மன்னனும் நானே குட்டி சுட்டீஸும் நானே...!
சென்னை: சன் டிவியின் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியில் மன்னன் என்கிற பெயரில் ஒரு குழந்தை கலந்துக் கொண்டு சிறப்பித்து உள்ளதை சன் டிவி அதன் முக நூல் பக்கத்தில் பதிவிட்டு சிறப்பித்து உள்ளது.
நிகழ்ச்சியை நடத்தும் கோவை சரளா குழந்தையுடன் நடத்தும் உரையாடல் மிக சிறப்பாக உள்ளது.
கடந்த சில வாரங்களாக சன் டிவியின் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகை கோவை சரளா நடத்தி வருகிறார்.

முன்பு அண்ணாச்சி
குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இமான் அண்ணாச்சி நடத்தி வந்தார். நிகழ்ச்சி கலகலவென்று சிறப்பாக இருந்தது.இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி திடீரென்று நிறுத்தப்பட்டு சீனியர் சுட்டீஸ் என்று புதிய நிகழ்ச்சியை சன் டிவி இமான் அண்ணாச்சியை வைத்து நடத்தியது.

சிறப்பாக இல்லை
சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி சன் டிவியின் சீரியல் நட்சத்திரங்களுடன் கொஞ்சம் ஓவராகவே உரசி உரசி முகம் சுளிக்கும்படி அண்ணாச்சி நடந்து கொண்டார். இந்நிலையில் திடீரென்று அண்ணாச்சி சன் டிவியின் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சி மற்றும் சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக்கப்பட்டார்.

அண்ணாச்சி நிகழ்ச்சி
கலர்ஸ் தமிழ் டிவியில் இமான் அண்ணாச்சியின் நிகழ்ச்சி களைக்கட்ட துவங்கியது. இதையடுத்து கோவை சரளாவை வைத்து சன் டிவி குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்தது. கோவை சரளாவை வைத்து நிகழ்ச்சியைத் துவங்குகிறதே சன் டிவி. எப்படி இருக்குமோ, என்னாகுமோ என்கிற எதிர்பார்ப்பில் இருந்த நேரத்தில் நிகழ்ச்சி நன்றாகவே இருந்து வருகிறது.

நடிகை கோவை சரளா
காஞ்சனா படத்தின் மூலம் குழந்தைகளுக்குப் பிடித்த நடிகையான கோவை சரளா குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி பேசி நிகழ்ச்சியை மிக சிறப்பாகவே நடத்தி வருகிறார். இந்த வாரம் வரப்போகும் நிழ்ச்சியில் ஒரு குழந்தை கோவை சரளாவுக்கு வைக்கும் வணக்கத்தை அனாயசமாக வைக்கிறது.

மன்னர் குழந்தை
ஒரு குழந்தை கோவை சரளாவிடம் பன்ச் வசனம் பேசுகிறது. இன்னொரு குழந்தை தனது பெயர் மன்னர் என்று கூறி, இந்த இந்த ஊருக்கு தான் மன்னர் என்று கூறுகிறது.,மீன் வறுப்பது எப்படி என்று கூறுகிறது. பரவாயில்லை... அண்ணாச்சிக்கு தான் சோடை போனவர் இல்லை என்று நிரூபித்து உள்ளார் கோவை சரளா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications