மடியிலே பிரிந்த உயிர்.. கோவை குணாவின் இறுதி நிமிடத்தில் நடந்தது இதுதான்.. மனைவி கூறிய தகவல்கள்
சென்னை: சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் முதல் டைட்டில் வின்னர் என்ற பெருமையை பெற்ற கோவை குணா நேற்று உடல் நல குறைவால் காலமாகி இருக்கிறார்.
குணாவின் இறப்பு பற்றி பலர் பல்வேறு தகவல்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் குணாவின் இறப்பு நேரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி அவருடைய மனைவி பேசி இருக்கிறார்.

திடீர் மரணம்
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த கோவை குணாவிற்கு சிறுநீரக பிரச்சனை இருந்தது. கடந்த மூன்று வருடங்களாகவே அவர் அதற்கான டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்திருந்தார். பல ஆண்டுகளாகவே அவருக்கு உடல்நிலை மோசமாகத்தான் இருந்து வந்தது. இந்த நிலையில் அதிகப்படியாக குடிப்பழக்கம் இருந்ததால்தான் இப்படி ஆகிவிட்டது என்று அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்த மதன் பாபு சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

வயிற்றுப்போக்கு
இந்த நிலையில் குணாவின் இறப்பு பற்றி அவருடைய மனைவி பேசிய வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. இது குறித்து அவரது மனைவி," அவருக்கு சில நாட்களாகவே வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதற்கு தான் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு வாரமாக அவருக்கு வயிற்றுப்போக்கு நிற்கவேயில்லை. அதற்குத்தான் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். அவங்க மருந்துகளை சாப்பிட்ட பின்பும் அவருக்கு குணமாகவில்லை.

அதிகமான வலி
மேலும் அவரது ரத்தத்தை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி இருந்தார்கள். அதனுடைய முடிவுகள் தற்போது வரை கூட வரவில்லை. வயிற்றுப்போக்கிற்கு அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டும் அவரால் முடியவில்லை. அப்போது எனக்கு தெரிந்து விட்டது ஏதோ ஆகப் போகிறது என்று உடனே நான் சர்ச்சுக்கு போன் செய்து ஜெபம் செய்யுங்கள் என்று சொன்னேன். அவர்களும் எங்களுக்காக ஜெபம் செய்தார்கள் ஆனால் சிறிது நேரத்திலேயே வலி மிகவும் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் இடமும் சொன்னார். அவர்களும் எல்லா மருந்துகளையும் கொடுத்தார்கள்.. ஆனால் அவருக்கு குணமாகவில்லை நான் தான் அவரை மடியில் வைத்து நீவி விட்டுக் கொண்டிருந்தேன்.

மடியில் பிரிந்த உயிர்
பின்னர் என்னுடைய மகள் வந்ததும் அவரது மடியில் அவர் படுத்து கொண்டார். அதன் பிறகு அவர் வாந்தி எடுத்தார். உடனே மருத்துவர்கள் அழைத்துப் பார்த்தபோது எல்லாமே முடிந்து விட்டது. கர்த்தருடைய கிருபையில் இத்தனை ஆண்டுகள் அவர் இருந்தது பெரிய அதிசயம் தான் என்று கூறியுள்ளார். குணாவின் உடல் விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது இறப்பிற்கு பல்வேறு பிரபலங்களும், நகைச்சுவை நடிகர்கள், குரல் கலைஞர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பலரும் சமூக வலைத்தளத்தில் இரங்கலை செலுத்தி வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications