விஜய் டிவி சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகர்.. கதையில் ஏற்பட்ட திருப்பம்.. இவருக்கு பதில் இவரா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகர் திடீரென மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுபோல அந்த சீரியலில் கதைக்களம் மாறி இருக்கிறது. இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
பொதுவாக சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது சர்வசாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான். பொதுவாக ஒரு சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சில நடிகர்களால் தொடர்ந்து அந்த கேரக்டரில் நடிக்க முடியாமல் போய்விடுகிறது. முக்கியமாக கதாநாயகன், கதாநாயகி அந்த சீரியலில் இருந்து விலகும் போது டிஆர்பி அடி வாங்குகிறது.

ஆனாலும் தவிர்க்க முடியாத காரணங்களால் சிலர் வெளியேற வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதுபோல துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்களும் திடீரென்று விலகி விடுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது பொன்னி சீரியலில் திடீர் மாற்றம் நடந்திருக்கிறது. பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடிகை வைஷ்ணவி நடித்து வருகிறார். அதுபோல அவருக்கு ஜோடியாக கதாநாயகனாக சபரி நடித்திருக்கிறார்.
இந்த சீரியலில் கதாநாயகி பொன்னி ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் அழுது கொண்டு இருந்தார். ஆனால் இப்போது அந்த சீரியலில் கதை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தன்னை பற்றி குற்றசாட்டுகளை தைரியமாக குடும்பத்தினர் முன்பு நிரூபித்து விட்டு வீட்டை விட்டு சுயமரியாதைக்காக வெளியே சென்று இருக்கிறார்.
ஆனால் கதாநாயகி எங்கே போனார் என்பது தெரியாமல் கதாநாயகன் தேடிக் கொண்டிருக்கிறார். சிறுவயதிலேயே பொன்னிக்கும் சக்திக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இருவருடைய அப்பாவும் பேசி வைக்கிறார்கள் ஆனால் சக்தியின் அம்மா பொன்னியை திருமணம் செய்து வைப்பதற்கு சம்மதிக்காமல் இருக்கிறார்.
அதுபோல சக்தி ஒரு பெண்ணை காதலிக்கிறார் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க போகும்போது எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் நின்றுவிடுகிறது. பிறகு பொன்னியை சக்தி தன்னுடைய அப்பாவின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணத்திற்கு பிறகு பொன்னியை புரிந்து கொண்டு சக்தி அவரை காதலிக்கிறார். ஆனால் சக்தியின் அம்மா பொன்னியை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார். இந்த நிலையில் எப்படி தன்னுடைய மாமியாரின் மனதை மாற்றினார்? தன்னை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு அவருடைய பதிலடி என்ன என்பதுதான் கதையாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் பொன்னியின் அப்பாவாக நடித்து வந்த நடிகர் திடீரென மாற்றப்பட்டு இருக்கிறார். அதாவது பொன்னியின் அப்பாவாக சீரியலின் ஆரம்பத்தில் நடிகர் அழகு நடித்து வந்தார். இப்போது அவருக்கு பதிலாக நடிகர் வின்சென்ட் முத்தையா நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே பொன்னி சக்தியின் வீட்டை விட்டு கிளம்பி போயிருக்கிறார்.
இந்த நிலையில் இனி கதை எப்படி பயணிக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். அது போல இப்போது விஜய் டிவியில் மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. அதில் பொன்னி சீரியல் மற்றும் கண்மணி அன்புடன் சீரியல் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிலையில் இனி பொன்னியின் அப்பாவால் பொன்னியின் வாழ்க்கையில் என்ன மாற்றம் நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications