Thug life: தக் லைப் படத்தில் குஷ்பு மகள் அனந்திதா! டைட்டில் கார்டு போட்டு நெகிழ்ந்த தாய்!
சென்னை: தக் லைப் படத்தில் குஷ்புவின் மகள் அனந்திதா பணியாற்றியிருக்கும் நிலையில் தாயாக குஷ்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் நேற்றைய தினம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன.
இந்த படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் கேங்ஸ்டருக்கான கதை என சொல்லப்பட்டாலும் அதில் அது போன்று எந்த விஷயமும் இல்லை என்கிறார்கள்.

கமல்
மேலும் கமல், சிம்புக்காக இந்த படத்தை பார்க்கலாம். மற்றவர்கள் பார்த்தால், தியேட்டரில் தூங்கிவிட வேண்டும், இல்லாவிட்டால் தலைவலியுடன்தான் வர வேண்டும். கதையே இல்லாத படமாக இது இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
38 ஆண்டுகள்
38 ஆண்டுகள் குறித்து எடுத்துள்ள படத்தில் கதையே இல்லாமல் எடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் சொல்கிறார்கள். மணிரத்னம் கடைசியாக இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரு பாகங்களாக வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றது.
மெகா கூட்டணி
இதையடுத்து மெகா கூட்டணியில் உருவான தக் லைஃப் படமும் நல்லதொரு வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி பெறவில்லை. கமல்ஹாசன் ரசிகர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். ஆனால் பொதுமக்கள் இதை விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.
மணிரத்னம்
இந்த நிலையில் இந்த படத்தில் மணிரத்னத்திற்கு உதவி இயக்குநர்களாக பலர் பணியாற்றியிருக்கிறார்கள். அதில் குஷ்புவின் இளைய மகள் அனந்திதாவும் பணியாற்றியுள்ளாராம். இதுகுறித்து குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மணிரத்னம் சார் படத்தில் என் மகளின் பெயரும் வந்ததை பார்த்து ஒரு பெற்றோராக நான் பெருமிதம் அடைகிறேன்.
முழங்காலில் எலும்பு முறிவு
மகளுக்கு முழங்காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மணிரத்னம் படத்தில் கொஞ்ச காலம்தான் பணியாற்ற முடிந்தது. ஆனால் அந்த படத்தில் பணியாற்றிய போது மணிரத்னத்திடம் இருந்து என் மகள் நிறைய விஷயங்களையும் தொழில் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.
அனுபவம் புதுமை
இது எனது மகள் மனதில் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும். இந்த அனுபவம் உண்மையிலேயே அற்புதமானது. கொஞ்ச காலம் பணியாற்றியிருந்தாலும் என் மகளின் பெயரை மறக்காமல் இடம் பெறச் செய்தமைக்கு நன்றி மணி சார் என கூறி, டைட்டிலில் மகளின் பெயர் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் வாழ்த்து
இதையடுத்து குஷ்புவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். உங்கள் மகள் இயக்கத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என குஷ்புவிடம் கோரிக்கை விடுத்தும் வருகிறார்கள். குஷ்பு- சுந்தர் சி தம்பதிக்கு அவந்திகா, அனந்திதா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள்
மூத்த மகள் வெளிநாட்டில் நடிப்பு பயிற்சி பெற்று தாயை போல் நடிகையாக விரும்புகிறார். இளைய மகள் தந்தையை போல் இயக்குநராக முயற்சித்து வருகிறார். ஆனால் இருவருக்கும் தங்களது அவ்னி தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எந்த சலுகையும் கொடுக்கப்படாது என்றும் அவர்களது திறமையை அவர்கள்தான் வளர்த்துக் கொண்டு தங்களுக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என குஷ்பு ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குஷ்புவின் மூத்த மகள், தாயை போல் அழகாக இருக்கிறார். அவரை பார்க்கும் போது 1980 களில் பார்த்த குஷ்பு போல் இருக்கிறார் என ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications