திடீர் பிரச்சனை..! தெரியாமல் கேட்ட கேள்வி..ஜனனியிடம் மன்னிப்பு கேட்ட ஸ்ருதிஹா.. இதுதான் காரணம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சாம்பியன் 4 நிகழ்ச்சிக்கான 22 ஏப்ரல் 2023 தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் சிறப்பு விருந்தினராக அறிமுகமான பிக் பாஸ் ஜனனியிடம் ஸ்ருதிஹா மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
மேடையிலேயே ஜனனி செய்த செயல் தற்போது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

விஜய் டிவியில் புதுசு புதுசா நிகழ்ச்சிகள் அறிமுகம் ஆகி வருகிறது. அதில் ஒரு நிகழ்ச்சி சக்சஸ் ஆகிவிட்டால், அதில் அடுத்தடுத்த சீசன்கள் தொடர்வது வாடிக்கைதான். அந்த மாதிரி தான் தற்போது கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இந்த வாரம் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருக்கின்றனர்.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாக பேசப்பட்டு வருவார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் இவ்வளவுதானா? என்று சொல்வது போன்று பிறகு பிக் பாஸ் போட்டியாளர்களைப் பற்றி யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் அவர்களுக்கு மீண்டும் அடைக்கலம் கொடுப்பது விஜய் டிவி நிகழ்ச்சிகள் . இதில் பல நிகழ்ச்சிகளில் அவர்கள் அடிக்கடி சிறப்பு விருந்தினர்களாக வருகிறார்கள்.
அந்த மாதிரி தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அறிமுகமான ஜனனிக்கு ஆரம்பத்தில் அதிகமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது. சமூக வலைதளத்தில் முதல்முறையாக இந்த சீசனில் இவருக்கு தான் பேன்ஸ் பேஜ் ரசிகர்கள் நிமிடங்களில் தொடங்கி சாதனை செய்தனர். அதிகமான ஃபேன்ஸ் பேஜ் இவருக்கு இருந்த நிலையில் உள்ளே இவர் அமுதவாணனோடு சேர்ந்து விளையாடிய விளையாட்டு பலரால் அதிகமாக பேசப்பட்டு வந்தது.
ஜனனிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் விஜயுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஜனனி மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சாம்பியன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். அவரோடு அமுதவாணன் மற்றும் தனலட்சுமியும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அப்போதுதான் ஜனனி வந்தபோது அசார் சிம்பு வாய்ஸில் பேசினார். அதேபோல சிம்பு வாய்ஸில் பேச ஆரம்பித்த ஜனனி நடுவர் ஸ்ருதிஹாவை வைத்து செய்திருக்கிறார். அதாவது அமுதவாணன் ஒருமுறை வந்தபோது ஸ்ருதி ஜனனியை காதலிக்கிறீர்களா? என்று அமுதவாணனிடம் கேட்டிருந்தார். அதைத்தான் நக்கலாக இப்போது பேசி இருக்கிறார்.

அதாவது சூட்டிங் வந்தோமா எல்லார்கிட்டயும், கலகலப்பா பேசணுமா, பேமென்ட் வாங்கி பேக்ல போட்டமா என கிளம்பி போயிட்டே இருக்கணும். எதற்கு இந்த பேச்சு என்று நக்கலாக பேச, அதற்கு என்னை மன்னிச்சிடுமா என்று ஸ்ருதிஹா கெஞ்சுகிறார். இது குறித்த பிரமோ தற்போது வைரலாகி வருகிறது. காமெடிக்காக என்ன வேணாலும் பேசலாம் என்றால் இப்படித்தான் மாட்டிக் கொள்ள வேண்டும் என்றும் சிலர் கமாண்டுகளில் கருத்துக்களை கொட்டுகிறார்கள்.
-
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications