரலும் அதிகமாகவே கேட்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications