ஜம்முன்னு வாழுற பிரபலம்.. நடிகைகள் பாவம்.. சிம்ரன் சரியான முடிவு.. கீர்த்தி சுரேஷ் கரெக்ட்: சேகுவேரா
சென்னை: கீர்த்தி சுரேஷின் திருமணம் பிரம்மாண்டமாக நடக்கட்டும். ஆனால் அந்த பிரம்மாண்டத்தை விற்காமல் இருந்தால் போதும். திருமணம் என்பது தனிப்பட்ட நிகழ்வு. அதையும் வியாபாரமாக்குவது இப்போதெல்லாம் டிரெண்டாகிவிட்டது" என்று சேகுவேரா தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷூக்கு திருமணம் நடக்க போகிறது.. தன்னுடைய வருங்கால கணவரை 15 வருடங்கள் காதலித்ததாக சொல்லி உள்ளார். இதை 2 வருஷம் முன்னாடியே இவர் சொல்லியிருக்கலாமே என்றுதான் நினைக்கிறேன்.

காரணம், நடிகைகளில் அதிகமாக கிசுகிசுக்கப்பட்ட முக்கியமான நபர் கீர்த்தி சுரேஷ்.. தன்னுடைய காதலை முன்கூட்டியே சொல்லியிருந்தால், பல சர்ச்சைகளை தவிர்த்திருக்கலாம். இப்போதைக்கு அவரிடம் போதுமான படங்கள் இல்லை.. மார்க்கெட்டும் இல்லை. ஒருகட்டத்துக்கு மேல் விஜய் படங்களை எதிர்பார்த்து காத்துட்டு இருந்தாங்க.
திரிஷா தேர்வு: லியோ படத்தில்கூட, திரிஷா ரோலில் முதலில் நடிக்க வேண்டியிருந்தது கீர்த்தி சுரேஷ்தானாம். ஆனால், 20 வயது மகனுக்கு அம்மாவாக நடிக்க விரும்பல. அந்த நேரம் குந்தவை கேரக்டர் பாப்புலாரியாட்டியால் திரிஷாவுக்கு வாய்ப்பு வந்துள்ளது.
ஆனால், கடைசிவரை கீர்த்தி சுரேஷால், பெரிய ஹீரோயினாக பரிணமிக்க முடியவில்லை.. ஸ்டார் வேல்வியூ இல்லாமல் போயிட்டாங்க.. அதனாலகூட இந்த திருமண முடிவை அவர் எடுத்திருக்கலாம். ஆனால் என்னைக்கேட்டால் இது நல்ல முடிவுதான்.
நடிகை சிம்ரன்: ஏனென்றால், நடிப்புக்காக, அழகு குலைந்துவிடும் என்பதற்காக திருமணத்தை தள்ளிப்போடக்கூடாது.. இந்த விஷயத்தில் சிம்ரன் சூப்பர். தனிப்பட்ட வாழ்க்கை என்பது அனைவருக்குமே தேவையான ஒன்று..
சந்திரமுகி படத்தில் அவங்கதான் முதலில் நடிக்கவிருந்தது.. அது மகப்பேறு நேரம் என்பதாலும், படத்தில் டான்ஸ் ஆட வேண்டியிருப்பதாலும், குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று சிம்ரன் தவிர்த்துவிட்டாராம். டைரக்டர் பி.வாசுவே இதை பலமுறை சொல்லியிருக்கார். எவ்வளவோ சிம்ரனை கேட்டுப்பார்த்தும்கூட, சந்திரமுகியில் நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம். அந்தவகையில் தாய்மைதான் முக்கியம்னு சிம்ரன் முடிவெடுத்தார்.
நடிகர்கள் திருமணம்: நடிகர்களை பாருங்க.. யாராவது கல்யாணம் ஆகாமல் இருக்காங்களா? 1, 2, என கல்யாணங்களை செய்துகொண்டு, ஜம்முனு வாழறாங்க. நடிகைகள்தான் பலரிடம் வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள்.. நீண்ட காலம் இவர்களால் சினிமாவில் ஹீரோயினாகவும் வலம்வர முடியாது. எனவே, சினிமாவுக்காக சொந்த வாழ்க்கையை நடிகைகள் தியாகம் செய்ய கூடாது
கீர்த்தி சுரேஷ் தொழிலதிபரை திருமணம் செய்ய போகிறார்.. பல நடிகைகளுக்கு, தொழிலதிபர்கள்தான் புகலிடம் தந்து கொண்டிருக்கிறார்கள். இது அந்த காலத்திலிருந்தே நடக்கிறது. எப்படித்தான் தொழிலதிபர்கள் நடிகைகளிடம் மட்டும் சிக்குகிறார்களோ தெரியல.
நடிகை மேனகா: ஆனால், மேனகாவை விட மிகப்பெரிய அளவில் நடிகையானவர் கீர்த்தி சுரேஷ்.. மகளுக்கு மேனகா திருமணம் செய்ய போவது நல்ல விஷயம்தான்.. பல தாய்க்கு தன்னுடைய மகள்கள் சினிமாவில் நடிச்சிட்டே இருக்கணும்னு ஆசை.. ஆனால் இதுபோன்றவர்களுக்கு மத்தியில், மேனகா தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து பார்க்க நினைப்பது நல்ல விஷயமே.
1000 கோடிக்கு கீர்த்தி சுரேஷூக்கு சொத்து இருக்குன்னு, என்னிடம் பேசிட்டிருந்த நண்பர் ஒருவர் சொன்னார். என்னால நம்ப முடியல.. அவ்ளோவெல்லாம் இருக்க முடியாது. 10, 20 கோடி ரூபாய் இருக்கலாம்.
பிரம்மாண்ட திருமணம்: கீர்த்தி சுரேஷின் திருமணம் பிரம்மாண்டமாக நடக்கட்டும். ஆனால் அந்த பிரம்மாண்டத்தை விற்காமல் இருந்தால் போதும். திருமணம் என்பது தனிப்பட்ட நிகழ்வு. அதையும் வியாபாரமாக்குவது இப்போதெல்லாம் டிரெண்டாகிவிட்டது" என்று சேகுவேரா தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications