KPY Bala: சென்னை பல்லாவரத்தில் இலவச மருத்துவமனை கட்டும் கேபிஒய் பாலா! உதவிக்கு ஓடி வந்த அமுதவாணன்!
சென்னை: ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக, வீடு கட்ட வைத்திருந்த இடத்தில் KPY பாலா ஒரு இலவச மருத்துவமனை கட்டி வருகிறார். அவருக்கு உறுதுணையாக, அந்த நிலத்தின் மதிப்பில் பாதியான செலவை அமுதவாணன் ஏற்றுக்கொண்டுள்ளார். இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
விஜய் டிவியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட KPY பாலா, தனது அதிரடி காமெடியால் பிரபலமானார். பின்னர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவ்வப்போது கவுன்ட்டர் கொடுத்து, மக்களைச் சிரிக்க வைத்தார். பிறகு, அதே டிவி சேனலில் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.

தற்போது, பாலா இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை எனச் சொல்லலாம். இதன் மூலம், வெள்ளித்திரையிலும் சில படங்களில் பாலா நடித்துக்கொண்டிருக்கிறார். தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை எடுத்து பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.
வாகன வசதி
வாகன வசதி மற்றும் அடிப்படை வசதி இல்லாத கிராமங்களுக்கு ஐந்து ஆம்புலன்ஸ்களை வாங்கிக் கொடுத்துள்ளார். அதற்கான பராமரிப்புச் செலவையும் அவரே ஏற்றுள்ளார். அத்துடன், லாரன்ஸ் மாஸ்டரின் சேவை என்ற அமைப்பிலும் பாலா இணைந்திருக்கும் நிலையில், அதன் மூலமும் உதவி செய்கிறார்.
படிக்க வசதி இல்லாத குழந்தைகள்
படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு அதற்கான உதவிகளையும், விவசாயிகளுக்குத் தேவையான விவசாயப் பொருட்களையும் வாங்கிக் கொடுக்கிறார். அத்துடன், சினிமாவில் நலிந்த கலைஞர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறார். அண்மையில், நடிகர் அபிநய்க்கு ரூ. 1 லட்சம் கொடுத்துள்ளார். அதுபோல், இறந்த பிந்துகோஷிற்கும் நேரடியாகச் சென்று பண உதவி செய்துள்ளார். சென்னை வெள்ள பாதிப்பின்போது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் பணம் அளித்தார்.
ஏழைகளுக்கு தையல் இயந்திரம்
மேலும், ஏழைகளுக்குத் தையல் இயந்திரம், ஐஸ் கடை ஆகியவற்றை வைத்துக் கொடுக்கிறார். அத்துடன், சிறுவர்களுக்கு மிதிவண்டி, வசதி இல்லாதவர்களுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார். பத்து ஆம்புலன்ஸ்களையாவது வாங்கிக் கொடுத்த பிறகுதான் சொந்தமாக கார் வாங்குவேன் என வைராக்கியத்துடன் பாலா இருக்கிறார். பாலாவின் சேவையைப் பாராட்டிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், "உங்கள் கையை மீறிப் போகும் செலவுகளுக்கு என்னிடம் தயங்காமல் உதவி கேளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

இலவச மருத்துவமனை
இந்த நிலையில், KPY பாலா தற்போது ஒரு இலவச மருத்துவமனையைக் கட்டி வருகிறார். சென்னை, பல்லாவரம் அருகே கட்டி வரும் இந்த மருத்துவமனையில், சிகிச்சை பெற வரும் மக்களுக்கு ஒரு ரூபாய் கூடக் கட்டணம் வாங்காமல் மருத்துவ சேவைகள் வழங்கத் திட்டமிட்டுள்ளார். இந்த மருத்துவமனை கட்டுவதற்காக பாதி இடத்தை KPY அமுதவாணன் வழங்கியுள்ளார். "இலவச மருத்துவமனை என்கிறீர்களே, இங்குப் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்குச் சம்பளத்தை எப்படி கொடுப்பீர்கள், மருந்துப் பொருட்களை எப்படி வாங்குவீர்கள்?" என்ற கேள்வியை இணையவாசிகள் முன்வைத்து வருகிறார்கள்.
அமுதவாணன்
KPY பாலாவைப் பார்த்து அமுதவாணன், தங்கதுரை, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்கிறார்கள். கோடி கோடியாகச் சம்பாதிக்கும் ஒரு சில உச்ச நட்சத்திரங்களே உதவி செய்ய யோசிக்கும் இந்த காலத்தில், தனக்குக் கிடைக்கும் வருமானத்தில் இத்தனை உதவிகளை யாரிடமும் ஒரு பைசா வாங்காமல் செய்து வருவது உண்மையில் பாராட்டுக்குரியது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications