Katrin mozhi serial: வாய் பேச முடியாத பெண்ணை இந்த பாடு படுத்தறாங்களே...!
சென்னை: விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் வாய் பேச முடியாத பெண்ணை ஆளாளுக்கு பாடு படுத்தறாங்க. பார்க்கவே பாவமா இருக்குது, பார்க்க பார்க்க பிபி எகிறுது.
காற்றின் மொழி சீரியலில் கண்மணி வாய் பேச முடியாத பெத்த அப்பாவுக்கே பிடிக்காத பெண்ணாக இருக்கிறாள். பாட்டியும் வழக்கம் போல வேலைக்காரி மாதிரி ட்ரீட் செய்யறதோடு கண்டபடி திட்டவும் செய்யறாங்க.
இதில் இந்த பெண் மீது ஒருத்தன் பாலியல் துன்புறுத்தல் ரீதியா வேற அணுகுவது போல காட்சி. சீரியலை பார்த்தால் ஒவ்வொரு எபிசோடும் பிபியை எகிற வைக்குது.

ஊடகங்கள் பேப்பர்கள்
இன்றைய காலக் கட்டத்தில் பேப்பரை நிம்மதியாக படிக்க முடியவில்லை... எதிலும் மனம் பதை பதைக்கும் பல விஷயங்கள். சரி என்று தொலைக்காட்சி பார்க்கலாம் என்று உட்கார்ந்தால் வரிசை கட்டிக் கொண்டு சீரியல்கள்.விதம் விதமான முகங்கள்..ஒரே மாதிரி கதைகள் என்று நேரத்தை அப்படியே விழுங்கிக் கொண்டு இருக்கின்றன.

மாற்றுத் திறனாளி
இது போதாது என்று மாற்றுத் திறனாளியை உண்மையான மாற்றுத்திறனாளியாக கொண்டாடாமல் அவமானப்படுத்தி, பெத்தவரே தன் கண்ணெதிரில் வர கூடாது என்று சொல்வது.. பாட்டி அவளை வெறுப்பது..வீட்டுக்கு வெளியில் தனியாக கொட்டகையில் தங்க வைத்து தாய் பதறுவது என்று நிறைய விஷயங்கள் மனதை கலங்க வைக்கிறது.

அப்பாவும் தம்பியும்
அப்பாவும் உடன் பிறந்த தம்பியும் கூட கண்மணியை துச்சமாக பார்க்கிறார்கள்.அப்பா தம்பியை தூக்கி வைத்து கொண்டாடுகிறார். ஆனால், அவன் தறுதலையாக சுத்துவதை கண்மணி சொல்லியும் அப்பா கண்மணியைத்தான் திட்டுகிறார்.கடைசியில் கண்மணிக்கு முன்னால் பிறந்த பெண் கல்யாணம் நடக்க வேண்டும் என்றால் கண்மணி வீட்டில் இருக்கக் கூடாது என்று ஈவு இரக்கமே இல்லாமல் சொல்கிறார்.

டிராயிங் கண்மணி
கண்மணி வரைந்த படங்களில் ஒன்றை தம்பி திருடிச் சென்று, ஒரு பணக்கார பெண்ணை தன் வலையில் விழ வைக்க தான் வரைந்ததாக நாடகமாடுகிறான். அந்த பெண்ணும் எதிர்பார்த்தபடி வலையில் விழுந்து படத்தை வாங்கிச் சென்று விடுகிறாள். கண்மணி நான் வரைந்ததை நீ வரைந்ததுன்னு சொல்லி இருக்கேன்னு சைகையால் கேட்க, தம்பி மரியாதை இல்லாமல் எடுத்தெறிஞ்சு பேசறான்.
இதை எல்லாம் பார்க்கவே கொடுமையாக பரிதாபமாக இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications