நானெல்லாம் பிறந்து இருக்கவே கூடாது! விரக்தியில் செம்பருத்தி கார்த்திக்.. பீல் பண்ண வைத்த காரணம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் கார்த்திக் விரக்தியில் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிறது.
லைஃப்ல நான் பண்ணின பெரிய தப்பு நான் பிறந்தது தான் என்று கார்த்திக் கூறியிருக்கிறார்.
சினிமாவில் கதாநாயகனாக நடித்துவிட்டு மீண்டும் சீரியலுக்கு திரும்பி இருக்கும் கார்த்திக் தன்னுடைய வருத்தத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான கார்த்திக் ராஜ் முதல் சீரியலிலே ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்துவிட்டார். அதைத்தொடர்ந்து ஆபீஸ் சீரியலிலும் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வந்தது
ஒரு பக்கம் பாராட்டு என்றால் இன்னொரு பக்கம் நெகட்டிவர்ட்ஸ் இருக்க தானே செய்வார்கள். அந்த மாதிரி தான் கார்த்திக்குக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமான நெகட்டிவர்ட்ஸ் உருவாகி இருந்தனர். ஒரு பக்கம் இவருக்கு பெண்கள் ரசிகைகள் அதிகரித்து இருந்தனர். காரணம் இவர் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் கார்த்தி கேரக்டரில் பலருடைய மனதை கவர்ந்து விட்டார்.

இதைப் பொறுத்துக் கொள்ளாத நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளத்தில் இவருக்கு எதிராக தினமும் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வந்தனர். இவருக்கு நடிக்க வரவில்லை என்றும் முகத்தில் எந்த எக்ஸ்பிரஷனும் காட்டவில்லையே இவரை எப்படி பெண்களுக்கு பிடிக்கிறது என்பது பற்றியும் பல மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருந்தது. ஆனாலும் இவர் இந்த சீரியலில் இருந்த வரைக்கும் டிஆர்பி யில் செம்பருத்தி சீரியல் டாப்பில் வலம் வந்தது.
பொதுவாக டிஆர்பியில் சன் டிவி சீரியல்கள் தான் எப்போதும் இருந்து வரும் ஆனால் அதை முறியடித்த சீரியல் என்ற செம்பருத்தி சீரியலாக இருந்து வந்தது. இந்த சீரியல் பலரும் என்னதான் இருக்கிறது என்று கேட்டாலும் ஷபானா மற்றும் கார்த்தி உடைய காதல் கதை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்து விட்டது. அதனாலேயே இவருக்கு அதிகமான ரசிகர்கள் பேன்ஸ் பேஜ் தொடங்கி சமூக வலைத்தளத்தில் ஆதரவு கொடுத்து வந்தனர்.
அந்த நேரத்தில் தான் இவருக்கு இந்த சீரியல் அணியினரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடல் இவர் சீரியலை விட்டு வெளியேறி இருந்தார். அதற்கு பிறகு வேறு ஒரு நடிகர் வந்தாலும சீரியல் அந்த அளவிற்கு டி ஆர் பி யில் எகிறவில்லை. தன்னுடைய திறமையின் மூலமாக தான் புது திரைப்படத்தில் கமிட்டாகலாம் என்று காத்திருந்த கார்த்திக்கு அப்படி ஒன்று வாய்ப்பு கிடைக்காத காரணத்தினாலோ என்னவோ அவரே ஒரு திரைப்படத்தை தயாரித்து இருந்தார். அதற்கு ரசிகர்களிடம் உதவியும் கேட்டிருந்தார்.

செம்பருத்தி சீரியலில் மூலமாக இவரை பிடித்துப் போன ரசிகர்கள் இவருக்காக பணங்களை அனுப்பி உதவி செய்தனர். அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அந்த நேரத்தில் மீண்டும் ஜீ தமிழில் நடிக்க கார்த்திக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனால் தான் இப்போது கார்த்திகை தீபம் சீரியலில் இவர் கதாநாயகனாக மீண்டும் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதில் நீங்க லைஃப்ல பண்ணுன பெரிய தப்பு என்றால் என்ன சொல்வீங்க? என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதில் கூறிய கார்த்திக் நான் பிறந்திருக்கவே கூடாது.
நான் பிறந்த காரணத்தினால் தானே இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதாக இருக்கு, பிறக்காமல் இருந்திருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை தானே! யாரும் நம்ம கிட்ட எதுவும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க, நாம பண்ணுற எதையும் தப்பு என்று சொல்லி இருக்கவும் மாட்டாங்க என்று பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications