"இதெல்லாம் ஒரு ஹீரோ"! விஜயகாந்தை கிண்டல் செய்த இந்திக்காரர்கள்! அடிச்சிடுவேனு சொன்ன குஷ்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபெப்சி (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) பிரச்சினையின் போது இந்தி திரையுலகத்தினர் வந்திருந்த போது விஜயகாந்தை அவமானப்படுத்தினார்களாம். அப்போது அவர்களிடம் குஷ்பு சண்டைக்கு சென்றதாகவும் விஜயகாந்த் அவரை தடுத்ததாகவும் குஷ்பு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து குஷ்பு, ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு, கலா மாஸ்டருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஃபெப்சி பிரச்சினை குறித்து பேசுவதற்காக இந்தி திரையுலகினர் சிலர் வந்திருந்தனர்.

television vijayakanth

அப்போது நான் ஃபெப்சியின் Executive member. நானும் விஜயகாந்த் சாரும்தான் இதுகுறித்து பேச அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றோம். அப்போது அங்கு ஒரு நாற்காலியை கூட போடாமல் அவமானப்படுத்தினார்கள். மேலும் ஒருத்தர் கட்டிலில் அமர்ந்து கொண்டு மிகவும் தெனாவட்டாக அமர்ந்திருந்தார்.

என்ன விஷயம்

அவர் என்ன என்ன விஷயம் என கேட்க!, அங்கிருந்தவர்கள் இந்தியில் விஜயகாந்த் சாரை, "இதெல்லாம் ஒரு ஹீரோ" என கிண்டல் செய்தார்கள். உடனே கோபமடைந்த நான், அவர்களிடம் தகராறு செய்தேன்.

விஜயகாந்த்

அப்போது எதுவும் புரியாத விஜயகாந்த் என்னை தடுத்தார். "குஷ் ஏன் என்னாச்சு" என கேட்டார். அதற்கு நான் கிண்டல் செய்ததை சொன்ன போது, "இவ்வளவுதானே, கிண்டல் செய்தால் செய்யட்டும், நீ விடு" என்றார். உடனே நான், "சார் உங்களை கிண்டல் செய்தால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். அடிச்சிடுவேன்" என்றேன்.

சமாதானம்

அதற்கு அவர், "குஷ் நாம் பேசி சுமூகமாக தீர்வு கொண்டு வருவோம் என நம்மை நம்பி 2000 குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும், நீ அமைதியாக அவர்களிடம் பேசி என்ன தீர்வு என கேட்டு சொல்" என்றார்.

விஜயகாந்த்

இதுதான் விஜயகாந்த் சார். தனக்கு எந்த பிரச்சினை வந்தாலும், ஏழை எளிய மக்களுக்காக அதை தாங்கி கொள்பவர் விஜயகாந்த். ஃபெப்சியில் நலிந்த டெக்னீஷியங்கள் எல்லாம் விஜயகாந்தால் பயனடைந்திருப்பார்கள். அவர்களது குழந்தைகள் படிப்புக்கு, தாயின் உடல்நலத்திற்கு உதவியிருப்பார். இப்படி ஒருத்தர் கூட அவரால் பயனடையாமல் இருக்க மாட்டார்கள் என குஷ்பு தெரிவித்திருந்தார்.

ரைஸ்மில்

விஜயகாந்த் ரைஸ் மில் ஓனருக்கு பிறந்தவர். அவர் நினைத்திருந்தால் நல்லபடியாக வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதால் அந்த வசதி வாய்ப்புகளை விட்டுவிட்டு சென்னைக்கு வந்தார். அங்கு வாய்ப்பு தேடிய போது பல முறை சாப்பிட எதுவும் இல்லாமல் பட்டினி கிடந்துள்ளார்.

அன்னதானம்

இவர் வாய்ப்புத் தேடி நிறைய இடங்களுக்கு செல்லும் போது லஞ்ச் டைமாக இருக்கும். அங்கிருப்போர் எல்லாம் உணவு அருந்துவார்களாம். ஆனால் தப்பித் தவறி கூட விஜயகாந்தை உணவு அருந்துங்கள் என அழைக்க மாட்டார்களாம். இதுவே நாளடைவில் விஜயகாந்த், தனது அலுவலகத்தில் கறி சோறு அன்னதானம் செய்ய உந்துதலாக இருந்தது.

மாற்று மொழிக்கு நோ

ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் பீக்கில் இருந்த போது விஜயகாந்த் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டு சினிமாவில் சாதித்தார். கடைசி வரை தமிழை தவிர வேறு எந்த மொழி படத்திலும் நடிக்க மாட்டேன் என்ற வைராக்கியத்துடன் இருந்தார். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார். வாழ்நாள் அவருக்கே தெரியாமல் நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி காலமானார். அவரது இறப்புக்கு வந்த கூட்டத்தை பார்த்தாலே அவர் எத்தனை நல்லவர் என்பது தெரியும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+