கதிர் ரொம்ப நல்லவர்தான்... எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு... ஆனா, கல்யாணம் நிக்கணும்!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் ஒரு புதுவித கதையா இருக்கு. காவல்துறை உதவி ஆணையர் வரும் கால கணவர்.
மாமனார் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி... ரொம்ப டிசிப்ளின் .எதிர்பார்க்கரவர். இவங்க வீட்டுக்கு மருமகளா வரப்போறவ கொலைகாரி மலர்.
பாலியல் கொடுமையில் இருந்து தப்பிக்க தற்காப்புக்கு மலர் கொலை செய்துட்டதா சொல்லிக்கறா.

மலர் கொலை உண்மையா
மலர் கொலை செய்தது உண்மையான்னு இன்னும் காமிக்கலை... என்றாலும், போலீஸ்னா ஒருவித பயத்தில் இருக்கும் மலரின் முகம் எப்போதும் வாட்டத்தில்தான் இருக்கு. தங்கை சுவாதிக்கு மட்டும்தான் இந்த உண்மை தெரியும்.

மாமனார் ராணுவ அதிகாரி
மலர் ஆசை ஆசையாய் கதிர் எதிர்பார்த்தபடி தன் காதலை கதிரிடம் சொல்லலாம் என்று அவனுடன் வெளியில் போயிடறா. அதாவது மலரும், மலரின் தங்கையும் இப்போது கதிரின் வீட்டில்தான் இருக்காங்க. தாய் மாமன் மகனால் ஆபத்து ஏற்பட்ட போது கதிர் அவளை காப்பாத்த குடும்பமே தங்கள் வீட்டுக்கு ரெண்டு பேரையும் அழைச்சுக்கிட்டு வந்துடறாங்க.

மாமனார் ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர்
மாமனார் கதிர் எங்கே .. மலர் எங்கேன்னு கேட்க யாருக்கும் தெரியலை. எப்படி இருக்கும் அந்த .ஸ்ட்ரிக்ட் ஆஃபீசருக்கு... வந்ததும் மகன் கதிரை விசாரிக்கறார். கேஸ் நடக்கும் இடத்துக்கு மலரை எதுக்கு அழைச்சுட்டு போனேன்னு அறிவுரையும் சொல்றார்.

மலரிடம் இப்போது
இப்போது மலரிடம் வருகிறார் ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர். வீட்டை விட்டு வெளியில போனா பெரியவங்க யார்கிட்டயும் சொல்லிட்டு போகணும்னு உங்க வீட்டுல பழக்கம் இல்லையா? அங்கே எப்படி வேணா இருந்துட்டு போங்க. இந்த வீட்டில் என் சொல்படிதான் எல்லாம் நடக்கணும்.சின்ன சின்ன விஷயத்திலும் கவனம் எடுக்கணும்.ஒழுங்கை கடைப்பிடிக்கணும் புரியுதான்னு கேட்கறார்.

பேசாமல் மலர் நிற்க
இது என்ன பழக்கம்...கேட்கும்போது பேசாம நிற்கறது. ஒண்ணு சரின்னு சொல்லு.இல்லையா இனிமே செய்யலைன்னு சொல்லுன்னு ஒரு அறிவுரையாத்தான் மீண்டும் சொல்றார்.சரிங்க மாமான்னு சொல்லிட்டு வந்த மலர் பயங்கர மன வேதனையில் ஷவரைத் திறந்து அப்படியே நிக்கறா.

கதிர் சுவாதியை
இதைப் பார்த்த கதிர் சுவாதியை கூப்பிட்டு அக்காவுக்கு தலையை துடைச்சு விடுன்னு சொல்றான்.அப்பா அப்படித்தான் மலர் ..எல்லாம் சரியா நடக்கணும்னு நினைப்பார்.தப்பா நினைச்சுக்காத... மனசை குழப்பிக்காதன்னு சொல்லிட்டு போறான்.

சுவாதி கல்யாணம் நிக்கணும்
சுவாதி நான் இந்த கல்யாணம் செய்துக்கணும்னா ஒண்ணு கதிர் போலீஸா இல்லாம இருக்கணும். இல்லை நான் கொலை செய்யாம இருந்திருக்கணும்.. முடியலைடி..கதிரை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு...ஆனா, இந்த கல்யாணம் நடக்கக் கூடாது சுவாதின்னு அழறா.












Click it and Unblock the Notifications