Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை குஷ்பூ சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்களை அவமதிக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுபோன்ற பல முக்கிய விஷயங்கள் குறித்து தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். ஆனால் அதே சந்திப்பில் நடிகர் ரவி மோகன் தொடர்பான கேள்வி எழுந்தவுடன் குஷ்பூவின் முகபாவனையே மாறிய சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருளாகியுள்ளது.

Khushbu Ravi Mohan Tamil Cinema

நடிகை குஷ்பூ பேட்டி

செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது வெறும் பேச்சாக இருக்கக்கூடாது, அதற்கான கடுமையான சட்ட நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்தினார். குறிப்பாக பெண்களின் தனியுரிமையை மீறும் வகையில் அவர்களது புகைப்படங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது இரக்கமில்லாத தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரவி மோகன் பற்றிய கேள்வி

இப்படி தீவிரமான விஷயங்கள் குறித்து பேசி கொண்டிருந்த குஷ்பூவிடம், திடீரென நடிகர் ரவி மோகன் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்வி முழுமையாக முடிவதற்குள் கூட குஷ்பூ சற்று பதற்றமான முகபாவனையுடன், "அது வேண்டாம்... அதைப் பற்றி பேச விருப்பமில்லை" என்பது போல கையசைவால் சைகை காட்டியுள்ளார். அந்த சில வினாடி வீடியோ கிளிப் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

குஷ்புவின் ரியாக்ஷன்

இந்த ரியாக்ஷனுக்குப் பின்னால் ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் சர்ச்சையே காரணம் என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு ரவி மோகன் தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் சந்தித்த மனவேதனைகள் குறித்து உருக்கமாக பேசிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.

அதில், தன் வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தியவர் "மூன்று எழுத்து நடிகை" என்றும், "இட்லிக்கு பெயர் போனவர்" என்றும் நேரடியாக பெயர் சொல்லாமல் சூசகமாக பேசியதாக சமூக வலைதளங்களில் பல்வேறு விளக்கங்கள் பரவின.

Khushbu Ravi Mohan Tamil Cinema

ரசிகர்கள் கருத்து

அதையடுத்து, பலரும் அந்த குறிப்புகள் குஷ்பூவைக் குறிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கினர். காரணம், ரவி மோகன் மற்றும் ஆர்த்தியின் காதல் திருமணத்துக்கு ஆரம்பத்தில் ஆதரவாக இருந்தவர்களில் குஷ்பூவும் ஒருவர் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது ரவி மோகன்-ஆர்த்தி உறவில் விரிசல் ஏற்பட்ட பிறகு, ஆர்த்தி பகிரும் சில பதிவுகளுக்கு குஷ்பூ ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்ததும், சில நிகழ்ச்சிகளில் ஆர்த்தியுடன் இணைந்து கலந்து கொண்டதும் இந்த ஊகங்களுக்கு மேலும் தீனி போட்டது.

விவாதம்

இந்த பின்னணியில்தான் செய்தியாளர்கள் நேரடியாக குஷ்பூவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்ப முயன்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் குஷ்பூ அதற்கு பதிலளிக்காமல் தவிர்த்த ரியாக்ஷனே தற்போது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

எனினும், சமூக வலைதளங்களில் பரவும் ஊகங்களுக்கும் உண்மை சம்பவங்களுக்கும் இடையே வித்தியாசம் இருக்கலாம் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக விளக்கம் அளிக்கும் வரை இந்த விவகாரம் குறித்து உறுதியான முடிவுக்கு வர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+