புன்னகை அரசி கே.ஆர் விஜயா வீட்டுல போட்டோ கவனிச்சீங்களா? பிரபல பாடகியின் பாட்டுக்காக போனை போட்ட நடிகை
சென்னை: ஒருமுறை ஷூட்டிங்குக்காக மும்பை சென்றிருந்தாராம் புன்னகை அரசி நடிகை கேஆர் விஜயா.. அப்போது ஹோட்டல் அறையில் தங்கி இருந்தபோது, ரேடியோவில் வந்த அந்த பாட்டை உற்று கவனித்தார்.. பாடகியின் குரலும் வித்தியாசமாக இருந்தது.. அதற்கு பிறகு, யாரந்த பாடகி என்று விசாரித்து, தமிழிலும் தன்னுடைய படத்தில் பாடகியை பாடவைத்தாராம். அது என்ன பாடல் தெரியுமா?
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர் மறைந்த பின்னணி பாடகி வாணிஜெயராம்.. ஆனால், இவர் வட இந்தியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்த காரணத்தால், முதலில் இந்தி பாடகியாகத்தான் அறிமுகமானார்.. குறிப்பாக கஜல் பாடுவதில் கைதேர்ந்தவராக விளங்கினார்!

அந்த காலகட்டத்தில், தமிழ்த்திரையுலகில் உச்சத்தில் இருந்த நடிகை கேஆர் விஜயா, தனக்கென்று ஒரு கதை எழுதும் டீமை தயார் செய்து, அதன்மூலம் சொந்த படங்களை தயாரித்து வந்தார். அப்போது ஒருமுறை ஷூட்டிங்குக்காக மும்பை சென்று ஹோட்டல் அறையில் தங்கி இருந்தபோதுதான், ரேடியோவில் வந்த அந்த பாட்டை உற்று கவனித்தார்.. பாடகியின் குரலும் வித்தியாசமாக இருந்தது..
மும்பையில் ஒலித்த குரல்
அந்த பாடல் முழுமையும் ஆர்வத்துடன் ரசித்து கேட்டார்.. தன்னுடைய படங்களிலும் பாட வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து, அவர் யாரென்று விசாரித்து, இறுதியில் தன்னுடைய படத்தில் வாணி ஜெயராமை பாட வைத்தார். அந்த பாட்டுதான் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடல்..
1974ல் ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் இந்த பாடல் இடம்பெற்றது.. எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், வாலி பாடலை எழுதியிருந்தார். முத்துராமனும் கே.ஆர். விஜயாவும் இந்தப் பாடலைப் பாடி நடித்திருந்தார்கள். தமிழில் இதற்கு முன்பு ஓரிரு பாடல்களை வாணி ஜெயராம் பாடியிருந்தாலும், இந்தப் பாடல்தான் அவரை எல்லோரும் கவனிக்க வைத்தது. அதற்கு காரணம் கேஆர் விஜயாதான்
தீர்க்க சுமங்கலி - மல்லிகை பாடல்
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு டைரக்டரும், பட அதிபருமான காரைக்குடி நாராயணன் பேட்டி ஒன்றை தந்திருந்தார். தீர்க்க சுமங்கலி படத்துக்கு கதை வசனம் எழுதியிருக்கும் காரைக்குடி நாராயணன், இந்த பாடல் உருவான விதம் குறித்து, அந்த பேட்டியில் கூறியிருந்தார்,
அதில், "பாடல் எடுப்பதற்கான டிஸ்கஷனில் எம்எஸ்வி, திருலோகச்சந்தர், கண்ணதாசன், நான் எல்லாரும் கவிதா ஓட்டலில் உட்கார்ந்திருந்தோம்.
மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலுக்கு டியூன் போட்டாகிவிட்டது.. பாடலை வாலி எழுத, அதை பாடுவது சுசிலா என்று முடிவாகிவிட்டது. அப்போது நான் எம்எஸ்வியிடம், வாணி ஜெயராம் பெயரை சொல்லி, அவருக்கு இந்த பாடலை பாட வாய்ப்பு தரலாம் என்றேன்.
சுசிலா மாதிரி வராது
உடனே எம்எஸ்விக்கும், வாலிக்கும் என் மீது கோபம் வந்துவிட்டது. சும்மா இருக்க மாட்டீங்களா? அந்த பாட்டை சுசிலா பாடினால்தான் நல்லா இருக்கும்.. சுசிலா பாடுவதை போல வராது" என்று என்னிடம் கோபப்பட்டார்கள்.. ஒரு பாடகியை பரிந்துரை செய்தால் இப்படி கோபப்படுகிறார்களே என்ற வருத்தத்தில், நான் உடனே அந்த படத்துக்கு தயாரிப்பாளரான கேஆர் விஜயாவிடமே சென்றேன்.
"நீங்கதானே இந்தியில் வாணி ஜெயராம் என்ற பாடகி நன்றாக பாடியதாக சொன்னீர்கள், அவரை இந்த பாடலுக்கு பயன்படுத்தலாம் என்றால், எம்எஸ்வி, வாலி இருவரும் ஏற்க மறுக்கிறார்கள.. இந்த பாட்டை வாணி ஜெயராம் பாடும்படி நீங்கள்தான் ஏதாவது செய்ய வேண்டும்" என்றேன்..
கேஆர் விஜயா போன்
உடனே கேஆர் விஜயா, "சரி நீங்கள் போங்கள், நான் பார்த்துக்கறேன்" என்று சொல்லி அனுப்பினார். நான் உங்களிடம் இதை சொன்னது போல, அவர்களிடம் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மீண்டும் கவிதா ஓட்டலுக்கே திரும்பி வந்துவிட்டேன்.. ஒன்றும் தெரியாததுபோல் அவர்களுடன் பேசாமல் உட்கார்ந்திருந்தேன்.
ஒரு மணி நேரம் கழித்து கேஆர் விஜயாவிடமிருந்து போன் வந்தது.. அதில், இந்த பாட்டை வாணி ஜெயராம் பாட வேண்டும் என்று சொல்லிவிட்டார்.. கேஆர் விஜயாவே இப்படி விருப்பப்படுகிறார் என்பது தெரிந்ததுமே அனைவருமே சைலண்ட் ஆகிவிட்டார்கள்.. பிறகுதான் வாணிஜெயராமுக்கு அந்த பாட்டு வழங்கப்பட்டது" என்று கூறியிருந்தார்.
நன்றி சொன்ன வாணிஜெயராம்
இந்நிலையில், IndiaGlitz Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டி தந்திருக்கும் கேஆர் விஜயா, வாணிஜெயராம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.. மும்பையில் வாணிஜெயராம் பாடிய குரலை கேட்கும்போதே வித்தியாசமாக இருந்தது.. அந்த குரலை கேட்டாலே ஒருவித மயக்கம் எனக்குள் வந்தது.. இந்த குரலில் பாடவைத்து நாம் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்..
பிறகுதான், டைரக்டரிடம் வாணிஜெயராம் பற்றி சொல்லி, அவரை பாட வைக்கலாம் என்றேன்.. ஆசைப்பட்டுதான் வாணிஜெயராம் பாட வேண்டும் என்று நானே கேட்டேன்.. அதற்கு பிறகே மல்லிகை என் மன்னன் பாடலை வாணிஜெயராம் பாடினார்.. நான்தான் அவரை பாடுவதற்கு சிபாரிசு செய்தேன் என்பதை தெரிந்து, வாணிஜெயராம் உடனே என்னுடைய வீட்டுக்கு வந்து நன்றி சொல்லிவிட்டு சொன்னார்..
பாவம், இன்று வாணி ஜெயராம் உயிருடன் இல்லை.. ஆனால், எனக்கு பல படங்களில் பாடியிருக்கிறார்.. வாணிஜெயராம் தமிழில் பாட நான்தான் முக்கிய காரணம் என்று சொல்ல மாட்டேன்.. நான் இல்லாவிட்டாலும், வேறு யாராவது நிச்சயம் அவரை தமிழுக்கு அழைத்து வந்திருப்பார்கள் என்று பெருந்தன்மையாக கூறியிருக்கிறார் கேஆர் விஜயா.
ரசிகருக்கு தந்துள்ள மரியாதை
முன்னதாக, கேஆர் விஜயா தன்னுடைய வீட்டில் மாட்டி வைக்கப்பட்டிருந்த தன்னுடைய போட்டோ குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
அதில் ஒரு போட்டோ பற்றி சொல்லும்போது, ராஜமுந்திரியில் ஒரு தீவிர ரசிகர் என்னுடைய போட்டோக்கள் அனைத்தையும் தொகுத்து 50 புத்தகங்களாக எடுத்து வந்து வந்து தந்தார்.. அத்துடன் அம்மன் கெட்டப்பில் உள்ளதை தொகுத்து போட்டோவாக தந்தார். அந்த ரசிகரின் நினைவாகவே அந்த போட்டோவை இன்னமும் மாட்டிவைத்திருக்கிறேன்" என்று சிலாகித்து சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications