தமிழ் பசங்க அப்படிப்பட்டவங்க.. உருகி பேசிய "கார்த்திகை தீபம்”சீரியல் கதாநாயகி..இப்படி சொல்லிவிட்டாரே
தமிழ் பசங்க தான் கேரளா பொண்ணுங்களை ரொம்ப பாசமாக பாத்துக்குவாங்க என கார்த்திகை தீபம் சீரியல் கதாநாயகி கூறி இருக்கிறார்.
சென்னை: காதலிப்பதற்கு அழகு தேவை இல்லை நல்ல குணம் மட்டும் போதும் என்று கார்த்திகை தீபம் சீரியல் கதாநாயகி நடிகை அர்திகா கூறியிருக்கிறார்.
மலையாள நடிகையாக இருக்கும் நடிகை அர்திகா தமிழ் பசங்க தான் பொண்ணுங்களை நன்றாக பாத்துக்குவாங்க என்று கூறி இருக்கிறார்.
முதல் முதலாக தமிழில் கார்த்திகை தீபம் சீரியலில் நடிக்கும் நிலையில் தமிழ் ரசிகர்களின் மனதை கவரும் விதத்தில் நடிகை அர்திகா பல விஷயங்களை பேசி இருக்கிறார்.

கருப்பு அழகு
கார்த்திகை தீபம் சீரியலில் தீபா கேரக்டரில் நடிக்கும் அர்திகா நிஜத்தில் இந்த சீரியலில் வருவது போல கருப்பாக இருக்க மாட்டாராம். நிஜத்தில் இவர் கலராக இருந்தாலும் இந்த சீரியலுக்காக தான் இப்படி நடிக்கிறார் .ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் ரச்சிதா இப்படி தான் அறிமுகமானார். அதேபோல இப்போது இவரும் பாவாடை தாவணியில் இந்த சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார். ஒரு பாடகியாக இருக்கும் இவர் அழகு இல்லாமல் இருக்கிறார் என்று இவரை பின்னாடி வைத்துக் கொண்டு அழகாக இருக்கிறார் என அழகாக இருக்கும் ஒரு நடிகையை முன்பு வைத்து இவருடைய திறமை மறைக்கப்படுகிறது. இந்த சீரியலில் ஒரு சில எபிசோடுகளில் இவர் ரசிகர்களின் மத்தியில் அனுதாபங்களை பெற்றிருக்கின்றார்.

வாய்ப்பு கிடைக்க காரணம்
அர்திகா சுமார் நான்கு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்களில் இன்னும் வெளியாகாமல் தான் இருக்கின்றது. குறிப்பாக கார்த்திக் ராஜ் நடித்த பிளாக் அண்ட் ஒயிட் திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறாராம். இந்த நிலையில் இந்த சீரியலுக்கு இவருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது சேதுபட நடிகையான அபிதாதனாம். அபிதா இப்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டு இருந்தாலும், இந்த சீரியலின் வாய்ப்பு அவரால் தான் அர்திகாவுக்கு கிடைத்திருந்ததாம். அபிதாவும் அர்த்திகாவும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால் அர்திகாவுக்கு இந்த வாய்ப்பைப் பற்றி அபிதா தான் கூறி இருந்தாராம்.

சமுதாயத்தை புரிந்து கொள்ள முடிந்தது
அது மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடிக்கும் கார்த்திக் மூலமாகவும் இவருக்கு இந்த வாய்ப்பு நிரந்தரமாகி இருக்கிறதாம் . அர்திகா ஏற்கனவே கார்த்திக் உடன் மாதவி என்ற ஷார்ட் ஃப்லிம் மில் நடித்திருக்கிறாராம். இந்த ஷார்ட் பிலிம்யில் இவரை பார்ப்பதற்கும் இப்போது இந்த சீரியல் பார்ப்பதற்கும் அதிகமாக வித்தியாசம் இருக்கிறதாம் அந்த சீரியலில் படுமார்டன் பெண்ணாக வந்த இவர் இந்த சீரியலில் எப்படி ஒரு கேரக்டரில் நடித்து இருக்கிறார் என்பது பலருக்கும் பார்த்ததும் தெரிந்து கொள்ள முடியாத வகையில் தான் இருக்கிறதாம். ஆனால் இந்த சீரியலில் இவர் நடிக்கும் போது தான் கருப்பாக இருப்பவர்களுக்கு சமுதாயத்தில் எவ்வளவு அவமானங்களும், புறக்கணிப்புகளும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது என்று அவர் கூறியிருக்கிறார்.

தமிழ் பசங்க தான் பிடிக்குமாம்
இந்த நிலையில் தற்போது கார்த்திகை தீபம் சீரியலின் மூலமாக இளைஞர்களின் மனதை கவர்ந்த அர்திகா மேலும், பொதுவாக தமிழ் இளைஞர்கள் தான் கேரளா பொண்ணுங்களை குழந்தைகள் போல பாசமாக பார்த்துக்குவாங்க. நான் நிறைய இன்டர்வியூவில் பார்த்திருக்கிறேன். உங்களுக்கு எந்த மாதிரி பொண்ணுங்கள் பிடிக்கும் என்று கேட்கும் போது, அதிகமானோர் கேரள பெண்கள் என்று சொல்லும் போது, எங்களுக்கு சந்தோசமாக இருக்கும். எனக்கு எப்போதுமே தமிழ் பசங்கள பிடிக்கிறதுக்கு காரணம் இதுதான். அது மட்டும் அல்லாமல் காதலிப்பதற்கு அழகு தேவையே இல்லை. நல்லபடியா நம்மளை அவங்க பாசமா பாத்துக்கிட்டாலே போதும் என்று பேட்டியில் பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதிலும் ரசிகர்கள் பலருக்கும் இவர் இத்தனை நாட்களாக கேரளா பொண்ணு என்று தெரியாமல் தான் இருந்ததாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications