விளையாட்டு வினையானது! பாலா செய்த பிராங்.. கோபத்தில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ரேஷ்மா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சாம்பியன் 4 சீசன்4 நிகழ்ச்சியின் ஏப்ரல் 23-ம் தேதிக்கான 2வது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து இருக்கின்றனர்.
தனலட்சுமி இடம் பாலா செய்த பிராங்க் பார்த்து கடுப்பாகி ரேஷ்மா நிகழ்ச்சியை விட்டு வெளியேற போவதாக கூறுகிறார்.

பொதுவாக இப்போது உள்ள சூழ்நிலையில் பிராங்க் என்கிற வார்த்தையை அதிகமாக சொல்லிக்கொண்டு எதை வேணாலும் செய்து கொண்டு கடைசியில் இங்க பாருங்க கேமரா.... பிராங் என்று முடித்து விடுகிறார்கள். இது பல youtube சேனல்களில் நடந்து கொண்டிருப்பது போலத்தான் தற்போது விஜய் டிவியிலும் நடந்திருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சாம்பியன் 4 நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான எபிசோட்டின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் பிரபலமடைந்த ஜனனி, அமுதவாணன் மற்றும் தனலட்சுமி மூவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இருக்கின்றனர்.
கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இந்த முறை அறந்தாங்கி நிஷா மற்றும் பாலா இருந்து வருகின்றனர். நடுவர்களாக விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவும், காமெடி பிரபலமான மதுரை முத்து, தாடி பாலாஜி, குக் வித் கோமாளி புகழ் ஸ்ருதிகா இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வார ப்ரோமோவில் தனலட்சுமி நிஷாவிடம் ஏன் அப்படி சொன்னீங்க, நிஷா அக்கா என்று கேட்க, அதற்கு நிஷா நான் குறித்து உங்களை மட்டும் தெரிஞ்சு நான் சொல்லல என்று சொல்ல, நீங்க என்ன ஹட் தான் பண்ணுனீங்க என்று தனலட்சுமி சொல்ல, அதற்கு நீங்க அவங்க வைஃப் இப்படி இருப்பாங்க என்று என்னை பார்த்து சொன்னீங்க என்று அறந்தாங்கி நிஷா சொல்கிறார்.
அதற்கு என்னைய பார்த்து சொன்னா எல்லாரும் சிரிப்பாங்க என்கிறதுனால இப்படி சொன்னீங்களா? என்று கேட்க, அதற்கு அறந்தாங்கி நிஷா ஆமாம் என்று சொல்ல, மரியாதையை விட்டுட்டு எல்லாம் என்னால இங்க இருக்க முடியாது என்ற எழுந்து கிளம்ப தனலட்சுமி முயற்சி செய்கிறார். அப்போது பாலா வெளிய போறீங்களா? அப்போ இந்த பக்கமா போங்க என்று கூறுகிறார். இதை சற்று எதிர்பார்க்காத அமுதவாணன் ஏம்பாலா நீ இப்படி பண்ற என்று கேட்கிறார்.

கடைசியில் பாலா ஒரு பிராங்கை வச்சு போராடிகிட்டு எவ்வளவு நேரமாகத்தான் கெஞ்சுறது, உட்காருமா என்று தனலட்சுமியை சொல்ல அனைவரும் சிரித்தப்படியே கைதட்டி ஆட்டம் போடுகின்றனர். இதை பார்த்து கடுப்பான ரேஷ்மா என்னையா பிராங்க்ன்னு நீங்க பண்ணுறது எப்ப பாத்தாலும் இரிடேட்டிங்காக இருக்கிறது. என் மைக்கை எடுங்கய்யா என்று கோபப்பட்டு தன்னுடைய மைக்கை எல்லாம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
மதுரை முத்து சமாதானம் செய்தாலும் கம்முனு இருங்க அண்ணே என்று ரேஷ்மா திட்டி விடுகிறார். அப்போது ரேஷ்மாவை சமாதானம் செய்வதற்காக அறந்தாங்கி நிஷா முயற்சி செய்து கொண்டிருக்கிறார். தற்போது இந்த ப்ரோமோ பலருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. என்ன இப்படி ஆகிவிட்டது என்று கேட்க, கடைசியில் இவர்களும் பிராங்க் என்று சொல்லப் போகிறார்கள். இவங்களுக்கு வேற வேலையே இல்லை என்று இந்த ப்ரோமோவை பலர் திட்டியும் வருகிறார்கள்.
-
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications