For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Katrin mozhi serial: பழமைகளை சேனல்கள் மீண்டும் புகுத்த பார்க்கின்றனவா?

Google Oneindia Tamil News

சென்னை: சமூகத்தில் மனிதர்களின் குறைபாடுகளை மையமாகக் கொண்டே சீரியல்கள் ஒளிபரப்புவது என்பதை செய்து வருகிறது விஜய் டிவி.

எங்காவது ஒரு மூலையில் பூத கண்ணாடி வைத்து பார்க்க வேண்டிய நிலையில் இருக்கும் இந்த குறைபாடுகளை பெரிதாக்கி அதை சீரியலாக ஒளிபரப்பி, மீண்டும் குற்ற உணர்ச்சிக்கும், மனக் குமுறலுக்கும் குறைபாடு உள்ளவர்களை உள்ளாக்குகிறதோ என்கிற எண்ணம் வருகிறது.

பெற்றவர்கள் குறைபாடு உள்ள குழந்தைகளை தூக்கி சுமக்கிறார்களே தவிர சுமையாக நினைப்பது இல்லை. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுதான் பழமொழியும் கூட!

சீரியல் பார்தி கண்ணம்மா

சீரியல் பார்தி கண்ணம்மா

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கறுப்பாக இருக்கும் கண்ணம்மா அம்மா இல்லாமல் சித்தியால் மட்டும் அல்ல, சித்திக்கு பிறந்த பெண் தனது தங்கையாலும் வெறுக்கப் படுகிறாள். சித்தியின் அம்மாவான பாட்டியும் வெறுக்கிறார். இவர்கள் எல்லாரும் போஷாக்குடன் வெள்ளையாக இருக்கிறார்கள். இவளை காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் பாரதி கூட ,அவளை வெறுக்கும் தனது அம்மாவிடம், கண்ணம்மாவின் மனசு அழகுன்னுதான் சொல்றான். கருப்பாக இருக்கும் பெண்கள் எப்படி எப்படியோ சாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மீண்டும் இவர்களை தான் கருப்பு என்கிற குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவது போலவே இருக்கிறது.

சீரியல் அரண்மனை கிளி

சீரியல் அரண்மனை கிளி

விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் அர்ஜுன் நடக்க முடியாதவன். இவன் பணக்காரன் என்பதால், அழகிய ஜானுவை கல்யாணம் செய்து வைத்தாலும், அவள் படிக்கவில்லை என்று இங்கு மாற்றி பழி போட்டு, அவளை வீட்டின் வேலைக்காரியாக நடத்துகிறார்கள். இதுவும் இங்கு குறைபாடாகவே பார்க்கப் படுகிறது.

தான் படிக்கவில்லை, பணக்காரி இல்லை என்பது இங்கு குறைபாடாக பார்க்கப்படுகிறது. என்றாலும்,, இந்த சீரியலில் சமூகத்தில் யாரையேனும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் படியான சம்பவங்கள் இருக்காது என்று திருப்தி கொள்ளலாம்.

சீரியல் காற்றின் மொழி

சீரியல் காற்றின் மொழி

விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் காது கேட்காத வாய் பேச முடியாத பெண். இவளை அப்பா இப்படி பிறந்ததினால் வெறுக்கிறார். பாட்டியும் அடியேய் அவன் முன்னாடி வராதேன்னு சொன்னா கேட்குறியான்னு திட்டறாங்க. எப்போதும் உன்னை திரும்பி பார்க்கமாட்டான் என்று பிள்ளைக்கு சப்போர்ட் பண்றாங்க பாட்டி.

காது கேட்காத வாய் பேச முடியாதவர்களின் வளர்ச்சிக்கு எத்தனையோ வழிமுறைகள் கண்டு, அவர்களும் வெற்றிகரமாக வாழ்கின்றனர். படிப்பு, வேலை என்று எந்த விதத்திலும் குறை இல்லை. அவர்களின் தன்மானத்தை உரசிப் பார்ப்பது போல இந்த சீரியல் ப்ரோமோ இருக்கிறது.

மட்டுமே மூன்று

மட்டுமே மூன்று

விஜய் டிவியில் மட்டுமே இப்படி மூன்று சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. காற்றின் மொழி ப்ரோமோ மட்டும் தற்போதைக்கு ஒளிபரப்பாகி வருகிறதது.சீரியல்கள் என்றாலே அபத்தம்..அதிலும் இப்படிப்பட்ட சீரியல்களை ஒளிபரப்புவது என்பது குறைபாடு உள்ளவர்கள் தன்மானத்தை உரசி பார்ப்பது போல இருக்கிறது. பழமையில் கூட இப்படிப்பட்ட நிலைமைகள் இருந்ததில்லை.

English summary
Vijay TV has been doing a series of serials aimed at the shortcomings of human beings in the community. Somewhere in a corner of a mirror, you see the flaws that are magnified and broadcasted, re-enacting the guilt and the mental impairment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X