கூ கூ.. இது ஒரு யூடியூப் சானல்ங்க.. கார்ட்டூனில் கதை சொல்லி கலக்குறாங்க!
சென்னை: குட்டி குட்டி கதைகளாக தேர்வு செய்து, அதற்கேற்ப கார்ட்டூன் கேரக்டர்கள் அமைத்து கார்ட்டூன் படங்களில் கதை சொல்லி வருகிறது கூ கூ டிவி.
கார்ட்டூன் காலம் தாண்டி இப்போது அனிமேஷன் காலத்துக்கு வந்தாலும், கார்ட்டூன் படக் கதை என்றால் எல்லாருக்கும் அலாதி பிரியம்தான். அந்த பிரியத்தோடு குக்கூ டிவி பார்க்கலாம்.
மருதாணி விற்பனையாளர் மருமகள் என்று மாமியார் மருமகள் கதை ஒன்றை சொல்லி இருக்கிறது குக்கூ டிவி. வேலைக்காக அயல்நாட்டுக்கு சென்று வந்துக்கொண்டு இருந்த கணவன் திடீரென்று வராமல் போனபோது அந்த மாமியார் மருமகள் நிலை...?

ரிஷ்வானா ரஃபிக்
இது இஸ்லாம் குடும்பம் பற்றிய கதை...ரிஷ்வானா என்கிற பெண் ரஃபிக் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு புகுந்த வீட்டுக்கு வருகிறாள். வந்த சில வாரங்களில் கணவன் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறான். ரிஷ்வானாவுக்கு கணவன் ரஃபிக்கை பிரிய மனம் இல்லை. அழுகிறாள். உனக்கு என்ன பைத்தியமா பிடித்து இருக்கிறது.. இரண்டு வருடத்தில் வந்துவிடுவேன் இல்லையா.. அழுவதை நிறுத்து என்று தேற்றுகிறான்.

வயிற்றில் குழந்தை
ரிஷ்வானா, ரஃபிக் குழந்தையை வயிற்றில் சுமக்க ஆரம்பிக்கிறாள். கணவனும் மனைவி விஷயத்தை சொன்னதும் மகிழ்ச்சியில் இருக்கிறான். ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. மறுபடி இரண்டு வருடத்தில் வருகிறான்.மீண்டும் கணவன் வேலைக்காக வெளிநாடு செல்கிறான்.இந்த முறையும் ஒரு பெண் குழந்தைக்கு தாயாகிறாள் ரிஷ்வானா.

கணவன் இல்லை
மீண்டும் தான் தாயான விஷயத்தை கணவனிடம் சொல்லலாம் என்று போன் செய்தால், கணவன் அங்கு வேலையில் இல்லை என்றும், எங்கு போனான் என்றும் தெரியாது என்று கூறுகிறார்கள். கணவனிடம் இருந்து பணமும் வரவில்லை. எப்படி ஜீவனம் பண்ணுவது என்று குழம்பி நிற்கும் மாமியாரும், மருமகளும் ஆளாளுக்கு வேலைக்கு போகலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

வேலை சரி வராது
கடைசியாக வேலைக்கு போவது சரி வராது என்று முடிவெடுத்த மருமகளின் சமயோசித புத்தி இந்த இடத்தில் நன்றாக வேலை செய்கிறது. எனக்கு மருதாணி நல்லா அரைக்க தெரியும் அத்தை. என் கை ராசி மருதாணி நல்லா சிவக்கும் என்று சொல்கிறாள். மாமியார் ஓகே சொல்ல, மருமகள் நீலகிரித் தைலம் சேர்த்து மருதாணி அரைத்து, கோனில் நிரப்பி வைக்கிறாள்.

மாமியார் சந்தை
மாமியார் மருமகள் அரைச்சு வச்சு இருக்கும் மருதாணி கோன்களை சந்தைக்கு எடுத்துக் கொண்டு விற்பனை செய்துவிட்டு வருகிறார். இப்படியாக அவர்கள் பிழைப்பு நடக்கிறது. ஆனால், வெளிநாடு சென்று இருக்கும் ரிஷ்வானா கணவன் நிலை இன்னும் என்ன ஆனது என்று தெரியவில்லை என்று முடித்து இருக்கிறது கூகூ டிவி.இதில் பெரியவர் குழந்தைகள் என்று அனைவருக்குமான கதைகள் இருக்கிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications