நடிப்புக்காக உயிரையே பணயம் வைத்த சைத்ரா..யாரும் இதை முயற்சி பண்ணாதீங்க.. கால், கழுத்து பார்த்துமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.

இவர் கயல் சீரியலில் ஒரு எபிசோடுக்காக உயிரை பணயம் வைத்து நடித்திருக்கிறார். தற்போது அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

Kayal Serial Making Video Now Actress Chaitra has shared the video on his Instagram

அதைப் பார்த்த பலரும் பதறிப் போய் இருக்கின்றனர். ஆனால் சைத்ரா கூலாக இதை யாரும் முயற்சி பண்ணாதீங்க என்று அட்வைஸ் மட்டும் கொடுத்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக தமிழ் சீரியலில் அறிமுகமான நடிகை சைத்ரா ரெட்டி முதல் சீரியலிலே பிரியா கேரக்டரில் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த சீரியலில் ஆரம்பத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். அவருக்கு தொடர்ச்சியாக சினிமா வாய்ப்புகள் வர இந்த சீரியலை விட்டு விலகி அவருக்கு பதிலாக நடிகை சைத்ரா ரெட்டி நடித்திருந்தார்.

இந்த சீரியலில் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்த சைத்ராவுக்கு வில்லியாக நடிக்க வேண்டும் என்றுதான் அதிகமான ஆசை இருந்ததாம். அதற்காக இவர் முயற்சி எடுக்கத் தொடங்கிய நேரத்தில் முதல் முறையாக இவருக்கு யாரடி நீ மோகினி சீரியலில் வில்லி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவருடைய உயரத்திற்கும் உடல் அமைப்புக்கும் வில்லியாக இருந்தாலும் என்னால் மாஸ் காட்ட முடியும் என்று தன்னுடைய நடிப்பை சிறப்பாக காட்ட வில்லியாக இருந்தாலும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்து விட்டனர்.

வீட்டில் இருக்கும் பெண்கள் இவரை திட்டி தீர்த்தாலும், இளைஞர்கள் இவருடைய இன்ஸ்டாகிராம் ஐடியை தேடி அவருக்கு ஃபாலோ ரெட்யூஸ்ட் கொடுத்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் சன் டிவியில் கயல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கயல் சீரியலில் கதாநாயகியாக களம் இறங்கிய சைத்ராரெட்டி இப்போது வேற லெவலில் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறார். நடிகர் அஜித்தோடு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிப்பில் பிசியாக இருக்கும் நடிகை சைத்ரா கயல் சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் வாங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கயல் சீரியலில் கயலை கௌதம் கடத்தி தூக்கு போட்டு கொலை செய்வது போல சீன் அமைந்திருக்கும். அப்போதும் எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோவை சைத்ரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அதில் ஃபேனில் இவருடைய கழுத்தில் தூக்கு கயிறு கட்டி தொங்க விட்டிருப்பது போன்றும், காலில் கீழே ஐஸ் பாரில் நிற்க வைத்திருப்பது போன்று எடுக்கப்பட்டிருக்கிறது. நிஜத்தில் இவர் ஐஸ் பாரில் நின்று கொண்டு தவித்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிகமான ரசிகர்கள் தயவு செய்து இந்த மாதிரி எல்லாம் முயற்சி செய்யாதீர்கள் என்று கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+