கேபிஒய் பாலாவின் நீண்ட மவுனம் ஏன்.. "ஆஃப்" பண்ணிட்டாங்களா பாலாவை? சுதாரித்துக்கணுமே: பிரபலம் அக்கறை
சென்னை: KPY பாலா மீது முன் வைக்கப்படும் விமர்சனங்களிலிருந்து அவர் மீண்டு வரவேண்டுமானால், பாலாவிடம் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். காரணம், சிறு துரும்புகூட ஒரு மனிதனின் பொதுவாழ்க்கையை களங்கப்படுத்திவிடும். சனாதனத்தை அடித்து துவம்சம் செய்த கேரள பாடகன் வேடன், பாலியல் புகார்களில் சிக்கி, இன்று காணாமலேயே போய்விட்டார். எனவே பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டாலே, திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, பாலா குறித்த தன்னுடைய கருத்தையும் அக்கறையுடன் பதிவு செய்துள்ளார்.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "கேபிஒய் பாலாவை பின்னிருந்து இயக்குவது யார்? பாலா என்ற பொம்மையின் கயிறை இயக்குபவர் யார்? என்று பத்திரிகையாளர் உமா உண்மையை முன்வைத்தார்..

ஆனால், அதற்கு இதுவரை பாலா தரப்பிலிருந்து பதில் வெளிவரவில்லை.. ஒருவேளை இதுதொடர்பாக இனிமேல் செய்தியாளர்களை அழைத்து பேசி விளக்கம் தர, பாலா திட்டமிட்டிருக்கிறாரா? தெரியவில்லை.
கவன ஈர்ப்பு - நோய்
ஃபேஸ்புக்கில் செல்வன் அன்பு என்ற இயக்குனர், ஒரு பதிவு எழுதியிருக்கிறார். Attention Seek அதாவது தங்கள் மீதான கவன ஈர்ப்பை கொண்டு வருவதற்கான வேலைதான், இப்படி உதவி செய்வது.. இந்த போதை ஒருவருக்கு அதிகமாகிவிட்டால் அதுவே நோய் போல மாறிவிடும்.. இதுதான் சாதாரண குடும்பத்திலிருந்து வந்த பாலாவுக்கு ஏற்பட்டுள்ளது.
அன்று அனகாபுத்தூரில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாலா சென்றிருக்கிறார்.. அங்கே இட்லி சுடும் அம்மா, துணி துவைக்கும் அம்மா, அந்த பகுதியில் வீட்டு வேலை செய்யும் அம்மா என அங்குள்ளவர்களுக்கு 500, 1000 என்று கவரில் போட்டு தந்தார்.. இது அப்போது மீடியாவில் பெரிதாக பேசப்பட்டது.
அப்போதிருந்தே இந்த உதவிகளை செய்ய ஆரம்பித்து, இன்று பாலாவால் அதிலிருந்து மீள முடியவில்லை என்று செல்வன் அன்பு தன்னுடைய முகநூல் பதிவில் எழுதியிருக்கிறார்.
சப்போர்ட்டுக்கு வந்த சீமான்
மற்றொருபுறம் நாம் தமிழர் கட்சியின் சீமான் பயங்கரமாக கொந்தளித்து போயிருக்கிறார்.. எங்கிருந்து பணம் வருகிறது என்று பாலாவிடம் கேட்க நீங்கள் யார்? எங்கிருந்து பணம் வருகிறது என்று கேட்பவர்கள், அதை நீங்களே கண்டுபிடிக்க வேண்டியதுதானே?
உளவுத்துறை, சுங்கத்துறை, நீதித்துறை, அமலாக்கத்துறை இவ்வளவும் இங்கே இருக்கின்றன.. இவைகளுக்கு தெரியாத விஷயங்கள் உங்களுக்கு தெரிந்துவிடப்போகிறதா? பணம் எங்கிருந்து வந்தால் என்ன? உதவிதானே செய்கிறார்? என்று சீமான் கேட்கிறார்.
பத்திரிகையாளர் உமாபதி பேசி வெளியாகியிருந்த முதல் வீடியோவுக்கு, கொந்தளித்து போய் பதிலளித்திருந்தார் பாலா.. தான் ஒரு தினக்கூலி என்றும், ஆஸ்பத்திரி கட்டவில்லை, கிளீனிக்தான் கட்டுகிறேன் என்றெல்லாம் ஆவேசமாக பேசியிருந்தார் பாலா.
ஏன் பாலா மௌனம்
ஆனால் உமாபதி ஆதாரங்களுடன் பேசி மற்றொரு வீடியோ வெளியிட்டபிறகு, இதுவரை பாலா ஏன் அதுகுறித்து பேச மறுக்கிறார்? ஏன் அதுகுறித்த விளக்கத்தையும் தரவில்லை? பாலாவை அப்படியே ஆஃப் பண்ணிட்டாங்களா? திடீரென பிரான்சில் இருப்பது போல வீடியோ வருகிறது.. அங்கே பாலா சென்றிருக்கிறாரா? என்பதெல்லாம் மர்மமாகவே உள்ளது.
எனவே பாலாவை யாரோ இயக்கி , மாற்றிவிடப்போகிறார்கள் என்ற ஆதங்கத்தில்தான் இத்தனை பேரும் பேசுகிறார்கள்.. இதை பாலா புரிந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications