பிரகாஷ் ராஜ் எங்கே? நடிகர் சூர்யா அப்படி பேசினாரே? கோடம்பாக்கத்தில் ஹீரோக்கள் சைலண்ட்: பிரபலம் சுளீர்
சென்னை: இன்று அஜித்குமார் சம்பவத்தில் ஒருத்தரும் பேசவில்லை.. முதுகெலும்புகள் இல்லாமல் போன கூட்டணி கட்சிகள்.. கோழைகளாகிப்போன மீடியாக்கள்.. திறனற்ற எதிர்க்கட்சிகள்.. அந்தவகையில் இப்போது தமிழ்நாடு ஒரு நெருக்கடியான நிலைமையில் உள்ளது.. அரசியல் வெற்றிடத்தை நோக்கியும் நகர்வதாகவும் தெரிகிறது" என்று மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.
RETROLUXE என்ற சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் மூத்த பத்திரிகையாளர் மணி, "அஜித்குமார் விஷயத்தில் ஒரு நடிகர்களும் வாயை திறக்கவேயில்லையே..
சாத்தான்குளம் விவகாரத்தை அத்தனை அரசியல் கட்சியினரும் பேசினார்கள்.. இன்று ஏன் ஒருத்தரும் இல்லை?

பிரகாஷ்ராஜ் எங்கே போனார்
சூர்யா, சத்யராஜ், ஹன்சிகா மோத்வானி, சிவகார்த்திகேயன் உட்பட யாருமே அன்று பேசியவர்கள் இன்று வாய் திறக்கவில்லை. கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டு விஷயத்துக்கு மூக்கை நுழைக்கும் பிரகாஷ்ராஜ் இப்போ எங்கே போனார்?
அன்று மவுனமாக இருந்திருந்தால், திரை நட்சத்திரங்களை கேள்வி கேட்க வேண்டிய நிலைமையே வந்திருக்காது? திரைத்துறையை திமுக கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்ற பயத்தில் அன்று பேசினார்களா? ஜெய்பீம் படத்தின்போது அவ்ளோ பில்டப் தந்தாரே சூர்யா, இப்போ எங்கே போனார்?
எதிர்க்கட்சிகளே காரணம்
இதில் முதன்மையாக குறை சொல்ல வேண்டியது எதிர்க்கட்சியைதான்.. இப்போது எதிர்க்கட்சிகளுக்கு சாமர்த்தியம் இல்லை என்பதால், திமுகவால் செயல்பட முடிகிறது.. அந்தவகையில் தமிழ்நாட்டின் அதிர்ஷ்டசாலி முதலமைச்சர் எனலாம்..இதுவே வேறு மாநிலமாக இருந்திருந்தால், இந்த விஷயத்தை ஊதி ஊதி பெரிதாக்கி, நிலைகுலைய வைத்திருப்பார்கள்..
ஆனால், அதிமுக, பாமக, பாஜகவால் எதுவுமே செய்ய முடியலியே? அறிக்கை விடுகிறார்கள், சோஷியல் மீடியாவில் பேசுகிறார்கள். மற்றபடி, களத்துக்கு எந்த அரசியல்வாதியாவது சென்றார்களா?
அதிமுக பாடம் படிக்க வேண்டும்
பாதிக்கப்பட்ட குடும்பத்தை எந்த அரசியல்வாதியாவது சந்தித்தார்களா? இதுவே எதிர்க்கட்சியாக திமுக இருந்திருந்தால், இதே விவகாரத்தில் இறங்கியடித்திருக்கும். அந்தவகையில் திமுகவை பார்த்தாவது அதிமுக கற்றுக் கொள்ள வேண்டும்தானே? இன்னும் 5 வருடம் ஆனாலும் அதிமுக பாடம் படிக்க வாய்ப்பில்லை.
சம்பவம் நடந்து 3 நாளாகிறது.. ஒரு ட்வீட் போடுவதற்கு கூட சினிமாக்காரர்கள் பயப்படுவது ஏன்? சிகப்பு பூதங்களை கண்டு பயப்படுகிறார்களா? ட்வீட் போடுவதற்குகூட தைரியமில்லாதவர்கள்.. கமல்ஹாசன் என்ன பேச்சு பேசினார்? சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், யாருமே வாய் திறக்கவில்லை.. எல்லாருமே காவல்துறையையே குறை சொல்கிறார்கள்..
அதிமுக ஆட்சியில் கொலை நடந்தால் எடப்பாடி காரணம், திமுக ஆட்சியில் கொலை நடந்தால் போலீஸ்காரர்கள் காரணமா?
6 போலீஸ்காரர்கள்
அன்று எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமாவை கேட்டார்கள், இன்று யார் ராஜினாமாவை கேட்க போறீங்க? இன்னமும்கூட அஜித்குமார் தப்பித்து ஓடினார், கால் உடைந்துவிட்டது என்று கதைத்தான் அளக்கிறார்கள்.. 6 போலீஸ்காரர் காவலிலிருந்து ஒருவர் தப்பி ஓட முடியுமா? அவருக்கு கால் உடைந்துவிட்டதாம், உடனே வலிப்பு வந்துவிட்டதாம்.
மக்களை எவ்வளவு முட்டாளாக நினைக்கிறார்கள்? என்ன செய்வதென்றே தெரியாமல் எதிர்க்கட்சிகள் உள்ளன.. இந்த சம்பவம் அரசுக்கு மிகுந்த கெட்ட பெயரை உண்டாக்கிவிட்டது. அன்று எடப்பாடி அரசு காலியாவதற்கு, தூத்துக்குடி, பொள்ளாச்சி போல சாத்தான்குளமும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
தமிழகத்தில் அரசியல் வெற்றிடம்?
ஆனால், சாத்தான்குளத்தை பெரிதாக்கி மக்களின் நினைவில் வைப்பதற்கு திமுகவின் யுக்தி, மீடியா, கூட்டணிகள் போன்றவை காரணமாக இருந்தன.. அதுபோல, திருப்புவனத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கொண்டு செல்வதற்கான அரசியல் ரீதியான திறமை, மீடியா பலம் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு இல்லையே..
இன்று அஜித்குமார் சம்பவத்தில் ஒருத்தரும் பேசவில்லை.. முதுகெலும்புகள் இல்லாமல் போன கூட்டணி கட்சிகள்.. கோழைகளாகிப்போன மீடியாக்கள்.. திறனற்ற எதிர்க்கட்சிகள்.. அந்தவகையில் இப்போது தமிழ்நாடு ஒரு நெருக்கடியான நிலைமையில் உள்ளது.. அரசியல் வெற்றிடத்தை நோக்கியும் நகர்வதாகவும் தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications