கார்த்திக் தொடர்ந்து 24 மணி நேரம் டப்பிங் பேசினாரு! அவர் அர்ப்பணிப்பு பெருசு! இயக்குனர் ராஜகுமாரன் ஓபன்
சென்னை: தமிழ் சினிமாவின் 'நவரச நாயகன்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் கார்த்திக், தனது வித்தியாசமான நடிப்புத் திறமையால் இன்றும் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பிற்குச் சரியாக வரமாட்டார் என்ற விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், ஒருமுறை ஒரு படத்திற்காகத் தொடர்ந்து 24 மணிநேரம் டப்பிங் பேசிச் சாதனை செய்த நிகழ்வு குறித்து பிரபல இயக்குநர் ஒருவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

நவரச நாயகன் கார்த்திக்
நடிகர் கார்த்திக் 1981-ஆம் ஆண்டு வெளியான 'அலைகள் ஓய்வதில்லை' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவரது முதல் படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தனது வசீகரமான நடிப்பால், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்கள் முன்னேறிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில், கார்த்திக்கும் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
தொடர் ஹிட் படங்கள்
'அலைகள் ஓய்வதில்லை' படத்திற்குப் பிறகு, பல படங்கள் தொடர் ஹிட் படங்களாக அமைந்தன. இவர் தனது சிறந்த நடிப்புக்காகப் பல விருதுகளை வென்றுள்ளார். குறிப்பாக, 'அக்னி நட்சத்திரம்' மற்றும் 'கிழக்கு வாசல்' போன்ற படங்களுக்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகள் (தெற்கு) உட்படப் பல முக்கிய விருதுகளைபெற்றவர்.
லேட் கம்மர் சர்ச்சை
நடிகர் கார்த்திக் மீது படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சிலர், படப்பிடிப்பிற்குச் சரியாக வரமாட்டார் என்ற குற்றச்சாட்டுகளை வைத்ததுண்டு. இயக்குநர் பாரதி கண்ணன் கூட, படப்பிடிப்பு கேன்சலாகி விட்டால் வாங்கிய அட்வான்ஸை கூடக் கார்த்திக்கிடம் இருந்து பெற முடியாது என்று ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
24 மணிநேரம் டப்பிங் சவால்
இந்தச் சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், கார்த்திக்கின் அர்ப்பணிப்பை நிரூபிக்கும் ஒரு சம்பவத்தை இயக்குநர் ராஜ குமரன் மனம் திறந்து பேசியுள்ளார். விக்ரமன் இயக்கத்தில் வெளியான வெற்றிப் படமான 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' திரைப்படத்திற்காகத்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இயக்குநர் ராஜ குமரன் பேசியதாவது:
"நடிகர் கார்த்திக் படப்பிடிப்பிற்குத் தாமதமாக வருவார் என்று சொல்வார்கள். ஆனால், எங்கள் படத்தில் நடிக்கும் பொழுது அப்படியெல்லாம் இருந்ததில்லை. இரண்டு நாட்கள் மட்டும் தான் அப்படி இருந்தார். படப்பிடிப்பிற்கு வந்துவிட்டார் என்றால், நடிப்பில் மிகவும் மும்முரமாக இருப்பார். 'படப்பிடிப்பிற்கு வந்துவிட்டு ஏன் பண்ண வேண்டும்?' என்று எல்லாம் அவர் கேட்டது கிடையாது. எவ்வளவு இறங்கி நடிக்க வேண்டுமோ அவ்வளவு இறங்கி நடிப்பார்."
"பொதுவாக ஒரு ஹீரோ இரண்டு அல்லது நான்கு நாட்கள் வந்து டப்பிங் பேசுவார்கள். அதுவும் அரை நாள் தான் பேசுவார்கள். ஆனால், நடிகர் கார்த்திக் 24 மணிநேரம் பேசினார்! டப்பிங்கிற்கு காலையில் 10 மணிக்கு வந்தார். சரி அவர் பேசும் வரை பேசட்டும் என்று நினைத்தோம்." "ஆனால், கார்த்திக் பேசுகிறார்... பேசுகிறார்... இரவு 10 மணிவரை டப்பிங் பேசினார். பாத்ரூம் போனார், சாப்பிடக் கேட்டார் கொடுத்தோம். டப்பிங் பேசிக் கொண்டே இருந்தார். வீட்டிற்குப் போகவே இல்லை. அடுத்த நாள் காலை 10 மணி வரை டப்பிங் பேசி, முழு படத்தையும் முடித்துக் கொண்டு தான் சென்றார்!" என்று கூறியுள்ளார்.
நடிகர் கார்த்திக்கின் இந்த அர்ப்பணிப்பு, அவர் தனது கதாபாத்திரத்திற்காக எவ்வளவு உழைப்பைக் கொடுப்பார் என்பதை உணர்த்துகிறது. ஒருபுறம் லேட் கம்மர் என்ற விமர்சனம் இருந்தாலும், தனது நடிப்பின் மீது அவர் வைத்திருக்கும் தீராத பற்றுதான், இன்றும் அவரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெறச் செய்திருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications