திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. அதுவும் இத்தனை கோடி! விஜய் டிவியில் அதிரடி
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் அப் என்ற நிகழ்ச்சியில் முதலீட்டாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அதோடு அந்த நிகழ்ச்சியில் சாதிக்க துடித்துக் கொண்டிருக்கும் தொழில் முனைவர்களுக்கு கீர்த்தி சுரேஷ் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புதியது புதியதாக தொடங்கி வருகிறது. மற்ற மொழிகளில் ஒளிபரப்பாகி ஹிட்டான நிகழ்ச்சிகளை பட்டி டிங்கரிங் பண்ணி தமிழில் ஒளிபரப்பு செய்து இளைஞர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். அந்த வரிசையில் சமீபத்தில் ஸ்டார்ட் அப் சிங்கம் என்ற நிகழ்ச்சி ஒன்று தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வித்தியாசமான பொருட்களை கண்டுபிடித்தவர்கள் அல்லது தயாரித்தவர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டாளர்களை பெறும் நிகழ்ச்சியாக தான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தங்களுக்கு திறமை இருந்தாலும் அதை மேலும் மெருகேற்றுவதற்கு வாய்ப்பு இருக்கும் இளைஞர்களுக்கும், தொழில் முனைவோர்களும் கலந்து கொள்ளும் வகையில் இருக்கிறது.
ஏற்கனவே உலகம் முழுவதும் பிரபலமான ஸ்டார் பேங்க் என்ற நிகழ்ச்சி ஹிந்தியில் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. அதே போன்ற நிகழ்ச்சி தான் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் கீர்த்தி சுரேஷ் கலந்து முதலீட்டாளராக கொண்டிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொழில் முனைவோர்களுடன் பிசினஸ் டீலிங் செய்து இருக்கிறார். அதாவது இந்த வாரத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பொருள்களை வாங்கி பல கம்பெனிகளுக்கு பொருள்களை அனுப்பும் பிசினஸ் செய்வதாக சில இளைஞர்கள் முன் வந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு முதலீட்டாளராக வந்த கீர்த்தி சுரேஷ் அது நல்ல ஐடியா என்று ஏற்றுக்கொள்கிறார். பிறகு அவர்கள் 100 கோடி இதற்கு வால்யூ என்று அந்த இளைஞர்கள் சொல்கிறார்கள். அதற்கு கீர்த்தி சுரேஷ் இது எனக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. என்னால் அவ்வளவு கொடுக்க முடியாது என்று 60 லட்சத்தில் பிசினஸ் டீலிங் முடித்திருக்கிறார்.
விஜய் டிவி சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகர்.. கதையில் ஏற்பட்ட திருப்பம்.. இவருக்கு பதில் இவரா?
அப்போது அந்த தொழில் முனைவோர்கள் எங்களுக்கு இது குறைவான அமௌண்டாக இருந்தாலும் கீர்த்தி சுரேஷின் வேல்யூ எங்களுக்கு தெரியும் அதனால் நாங்கள் இதற்கு சம்மதிக்கிறோம் என்று அவர்களும் இதற்கு உடன்பட்டு இருக்கிறார்கள். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பது வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் முழுமையாக காட்டப்படும். ஆனால் இதுபோல தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையோடு இருக்கும் இளைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சி வர பிரசாதம் என்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள். அதுபோல சினிமாவில் நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்திருப்பதும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications