கோடீஸ்வரியில் ராதிகாவின் எம்ஜிஆர் நினைவலைகள்!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேனீ பங்கேற்பாளரோடு, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ராதிகா புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் நினைவலைகளை ராதிகா பகிர்ந்துக் கொண்டார்.
கலர்ஸ் தமிழ் டிவியில் ராதிகா நடத்தும் கோடீஸ்வரி நிகழ்ச்சி, மிகவும் நன்றாக இருப்பதாக பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
புகழ்ச்சிக்குத் தகுதியுடையவராகவே ராதிகாவும் இருக்கிறார், அவர் நடத்தும் நிகழ்ச்சியும் இருக்கிறது.

கோடீஸ்வரன் கோடீஸ்வரி
ஆரம்பத்தில் சன் டிவிக்கு ராதிகாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரடான் டிவி, கோடீஸ்வரன் என்கிற நிகழ்ச்சியை நடிகர் சரத்குமாரை வைத்து நடத்திக் கொடுத்தது. அதன் மூலம் சரத்குமாருக்கும் ராதிகாவுக்கும் காதல் மலர்ந்துதான் அது திருமணத்தில் முடிந்தது. இருவருக்கும் இப்போது பதினைந்து வயதில் ஒரு மகனும் உள்ளார். இப்போது இதே போன்று ஒரு கம்பீரமான நிகழ்ச்சியான கோடீஸ்வரி என்கிற நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் டிவிக்கு ராதிகா தொகுத்து வழங்கி வருகிறார்.

கலர்ஸ் தமிழ் டிவியில்
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சி பெரும்பாலானவர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. இதில் கிறிஸ்துமஸ் அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தேனீ பங்கேற்பாளருடன் ராதிகா எம்ஜிஆரின் நினைவலைகளை பகிர்ந்துகொண்டது ரசிக்கும்படி இருந்தது.

நான் உங்களிடம் கேட்க
தேனீ பங்கேற்பாளர் என்றதும், ராதிகா உங்களிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்று சொன்னார். மேடம் நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் என்று அந்த பெண் சொன்னார். கடைசியில் இங்கி பிங்கி போட்டு, அந்த பெண் கேட்டார்...எம்ஜிஆருடன் உங்க அப்பா நடிச்சு இருந்திருப்பாங்க. அப்பா அவங்களை எப்படி கூப்பிடுவாங்கன்னு கேட்டார்.

ராதிகா பதில் அளிக்கையில்
ராதிகா பதில் அளிக்கையில் அப்பா ராமச்சந்திரன் அப்படி கூப்பிட்டதாகத்தான் சொல்லி இருக்கார் என்று சொன்னார். அப்பாவோட டிராமா கம்பெனியில எம்ஜிஆர் சார், சிவாஜி சார் இருந்து இருக்காங்க. தேனீ, ஆண்டிப்பட்டி ஏரியாவுக்கு எம்ஜிஆர் சார் நிறைய செய்து இருக்காங்க. 89 வருடம் அப்படி இருக்கும்... நான் ஓட்டு கேட்க அந்த உங்க ஊர் பக்கம் போய் இருக்கேன்.

தொப்பி போட்டு
நான் போனா அந்த ஊர் மக்கள் கிட்டே பேசிகிட்டு உட்கார்ந்து இருப்பேன்.. அப்போ என்னங்க யாருக்கு ஓட்டு போடுவீங்கன்னு கேட்டேன்.. நாங்க எம்ஜிஆருக்குத்தான் ஒட்டு போடுவோம்னு சொன்னாங்க. அவர்தான் இல்லையேன்னு சொன்னேன். யார் சொன்னது.. அவர் உயிரோடுதான் இருக்கார். யாருக்கோ தொப்பி போட்டு புதைச்சுட்டாங்கன்னு சொன்னாங்க.

டிசம்பர் மாசம்
இது டிசம்பர் மாசம்.. நேற்று எம்ஜிஆர் நினைவு நாள்.. எம்ஜிஆர் ஜெயலலிதா இருந்த வரைக்கும் அவங்கதான் அந்த மக்கள் மனசில் இருந்தாங்க. இன்று வரைக்கும் இருந்தாலும் அவங்கதான் இருப்பாங்க. என்று சொன்னார். அதை அந்த பெண்ணும் ஆமோத்தித்தார்.
இப்படி நடுநடுவில் அரசியல் மற்ற அனுபவங்கள் என்று சுவாரஸ்யமான பேச்சுக்களுடன் சுவையாக இருந்தது கோடீஸ்வரி நிகழ்ச்சி












Click it and Unblock the Notifications