மறைந்த ஹுசைன் ஆசையை நிறைவேற்றிய மாணவர்கள்.. மீண்டும் சிரித்த அந்த உருவம்! கண்கலங்கும் ரசிகர்கள்
சென்னை: புற்றுநோயால் இன்று மரணம் அடைந்த நடிகரும் கராத்தே வீரருமான ஹுசைனி இறக்கும் முன்பு தன்னுடைய ஆசையை அவருடைய மாணவர்களிடம் கூறியிருக்கிறார். அதை ஹுசைன் இறந்த பிறகு நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள். ஹுசைனின் உருவ சிலையை அவருடைய மாணவர்கள் திறந்து வைத்திருக்கிறார்கள்.
அரிதிலும் அரிதாகத்தான் ஒரு சில நோய்கள் சிலரை பாதிக்கிறது அதுவும் நமக்கு நன்கு தெரிந்த சிலருக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தி தெரியும்போது அதிர்ச்சி அடைகிறது. ஆனால் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நபர் இறந்து விடுவார் என்று தெரியும் போது அந்த விஷயம் அவருக்கு மட்டும் அல்லாமல் அவரை சார்ந்தவர்களுக்கும் நரக வேதனையை கொடுக்கும்.

அரிய வகை நோய்
அதுபோல அரியவகை ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகரும் புகழ்பெற்ற கராத்தே வீரருமான ஷிகான் ஹுசைனி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவிற்கு ரசிகர்களும் திரை உலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவர் இறப்பதற்கு முன்பு பேசிய பேட்டிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நிறைவேறாத ஆசை
அதுபோல சென்னையில் கராத்தே மற்றும் வில்வித்தை பயிற்சி கூடம் ஒன்றை நடத்தி வந்தார். புத்தா மீது தீவிரமான அன்பு கொண்ட அவர் புத்தா சேம்பர் ஒன்றையும் நிர்வகித்து வந்தார். தான் இறந்த பிறகு தன்னுடைய உடலை மூன்று நாட்கள் அந்த புத்தா சேம்பரில் வைத்திருக்க வேண்டும் என்று தன்னுடைய ஆசையை தெரிவித்திருந்தார்.
புத்தர் மீது காதல்
அதுபோல ஹுசேன் தன்னுடைய அம்மாவின் தலைமுடியை அந்த இடத்தில் பாதுகாத்து வந்தார். தன்னுடைய கால் முட்டியை தனியாக அங்கு வைத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். தன் எலும்புகளை வைத்து புத்தர் சிலை செய்வதற்காக பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக சொல்லி இருந்தார். ஆனால் கேன்சர் பாதிப்பு வந்ததால் அவருடைய கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.
ஹுசேன் கடைசி ஆசை
கடந்த இரண்டு வாரங்களாக அவர் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆரம்பத்தில் நான்காயிரம் வெள்ளை அணுக்கள் இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பே அதில் ஜீரோவாக மாறிவிட்டது. அதற்குப் பிறகு தொடர்ந்து அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டு சிகிச்சை அளித்துக் கொண்டே இருந்தனர்.
ஆசையை நிறைவேற்றிய மாணவர்கள்
அவருடைய மாணவர்கள் மருத்துவமனையில் அவருக்காக காத்திருந்தனர். ஆனாலும் நான் எப்போது இறந்தாலும் பரவாயில்லை என்னுடைய மாணவர்கள் எதை செய்ய வேண்டும் என்று நான் எல்லா விஷயத்தையும் சொல்லிக் கொடுத்து விட்டேன் என்று சொல்லி இருந்தார். அதுபோல தன்னுடைய கடைசி ஆசையாக தனது உருவ சிலையை தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் நிறுவுவதற்காக ஏற்பாடுகளை செய்துவிட்டு இறந்து போயிருந்தார்.
ஆழ்ந்த இரங்கல்
இன்று அவருடைய உயிர் உடலை விட்டு பிரிந்த பிறகு அவருடைய மாணவர்கள் அவர் ஆசைப்பட்ட மாதிரியே அவருடைய சொந்த ஊரில் அவர் உருவ சிலையை திறந்து வைத்திருக்கிறார்கள். அந்த சிலையில் தன்னுடைய இதயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உயில் எழுதி வைத்துவிட்டு ஹுசைன் மறைந்து இருக்கிறார். நடிகராகவும் பல மாணவர்களுக்கு மாஸ்டராகவும் இருந்த ஹுசைன் இறப்பு பலரையும் வருத்தம் அடைய செய்திருக்கிறது. ஆனாலும் அவர் தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்த பிறகும் தன்னம்பிக்கையாக பேசிக் கொண்டிருந்தது பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது. அவருடைய ஆன்மா சாந்தியடைய நாம் வேண்டிக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications