சொந்த விமானம் வைத்திருந்த ஒரே நடிகை கே.ஆர். விஜயா.. சில நடிகைகள் கல்யாணமே செய்வதில்லை.. ஏன்: பிரபலம்
சென்னை: திருமணமானதுமே உடல் வாகு, தோற்றம் போய்விடும் என்பதால்தான், பல நடிகைகள் திருமணம் செய்ய காலம் தாழ்த்துகிறார்கள்.. அல்லது திருமணமே செய்து கொள்ளாமல் தவிர்க்கிறார்கள்.. இப்போதெல்லாம் அந்த பிரச்சனை இல்லை.. நடிகைகள் வாடகை தாயிடம் குழந்தைக்காக ஏற்பாடு செய்து விடுகிறார்கள் என்று மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கூறியிருக்கிறார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் டாக்டர் காந்தராஜ். அப்போது, "நடிகைகள் பலரும் ஏன் திருமணம் செய்து கொள்வதில்லை" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டாக்டர் காந்தராஜ் சொன்னபோது, "நடிகைகள் என்பவர்கள் பலருக்கும் கனவுக்கன்னி.. நடிகையை திருமணம் செய்து கொள்ள போவதாக பலரும் சொல்வது அந்த காலத்திலிருந்தே இருக்கிறது..

நடிகைகள் கனவு கன்னி
நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது, ஒரு பிரபல நடிகைக்கு திடீர் திருமணம் என்று தலைப்பு செய்தி வந்தது. எனக்கு பக்கத்து அறையில் தங்கியிருந்த ஒரு மாணவர் அதை பார்த்துவிட்டு, போச்சு, கல்யாணம் ஆயிடுச்சா, நான் கல்யாணம் செய்யலாம் என்றிருந்தேனே" என்றார்.
நடிகைகளுக்கு திருமணமாகிவிட்டால், அவர்களுக்கென கணவன், குடும்பம், என்று அமைந்துவிடுவதால், அவர்களை இளைஞர்கள் யாரும் கண்டுகொள்வதில்லை.. முன்புபோல மார்க்கெட் இருக்காது என்பதால்தான் திருமணம் செய்வதில்லை.. சில நடிகைகள் திருமணம் செய்தாலும், கர்ப்பம் தரிப்பதை தவிர்ப்பார்கள். அழகு, உடல் கட்டுக்கோப்பு போய்விடும் என்பதால், குழந்தை பெற்றுக் கொள்வதையும் தவிர்ப்பார்கள்.
விமானம் வைத்திருந்த நடிகை
இதற்கு கேஆர் விஜயாவை உதாரணமாக சொல்லலாம்.. வேலாயுதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார் கேஆர் விஜயா.. வேலாயுதம் அப்போதே சொந்தமாக விமானம் வைத்திருந்தார்.. தன்னுடைய கம்பெனிக்காக வைத்திருந்த விமானத்தை, கேஆர் விஜயா ஷூட்டிங் வந்து செல்ல பயன்படுத்தி கொண்டார். தமிழ்நாட்டில் சொந்தமாக பிளேன் வைத்திருந்த நடிகை கேஆர் விஜயாதான்.
முதன்முதலில் கற்பகம் படம் வந்தபோது, நாங்கள் கல்லூரியில் படித்து கொண்டிருந்தோம். அப்போது ஒவ்வொருவரும், தங்களுக்கு வரும் மனைவி , கேஆர் விஜயா போலதான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்..
கேஆர் விஜயா, பத்மினி
கற்பகம் படத்தில், கேஆர் விஜயாதான், அன்றைக்கு எங்களை போன்ற இளைஞர்களுக்கு "ஐடியல் பெண்" மிகவும் அழகியாக இருந்தார்.. ஒரே ஒரு குழந்தைதான் பிறந்தது.. அதற்கு பிறகு, உடல் பெருத்துவிட்டது.. அவரது பொலிவு, உடல்வாகு போய்விட்டது.
அதுபோலத்தான் நடிகை பத்மினியும், ஒரு குழந்தை பிறந்ததுமே உடல் பெருத்துவிட்டது.. அதனால்தான் பலரும் திருமணம் செய்ய தயங்குகிறார்கள்.. இப்போது வாடகை தாய் முறை வந்துவிட்டதால், கர்ப்பம் தரிக்கும் பிரச்சனையும் இல்லாமல் போய்விட்டது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications