சன் டிவியில் முடிவுக்கு வரும் பிரைம் டைம் சீரியல்? கதாநாயகன் பகிர்ந்த புகைப்படம்..எதிர்பாராத முடிவா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் ஜிஜுமேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதா? என்று ரசிகர்களும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதனால் தான் இந்த சீரியலில் அடுத்தடுத்த கதை வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஆரம்பத்தில் சுந்தரி கிராமத்தில் இருந்த நிலையில் அவருக்கு திருமணத்திற்கு பிறகு சென்னைக்கு வந்த சுந்தரிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைத்தது.

அவருடைய கணவர் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்ததும் அவரை திருமணம் செய்து கொண்டதும் சுந்தரிக்கு தெரியவந்தது. அதோடு சுந்தரி நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக பல உதவிகளை செய்தது சுந்தரியின் கணவர் கார்த்திக்கின் மனைவி அனுதான். அனுவை தான் தன்னுடைய கணவர் திருமணம் செய்திருக்கிறார் என்ற உண்மை தெரிந்ததும் சுந்தரி உண்மை எல்லாம் அனுவிடம் சொல்வார் என்று நினைத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் கிடைத்தது.
அதற்கு காரணம் அனுவிற்கு அந்த நேரத்தில் உடல் நிலை பிரச்சனைகள் இருந்ததால் இந்த உண்மை தெரிந்தால் அனு இறந்து விடுவார் என்று சொல்லாமலேயே சுந்தரி உண்மைகளை மறைத்து வைத்தார். அதற்கு பிறகு ஒரு வழியாக உண்மை தெரிந்தது. அதனால் அனு சுந்தரி இடம் தன்னுடைய குழந்தையை ஒப்படைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே போய்விட்டார். இப்படியாக முதல் பாகம் முடிவடைந்து நிலையில் இரண்டாவது பாகத்தில் சுந்தரி ஆசைப்பட்டது போல கலெக்டர் ஆகிவிட்டார்.
ஆனால் சுந்தரியின் கணவர் சாகப் போகிறேன் என்று கடலில் மூழ்கியது போல தான் முதல் பாகத்தை முடித்து இருந்தனர். இரண்டாவது பாகத்தில் அவர் ஸ்கூல் மாஸ்டர் ஆக மீண்டும் வந்து இருக்கிறார். இப்போது தன்னுடைய குழந்தையிடம் நெருங்கி பழகிக் கொண்டிருக்கும் கார்த்திக் இனி தன்னை பற்றிய உண்மையை குழந்தையிடம் சொல்ல போகிறேன் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையில் இந்த சீரியலில் கதாநாயகன் கார்த்திக்காக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஜிஜூமேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனு மற்றும் குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அதோடு அந்த புகைப்படத்திற்கு "இறுதியாக" என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் மீண்டும் இந்த சீரியலில் அனு வருவதோடு சீரியல் முடிவடைய போகிறதா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
ஆனால் எப்படியும் இந்த சீரியல் முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது. கதையின்படி சுந்தரி தன்னுடைய அம்மா இல்லை என்று குழந்தைக்கு தெரிய வந்தாலும் தன்னுடைய அம்மா யார் என்பது தேடி அலையப் போகிறார். வீட்டை விட்டு காணாமல் போன அனு எப்படி இனி இவர்களோடு மீண்டும் வந்து சேரப் போகிறார் என்று பல திருப்பங்கள் வரப்போகிறது என்று தெரிகிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications