மகளுடன் சேர்ந்து கவிதாவின் ரகிட ரகிட ரகிட.. செம சூப்பர் ஆட்டம்!
சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் சீரியல் கதாநாயகிகளில் முன்னணி நடிகையாக இருந்த கவிதா சோலை ராஜன் இப்ப வரைக்கும் அதே அழகோடு தன்னுடைய தோளுக்கு மேல் வளர்ந்த குழந்தையோடு துள்ளல் ஆட்டம் போட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைத்து இருக்கிறார்.
அவருடைய 'ரகிட ரகிட' பாட்டுக்கு ரசிகர்களின் துள்ளாத மனமும் துள்ளுகின்றதாம். திரைப்படங்களில் 5 வயதிலேயே அஞ்சலி படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கு ஆனந்தம் சீரியல் மூலம் சின்னத்திரையில் பெரிய வாய்ப்பும் பெரிய ரசிகர்கள் பட்டாளமும் கிடைத்தது.
இந்த சீரியலுக்கு பிறகு இவர் பல சீரியல்களில் ஹோம்லியாகவே நடித்து வந்தார். இவர் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து இருந்தாலும் சில சீரியல்களில் நெகட்டிவ் கேரக்டரிலும் நடித்து இருக்கிறா.ர் ஆனால் இரண்டுமே இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறது.

எப்போதும் டான்ஸ்தான்
தற்போது இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில் பலர் கவர்ச்சியை காட்டி முன்னேறிக் கொண்டிருந்தாலும் இவர் இன்னைக்கும் அதே பழைய ஹோம்லியான கவிதாவாக தான் வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது இந்த டைம்ல இவர் வீட்டில் இருக்கும்போது டிக் டாக் வீடியோ எடுப்பதிலேயே தனது முழு நேரத்தையும் செலவழித்து இருக்கிறார்.

வைரல் வீடியோஸ்
இப்போது அது தடை செய்யப்பட்டதால் அந்த வீடியோக்களை அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அவருடைய வீடியோக்களை பார்த்ததும் ரசிகர்கள் உச்சுக் கொட்டி புகழ்ந்து வருகிறார்கள். ஆனந்தத்தில் வந்த அதே அழகோடு இன்னும் இருக்கிறீர்களே என்று பல கேள்விகளைக் கேட்டு வருகிறார்கள். அதற்கு அவர் அது எனக்கு இறைவன் கொடுத்த வரம் என்று கூறி சிரிக்கிறார்.

கரு கரு தலைமுடி
அது மட்டுமல்ல அவருடைய நீன்ட கரு கரு முடி யும் இவருக்கு பிளஸ் பாயிண்டு தான். அவரை போலவே அவருடைய மகளுக்கும் நீண்ட முடி இருக்கிறது. இருவரும் சேர்ந்து அவ்வப்போது செய்த டிக் டாக் வீடியோக்களை போட்டுக் கலக்கிக் கொண்டுள்ளனர். லேட்டஸ்டாக போட்ட ஒரு வீடியோவில் அம்மாவும், பொண்ணும் அசத்தலாக ஆடியுள்ளனர்.

மகளுடன் சூப்பர் டான்ஸ்
இருவரும் சேர்ந்து ஆடிய ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் கவிதாவா இது , இவருக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கிறதா என்றும் ஆச்சரியப்
பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர் முன்னணி நடிகர்களான அஜித்துடன் முகவரி படத்தில் நடித்திருப்பது மறக்க முடியாத தருணம் என்று கூறியிருக்கிறார் இப்ப வரையிலும் அஜித்தை இவர் ரோல் மாடலாக தான் வைத்திருக்கிறாராம். இன்னுமும் அவருடன் இணைந்து நடிக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருக்கிறாராம்.

திருப்பம் தந்த ஆனந்தம்
ஆனந்தம் சீரியலில் நடிக்கும் போது இவருக்கு அந்த கதை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இந்த சீரியலில் நடிக்கவில்லை என்று அழுது கொண்டு கூறியிருக்கிறா .ஆனால் அந்த கேரக்டர் இப்போது இவ்வளவு பிரபலமாகும் என்று அப்போது எனக்கு தெரியவில்லை. நல்ல வேளை நல்ல ஒரு வாய்ப்பை இழந்து பார்த்திருக்கிறேன் ஆனால் அது நடக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

பாசக்கார ரசிகர்கள்
சீரியல்களை போலவே இவருக்கு இன்ஸ்டாகிராமிலும் பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக இவர் அப்பப்போ போடும் ஹோம்லியான போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது. அதிலும் தான் இப்போது போட்ட ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் மறுபடியும் மறுபடியும் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கிறதா என்று ஆச்சரியம் மாறவில்லையாம். லாக்டோனையும் கூட ஆக்கப்பூர்வமாக செலவிட்டு கொண்டிருக்கிறாராம் கவிதா.

நிலாவின் வருகை
சரி அதை விடுங்க கவிதாவின் அற்புதமான நடிப்பைக் காண ஒரு அருமையான சான்ஸ் வந்திருக்கு. அவர் நடிப்பில் உருவாகி சன் டிவியில் வெளியாகியுள்ள நிலா தொடர் திங்கள்கிழமை முதல் மக்களுக்காக ஒளிபரப்பாகவுள்ளது. இதை தனது இன்ஸ்டாகிராமில் சந்தோஷமாக பதிவு செய்துள்ளார் கவிதா. திங்கள்கிழமை 7ம் தேதி முதல் பிற்பகல் 12 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறதாம்.. கண்டு மகிழுங்கள் கவிதாவை.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications