குழந்தை குறித்து மகிழ்ச்சியாக பேசிய கயல் சைத்ரா ரெட்டி.. ஆனால் கடைசியில் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சைத்ரா ரெட்டி தன் குழந்தை பற்றி மகிழ்ச்சியாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். சைத்ரா ரெட்டிக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.
நடிகை சைத்ரா ரெட்டி சீரியலில் மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். சோசியல் மீடியா பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்த முகமாக இருக்கும் சைத்ரா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் பல வருடங்களாக நடித்து வருகிறார். இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான "கல்யாணம் முதல் காதல் வரை" என்ற சீரியல் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமானார். அதற்கு முன்பு கன்னட சீரியலில் சைத்ரா நடித்திருந்தாலும் இவருக்கு தமிழில் முதல் சீரியலே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துவிட்டது.

சைத்ரா நடித்த சீரியல்
கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிகை பிரியா பவானி சங்கர் இதுதான் ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அவர் அந்த சீரியலில் இருந்து பாதியில் விலகிவிட்டார். அதற்கு பதிலாக சைத்ரா ரெட்டி சீரியலில் அறிமுகமானார். முதல் சீரியல் சில மாதங்களில் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து வில்லியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சைத்ராவிற்கு ஜீ தமிழில் ஒளிபரப்பான "யாரடி நீ மோகினி" சீரியல் நல்ல அடையாளத்தை கொடுத்தது.
யாரடி நீ மோகினி சீரியல் வில்லி
வில்லியாக இருந்தாலும் நாங்கள் ரசிப்போம் என்று இவருக்கு அதிகமான சப்போர்ட் கொடுத்து வந்தனர். அந்த சீரியலும் சில வருடங்களாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் அந்த சீரியல் முடிவடைந்த சமயத்தில் சன் டிவியில் இருந்து இவருக்கு வாய்ப்பு வந்தது. சன் டிவியில் ப்ரைம் டைம் சீரியல் என்றதும் இவரும் ஓகே சொல்லிவிட்டார். தொடர்ந்து சீரியலில் வில்லியாக நடிக்க வேண்டும் என்று ஆசையோடு இருந்த சைத்ராவிற்கு கயல் சீரியல் ஒரு பெரிய அடையாளத்தை கொடுத்து விட்டது.
கயல் சீரியல் நடிகை
இப்போது கயல் சீரியல் மூலமாக பல குடும்பங்களில் மகளாக கலக்கிக் கொண்டிருக்கிறார். கயல் சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கிறது. இந்த சீரியல் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் கிடைக்கிற கேப்பில் சினிமாவிலும் அஜித்துடன் "வலிமை" திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் முத்தம் கொடுத்தது போல இவர் எடுத்த புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பேசப்பட்டது.
நடிகை சைத்ரா ரெட்டி பேட்டி
நடிப்பு, போட்டோ சூட் என்று ஒரு பக்கமாக சைத்ரா பிசியாக இருக்கும் நேரத்தில் ராகேஷ் என்பவரை காதலித்து கடந்த 2000 ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இவரிடம் குழந்தை குறித்து எல்லோரும் கேட்டு வருகின்றனர். இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசி இருந்தார். அதில் அவர் பேசும்போது "எல்லோருமே குழந்தை எப்போது? குட்டி சைத்து எப்போ வர போறாங்கன்னு? எல்லாரும் கேக்குறாங்க.
மகிழ்ச்சி செய்தி
நாங்களும் வரும்போது வரட்டும் என்று காத்திருக்கிறோம். ஆனால் எப்படியும் இரண்டு வருடத்திற்குள் ஒரு குட்டி சைத்து வந்துருவாங்க. குழந்தை என்றால் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? எனக்கும் ரொம்பவும் பிடிக்கும். என்னுடைய கணவர் குடும்பத்தினரும் குழந்தை குறித்து கேட்டு கொண்டுதான் இருக்கிறாங்க. ஆனால் நமக்குன்னு சில கமிட்மெண்ட் இருக்கிறது அதையும் பார்த்துக் கொள்ள வேண்டுமே என்று சிரித்தபடியே அந்த பேட்டியில் சைத்ரா பேசியிருக்கிறார்.
தோழியின் வளைகாப்பு
ஜீ தமிழில் சைத்ரா நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த சீரியலில் நடித்த நக்ஷத்திரா, ரேஷ்மா மற்றும் ஷபானா உடன் நெருங்கிய நட்பாக இருந்தார். சைத்ரா மற்றும் நக்ஷத்திரா இருவரும் தான் யாரடி நீ மோகினி சீரியல் நடித்துக் கொண்டிருந்தனர். அந்த சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது தான் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இவர்கள் எல்லோருமே திருமணம் செய்து இருந்தாலும் நக்ஷத்திரா மட்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அதுபோல நக்ஷத்திராவின் வளைகாப்பை சைத்ரா தான் முன் நின்று நடத்தி வைத்திருந்தார். அதோடு நக்ஷத்திரா கர்ப்பமாக இருக்கும்போதும் தோழிகள் எல்லோரும் சேர்ந்து நடித்த போட்டோ சூட் புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆனது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications