"ஜெயம் ரவிக்கும் எனக்கும் என்ன தொடர்புனு தெரியணுமா?"! ஒரே ஒரு போஸ்ட்டில் விளக்கிய கெனிஷா பிரான்சிஸ்
சென்னை: தனக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே இருக்கும் உறவு என்ன என்பது குறித்து கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷா பிரான்சிஸ் விளக்கமளித்துள்ளார். நேற்றைய தினம் ஜெயம் ரவி செய்தியாளர்களை சந்தித்து கெனிஷா குறித்து தெளிவுப்படுத்தியிருந்தார்.
நடிகர் ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் 2009ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆரவ், ஆர்யன் என இரு மகன்கள் உள்ளனர். சுமார் 15 வருடங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் திடீரென கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தனது காதல் மனைவியை பிரிவதாக அறிவித்தார்.

மேலும் அடுத்த நாளே அவருடைய பிறந்தநாள் அதுவுமாக சென்னை நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனுவும் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி, இரு தினங்களுக்கு பிறகு எதிர் வினையாற்றினார்.
அதில் ஜெயம் ரவியின் முடிவு என்னை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்டது. அவரே தன்னிச்சையாக எடுத்த முடிவு. அவரை சந்திக்க பல முறை முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. என்னை பற்றி அவதூறு பரப்புவதை என்னால் ஏற்க முடியாது. என் குழந்தைகளுக்கு என்ன வழி என ஆர்த்தி , இரு குழந்தைகளின் தாயாக தனது ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.
இந்த நிலையில்தான் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷாவுக்கும் பழக்கம் இருப்பதால்தான் தனது மனைவியை பிரிய ஜெயம் ரவி முடிவு செய்தார் என இணையத்தில் தகவல் பரவியது. இந்த நிலையில் இதற்கு ஜெயம் ரவி விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில்தான் ஜெயம் ரவி நேற்று பிரதர் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் எடுத்த விவாகரத்து முடிவு அவருக்க தெரியாது என சொல்வதில் எந்த லாஜிக்கும் இல்லை. அவருக்கு ஏற்கெனவே இரு நோட்டீஸ்களை அனுப்பியிருக்கிறேன்.
அவர்கள் தரப்பில் பேசியும் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது தனக்கு தெரியாது என அவர் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. மகன்களுக்காக நான் அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக எதிர் கொள்வேன். எனக்கும் கெனிஷாவுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்கிறார்கள். அதை பேசியவர்களுக்குத்தான் அசிங்கம்.
அவர் ஒரு சைக்காலஜிஸ்ட். மன அழுத்தத்திலிருந்து எத்தனையோ பேரை அவர் மீட்டெடுத்துள்ளார். அவருடன் ஒரு ஹீலிங் மையம் தொடங்கவுள்ளேன் என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கெனிஷா ரவி எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவி பேசியிருந்ததை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து போட்டிருந்தார்.
மேலும் கெனிஷா கூறியிருப்பதாவது: இன்ஸ்டாகிராமில் நட்பிலும் அதீத அன்பு உண்டு. அதை மக்கள் மறந்துவிடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். ஆயினும் இதை நெட்டிசன்கள் ஏற்க மறுத்து ஜெயம் ரவி எங்கே, ஆர்த்திக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள் என்றெல்லாம் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications