நாடாளுமன்ற தேர்தல் முதல் ஐபிஎல் வரை இதுதான் நடக்க போகிறதா? கோலங்கள் சீரியல் நடிகர் கணித்த ஜோதிடம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் மனோ கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் ஸ்ரீதர் தற்போது நடிகராக மட்டுமல்லாமல் ஜோதிடராகவும் மாறி இருக்கிறார். அவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்றும் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச்சில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்றும் ஜோதிடம் கணித்து கூறியிருக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்து விட முடியாது. அதுவும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றான கோலங்கள் சீரியல் பல வருடங்கள் ஒளிபரப்பானாலும் மீண்டும் இதன் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் எங்கே போனார்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போய்விட்டார்கள்.

ஒரு சில நடிகர்கள் மட்டும் அடுத்தடுத்த சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக சீரியல் நடிகர்களின் வாழ்க்கை சினிமா நடிகர்களின் வாழ்க்கை போல கிடையாது. சீரியல் நடிகர்களுக்கு ஒரு சீரியலில் கேரக்டர் மக்கள் மத்தியில் கவர்ந்திருந்தால் அது நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும். அதற்கு பிறகு அவர்கள் யார் என்று தெரியாமல் பலர் மறந்து விடுவார்கள்.
சன் டிவி வானத்தைப்போல சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்! மாப்பிள்ளை இந்த பிரபலம் தானா?
அடுத்து வரும் சீரியல்கள் அந்த நடிகர்களுக்கு பெயர் வாங்கி கொடுக்கும் அளவிற்கு கேரக்டர் கிடைக்குமா என்பது கேள்வி குறித்தான். இப்படித்தான் கோலங்கள் சீரியலில் மனோ கேரக்டரில் நடித்த நடிகர் ஸ்ரீதரின் நிலைமை இருக்கிறது. கோலங்கள் சீரியல் முடிவுக்கு பிறகு தலையணை பூக்கள் சீரியலில் நடித்து இருக்கிறார். அதோடு பல திரைப்படங்களிலும் அந்த நேரத்தில் நடித்திருந்தாலும் இவரை வெளியே பார்க்கும்போது பலர் நீங்கள் கோலங்கள் நடிகர் தானே என்று தான் இவரை அடையாளப்படுத்தி கேட்கிறார்களாம்.

இந்த நிலையில் இவர் பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் தான் இப்போது சினிமா சீரியல் எதிலும் நடிக்கவில்லை சினிமாவை விட்டு விலகி இருக்கும் நான் ஜோதிடத்தில் கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறியிருக்கிறார். அதோடு தனக்கு ஜோதிடத்தில் ஆர்வம் வருவதற்கு என்னுடைய அப்பா தான் காரணம். அப்பா வங்கியில் வேலை பார்த்துட்டு நேரம் கிடைக்கும் போது சின்ன அளவில் ஜோதிடம் பார்த்து வந்தார். அதனாலேயே நான் ஜோதிடத்தில் பெரிய அளவில் ஆர்வம் வந்ததும் அதில் ரிசல்ட் எல்லாம் பண்ணி இருக்கிறேன். ஆனாலும் நடிப்பை விட்டு ஒரேடியாக நான் விலகவில்லை. இப்போது நடிப்பிற்கு முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன். அதற்கு சரியான வாய்ப்பு கிடைத்ததும் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமாகுவேன் என்று பேசுகிறார்.
சன் டிவியில் முடிவுக்கு வரும் பிரைம் டைம் சீரியல்? கதாநாயகன் பகிர்ந்த புகைப்படம்..எதிர்பாராத முடிவா?
அதோடு ஜோதிடம் பார்த்து பலருக்கு பலன் சொல்லிக் கொண்டிருக்கும் இவரிடம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்வு முடிவு எப்படி இருக்கும் என்று கேட்கப்பட்டபோது மீண்டும் மத்தியில் மோடி ஆட்சி தான் வரும். தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு அதிக சீட்டுகள் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். அதோடு இந்த முறை ஐபிஎல் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று அவர் கூறியிருக்கிறார். அதுபோல தன்னை பற்றி பேசுகையில் நான் மிகப்பெரிய நடிகராக மீண்டும் வருவேன் என்று எனக்கு தெரியும். எனக்கு மீண்டும் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றும் கூறியிருக்கிறார். நடிகர் ஸ்ரீதர் தன்னைப் பற்றியும் தேர்தல், ஐபிஎல் பற்றியும் சொன்ன ஜோதிடம் பலிக்குமா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இவர் சொன்ன ஜோதிடத்தை பற்றி உங்களுடைய கருத்து என்ன? மீண்டும் மத்தியில் பாஜக தான் ஆட்சி செய்யப் போகிறதா? அதுபோல தமிழகத்தில் திமுகவிற்கு அதிகமான சீட்டு கிடைக்குமா? என்பதை சொல்லிட்டுப் போங்க.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications