Bigg Boss: கமல்ஹாசனை போல பிக் பாஸில் இருந்து விடைபெற்ற கிச்சா சுதீப்.. அடுத்த தொகுப்பாளர் இந்த நடிகரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி கன்னட மொழியில் 11 வருடங்களாக தொகுப்பாளராக இருந்து வந்த கிச்சா சுதீப் பதினோராவது சீசனோடு தான் விலக போவதாக அறிவித்திருக்கிறார். அவருக்கு பதிலாக இனி யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பிரபலங்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் இருக்கும்போது அவர்கள் செய்யும் செயலை பார்ப்பதற்காக பலர் காத்திருக்கிறார்கள். அதனால் இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடைபெற்று வருகிறது.

television bigg boss kamal haasan

தமிழில் நடிகர் கமல்ஹாசன் ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கி வந்தார். 8வது சீசன் தொடங்குவதற்கு முன்பே இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அதற்கு பிறகு அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமீபத்தில் தான் அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. அது போல கன்னடத்தில் 11 வருடங்களாக கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியை கிச்சா சுதீப் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்தார்.

கிச்சா சுதீப் நடுநிலைமையாக தொகுத்து வழங்குகிறார், ரசிகர்கள் விரும்புவது போலவே போட்டியாளர்களிடம் நடந்து கொள்கிறார் என்று அவருக்கு அதிக பாசிட்டிவ் இருக்கிறது. ஆனால் 11வது சீசன் தொடங்கும் போது நான் இந்த சீசனோடு இதிலிருந்து விலகப் போகிறேன், இனிமேல் சினிமாவில் தான் இன்னும் தீவிரமாக கவனம் செலுத்தப் போகிறேன் என்று கூறியிருந்தார்.

television bigg boss kamal haasan

சமீபத்தில் பதினோராவது சீசன் முடிவுக்கு வந்திருக்கிறது. அவர் சொன்னது போல தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 11வது சீசன் உடன் விடை பெறுவதாக அறிவித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து கிச்சா சுதீப் இடத்தில் யார் அடுத்ததாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்து இருக்கிறது.

அடுத்து சீசனை ரிஷப் செட்டி, ரமேஷ் அரவிந்த், சிவராஜ் குமார், ரவிசந்தர் மற்றும் கணேஷ் ஆகியோரில் ஒருவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+