"கிறிஸ்துமஸை சந்திக்கும் கார்த்திகை.." த்ரிஷா பகிர்ந்த போட்டோ! இப்போது இணையத்தில் இதுதான் டிரெண்டிங்
சென்னை: தமிழ் திரைப்பட உலகில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம்வரும் த்ரிஷா இப்போது தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் போட்டோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். கார்த்திகை தீபம் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில் அவர் பகிர்ந்து இந்த போட்டோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர் திரிஷா. கடந்த 2002ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மவுனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் த்ரிஷா.

த்ரிஷா: அதன் பிறகு சாமி, கில்லி, திருப்பாச்சி என அடுத்தடுத்து இவர் நடித்த ஹிட் அடித்த நிலையில், தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவரானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் சினிமா துறைக்கு வந்து 22 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்தில் தான் சூர்யா 45வது பத்தின் ஷூட்டிங்கில் அதை அவர் கொண்டாடினார்.
இதற்கிடையே நடிகை த்ரிஷா இப்போது தனது இன்ஸ்டகிராம் தளத்தில் அலங்கரிக்கப்பட்ட வீட்டின் கதவின் படத்தைப் பதிவிட்டுள்ளார். அவரது இந்த போட்டோ இப்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. அதாவது கார்த்திகை தீபம் இப்போது கொண்டாடப்படும் நிலையில், கார்த்திகை தீப அலங்காரம் அதில் செய்யப்பட்டுள்ளது. வாசலில் இரண்டு அகல் விளக்குகளும் ஏற்றப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை: அதேபோல கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் கதவில் அலங்கரிக்கப்படும் Christmas Wreathம் அதில் இருக்கிறது. இந்த போட்டோவை பகிர்ந்துள்ள த்ரிஷா, கிறிஸ்துமஸை சந்திக்கும் கார்த்திகை என்றும் அதில் பதிவிட்டுள்ளார். த்ரிஷாவின் இந்த பதிவு இப்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் பலரும் த்ரிஷாவின் இந்த போஸ்ட்டிற்கு பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
அலங்காரம்: பொதுவாகவே கார்த்திகை மாதத்தில் இந்து மத வழக்கத்தின்படி வீட்டின் வாசலில் அகல் விளக்குகள் ஏற்றப்படும். திருக்கார்த்திகை தீபத்திருநாளான வெள்ளிக்கிழமை திருவண்ணாமலையில் பரணி தீபமும் மகா தீபமும் ஏற்றப்பட்டது. அதேபோல ஏசுவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் திருநாள் வரும் டிச.25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்காக இப்போது பலரது வீடுகளில் முகப்புகளில் கிறிஸ்துமஸ் ஸ்டாரும் அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications