சன் டிவி கயல் சீரியல் நடிகை தற்கொலை.. வீடியோ காலில் நடந்த பிரச்சனை! அதிர்ச்சி சம்பவம்
சென்னை: சென்னையில் நடந்த இந்த சம்பவம், சின்னத்திரை ரசிகர்களை மட்டும் இல்லாமல், பலரையும் உள்ளுக்குள் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கயல் சீரியலில் நடித்து வந்த நடிகை சுபாஷினி திடீரென உயிரிழந்த செய்தி பரவியதுமே, "இப்படி எப்படி நடந்துச்சு?" என்ற கேள்விதான் எல்லோரிடமும் எழுந்தது.
ஸ்ரீலங்காவை சேர்ந்த சுபாஷினி, தனது கனவுகளை பிடித்துக் கொண்டு சென்னை வந்தவர். சின்னத்திரையில் ஒரு நல்ல இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் போராடி வந்தார். அந்த முயற்சிக்குப் பலனாக, சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
வெளியில் பார்த்தால் ஒரு சாதாரண சீரியல் நடிகை மாதிரி தான் தோன்றுவார்... ஆனால் அவருக்குள் எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும், எவ்வளவு போராட்டங்கள் இருந்திருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

நேற்று வரை பேசினவர்... இன்று இல்லை
சம்பவம் நடந்த நாளுக்கு முன்புவரை சுபாஷினி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், ஒரு குடும்ப பிரச்சனை... ஒரு மன அழுத்தம்... தவறான நிமிடம்... அதுவே அவருடைய வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது.
அவரது கணவருடன் நடந்த வீடியோ கால் பேச்சின் போது ஏற்பட்ட தகராறு தான் இந்த துயர முடிவுக்குக் காரணம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செய்தி வெளியானதுமே சினிமா வட்டாரமும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
ஒரு வாழ்க்கையை எடுத்துடுச்சு
இது சுபாஷினியின் கதை மட்டும் இல்லை. இன்றைக்கு பலரின் வாழ்க்கையிலும் இதே மாதிரி சூழல்கள் வருகிறது. மன அழுத்தம், குடும்ப பிரச்சனை, தனிமை... இவையெல்லாம் சேரும்போது சிலர் அந்த ஒரு நிமிஷத்தில் தவறான முடிவை எடுக்கிறார்கள். ஆனா உண்மையில், அந்த ஒரு நிமிஷத்தை கடந்து விட்டால் வாழ்க்கை மாறிவிடும்.
யாரும் இப்படிச் சிந்திக்க கூடாது
ஒரு விஷயம் நிச்சயம் சொல்லிக்கொள்ள வேண்டும்,எந்த பிரச்சனையும், உயிரை விட பெரியதில்லை. இன்று சண்டை வந்தவரே நாளைக்கு நம்மை தேடிப் பேசலாம். இன்று முடியாத மாதிரி தோன்றும் விஷயம் நாளைக்கு சரியாகலாம். இன்று நம்மை புரியாதவர்கள் நாளைக்கு புரிந்து கொள்ளலாம், ஆனா உயிர் மட்டும் திரும்பி வராது.

உதவி கேட்பது தவறல்ல
மனம் கஷ்டமாக இருந்தால் அதை உள்ளே வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. நண்பர்கள், குடும்பம், அல்லது நம்பிக்கை உள்ள யாரிடமாவது பேசலாம். சில நேரங்களில் ஒரு பேச்சே வாழ்க்கையை காப்பாற்றி விடும்.
சுபாஷினியின் நினைவுகள்
சின்னத்திரையில் இன்னும் பெரிய அளவில் வர வேண்டியவர்... இன்னும் பல கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர வேண்டியவர்... அந்த பயணம் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டது என்பது தான் வருத்தம். அவரை பார்த்து ரசித்தவர்கள் இன்று ஒரே கேள்வி தான் கேட்கிறார்கள். "இவ்வளவு நல்லா இருந்த வாழ்க்கை... ஏன் இப்படியா முடிஞ்சது?"
இந்த சம்பவம் ஒரு செய்தி மாதிரி கடந்து போகக்கூடியது இல்லை. இது ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவூட்டல் தான். எவ்வளவு பிரச்சனை இருந்தாலும்... பேசுங்க, பகிருங்க... ஆனால் இப்படிப் பட்ட முடிவை மட்டும் எடுக்காதீங்க. உயிர் இருக்கிறதுனால தான் எல்லாம் சரி செய்ய முடியும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications