KPY Bala: கேபிஒய் பாலாவுக்கு பணம் தர்றது யார்? ஆம்புலன்ஸ், பவுன்சர் பரபர.. தன்னிலை விளக்கம் தருவாரா
சென்னை: கேபிஒய் பாலாவுக்கு பணம் எப்படி கிடைக்கிறது? பென்ஸ் காரில் பெயரில் பதிவாகி உள்ள நம்பர், பாலா தந்த ஆம்புலன்ஸ்களில் உள்ளதாம்.. இன்னும் ஆதாரங்களை வைத்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்களும், சந்தேகங்களும் வருகின்றன.. எனவே செய்தியாளர்களை அழைத்து, பாலா இதற்கெல்லாம் தெளிவான தன்னிலை விளக்கம் தரவேண்டும்.. தான் குற்றமற்றவர் என்பதையும் நிரூபிக்க வேண்டும்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "காரைக்காலிலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்த சாதாரண நபர் பாலா.. ஒருகட்டத்தில் நிறைய உதவிகள் செய்ய துவங்கினார்.. ஆந்திராவில் ஹர்ஷா சாய் என்பவரை போலவே இங்கு உதவி செய்து வருகிறார்.. தான் செய்யும் உதவிகளை கேமராவில் ஷூட் செய்து, அதை யூடியூப்களில் போட்டு வருகிறார்கள்..

இத்தனை உதவிகளை செய்வதற்கு இவருக்கு எப்படி பணம் வருகிறது? என்பதுதான் ஆரம்பத்திலிருந்தே பாலா மீது வைக்கப்படும் விமர்சனமாக உள்ளது..
ஆம்புலன்ஸுக்கு காசு ஏது
வெளிநிகழ்ச்சிகள், டிவிக்களில் ஷோக்களை நிறைய செய்தாலும்கூட, அவைகளில் 15, 20 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கும்.. நகைக்கடை, துணிக்கடை திறப்பு விழாக்களில் பங்கேற்க 30 ஆயிரம். 50 ஆயிரம் ரூபாய் தந்தாலும்கூட, இதுபோன்ற நிகழ்வுகள் தினமும் வராது.. மாதம் ஒன்று வருவதே பெரிய விஷயம்.
மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக இருந்தாலும்கூட, தன்னுடைய குடும்பம், சொந்த செலவு என்றிருக்கும்.. இது போக எப்படி பெரிய உதவிகளை செய்கிறார்? ஆம்புலன்ஸ்க்கான தொகைகள் அதிகம்.. ஒரு ஆம்புலன்ஸ் 10 லட்சம் என்றால்கூட், 10 ஆம்புலன்ஸ் எவ்வளவாகிறது? இந்த பணம் எப்படி வருகிறது? என்பதுதான் பலரது சந்தேகமாக இருந்து வந்தது.
இஸ்திரி கடைக்காரருக்கு பணக்கட்டு
கேபிஒய் பாலா நிறைய உதவிகளை செய்து வருவதை மறுக்கவில்லை.. ஆனால், அவர் செய்யும் உதவிகள் விமர்சனங்களுக்கு ஆளாவது ஏன்? அயர்ன் செய்வதற்காக ஒரு கடைக்கு செல்லும் பாலா, திடீரென அந்த இஸ்திரி கடைக்காரருக்கு ஒரு பணக்கட்டை தூக்கி தந்து, புது வண்டியை வாங்கிக்குங்க என்றார்.. இப்படி செய்யும் உதவிகள் வீடியோவாக எடுக்கப்படுவது ஏன்? இதை யூடியூப்களில் கன்டென்ட்டாக போடும்போதுதான், விமர்சனங்கள் எழ துவங்கின.
என் வருமானத்தில் 90 சதவீதம் உதவியை மக்களுக்கு செய்யவே விரும்புகிறேன் என்று பாலா சொல்கிறார்.. அதுமட்டுமல்ல, தான் ஒரு ஆட்டோ மட்டுமே வைத்திருப்பதாகவும், அதில்தான் எல்லா இடங்களுக்கும் சென்று வருவதாக சொல்கிறார்..
ஸ்டைல், ஷூ, வாட்ச்
ஆனால், பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஆட்டோவில் வந்தது போல வீடியோ எதுவும் இதுவரை வெளிவந்ததில்லை.. காந்தி கண்ணாடி பட காட்சிக்குகூட பெரிய ஃபாரீன் காரில் வந்து இறங்கினார்.. ஆனால் அது தன்னுடைய நண்பரின் கார் என்கிறார். அதேபோல எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் பெரிய பெரிய கார்களில் வந்துதான் இறங்குகிறாரே தவிர ஆட்டோவில் ஒருநாள் கூட எங்குமே வருவதில்லையே? என்றுதான் பலரும் கேட்கிறார்கள்.
அதேபோல மக்களுக்கு உதவி செய்யும் பாலாவுக்கு எதுக்கு பவுன்சர்ஸ்? இவரை யார் என்ன செய்துட போறாங்க? பாலா விழாக்களுக்கு வரும்போது, அவர் நடந்து வரும் ஸ்டைல், ஷூ, வாட்ச், காஸ்ட்யூம் போன்றவற்றையும் கவனியுங்கள்.. சொந்தமாக சம்பாதித்து உடை அணிந்து கொள்வது அவரது உரிமை, விருப்பம் என்றாலும், நல்லது செய்ய நினைக்கும் பாலாவுக்கு எதுக்கு பவுன்சர்ஸ்?
காந்தி கண்ணாடி சர்ச்சைகள்
காந்தி கண்ணாடி படத்தில் சைடு ரோலில் பாலா நடித்திருந்தார்.. சிவகார்த்திகேயன் படம் வெளியான செப்டம்பர் 5ம் தேதிதான், காந்தி கண்ணாடி படமும் ரிலீஸானது.. காந்தி கண்ணாடி படம் தொடர்பான சில களேபரங்களையும் சோஷியல் மீடியாவில் கிளப்பி விட்டார்கள்..
எங்களது படத்தின் போஸ்டரை கிழிக்கிறாங்க, படங்களை தியேட்டர்களில் ஓட விடுவதில்லை என்று தயாரிப்பாளர் செய்தியாளர்களிடம் சொன்னார்.. இதற்கு பாலா அமைதியாக நின்று கொண்டிருந்தார்.. ஆனால் எங்கே பேனரை கிழித்தார்கள்? படம் வெளியாக தடை போட்டார்கள் என்பதற்கான ஆதாரங்களை சொல்லவில்லை..
சிவகார்த்திகேயனுக்கு பாலா போட்டி?
பாலா படத்தை இங்கே யார் தடுக்க போகிறார்கள்? யாருக்கு பாலா தடையாக இருக்க போகிறார்? சிவகார்த்திகேயனுக்கு பாலா போட்டியா?
75 கோடி சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன் ஏன் பாலாவிடம் வரப்போகிறார்? சம்பந்தமே இல்லாமல் தேவையற்ற புரளியை கிளப்பிவிட்டதாலும், காந்தி கண்ணாடி படத்தை ஓடவிடவில்லை என்று மீடியா முன்பு சொன்னதால்தான் அனைவர் கவனமும் பாலா மீது திரும்பியது. ஒரு நல்ல படத்தை யாருமே தடுக்க முடியாது, எங்கிருந்தாலும் அந்த படம் ஓடிவிடும்.
கார் நம்பர் பிளேட்
இப்படி பாலாவை சுற்றி பல சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன.. தான் ஒரு தினக்கூலி என்கிறார்.. யாரிடமும் கடன் வாங்கி உதவி செய்யவில்லை, தன்னுடைய சொந்த பணம் என்றும் சொல்கிறார்..
ஆனால், அந்த பணம் எப்படி கிடைக்கிறது? பென்ஸ் காரில் பெயரில் பதிவாகி உள்ள நம்பர், பாலா தந்த ஆம்புலன்ஸ்களில் உள்ளதாம்.. இன்னும் ஆதாரங்களை வைத்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்களும், சந்தேகங்களும் வருகின்றன.. எனவே செய்தியாளர்களை அழைத்து, பாலா இதற்கெல்லாம் தெளிவான தன்னிலை விளக்கம் தரவேண்டும்.. தான் குற்றமற்றவர் என்பதையும் நிரூபிக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications