சூர்யா சொன்ன வார்த்தை.. நன்றியே இல்ல சார்.. ஆதவன் பட நிகழ்வை பகிர்ந்த கே.எஸ் ரவிக்குமார்
சென்னை: இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தான் இயக்கிய ஆதவன் திரைப்பட சூட்டிங் போது நடிகர் சூர்யா சொன்ன வார்த்தையை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய படங்கள் எப்போதுமே தனித்துவமான குடும்ப கதையை மையமாகக் கொண்டே இருக்கும். ஆரம்பத்தில் புரியாத புதிர் என்ற திரைப்படத்தில் இவருடைய பயணம் தொடங்கி அதற்கு பிறகு பல ஹிட் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

அதிலும் ஊர் மரியாதை, சேரன் பாண்டியன், நட்புக்காக, நாட்டாமை, பரம்பரை, முத்து, படையப்பா, அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம் என்று பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் தான் ஆதவன் திரைப்படமும் இடம்பெற்றது. ஆதவன் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்திருப்பார். அதற்கு ஜோடியாக நடிகை நயன்தாராவும் நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் நடிகர் வடிவேலுவும் நடித்திருப்பார். அதில் வடிவேலுவின் பல காமெடி பெரிய அளவில் பிரபலமடைந்தது.
அதுபோல ஆதவன் திரைப்படத்தில் நடிகர் சூர்யா சிக்ஸ்பேக் வைத்து ரசிகர்களை மிரட்டி இருந்தார். இந்த சம்பவம் குறித்து நடிகர் சரத்குமாரோடு சூர்யாவை ஒப்பிட்டு கே எஸ் ரவிக்குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் கே.எஸ் ரவிக்குமார் பேசுகையில், எல்லோருக்கும் ஒரு அடிட் இருக்கும் சிலர் சாப்பாடு விஷயத்தில் அடிட் ஆக இருப்பார்கள். மற்ற சிலர் வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் இருப்பார்கள். ஆனால் சரத்குமார் உடற்பயிற்சியில் அடிட். அதனால்தான் இந்த வயசிலும் அவரால் இவ்வளவு பிட்டாக இருக்க முடிகிறது.
ஆனால் ஆதவன் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து கொண்டிருக்கும் போது சூட்டிங் ஸ்பாட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது வருத்தமாக இருந்தார். என்னன்னு கேட்டபோது இந்த வயிற்றுக்கு கொஞ்சம் கூட நன்றியே இல்ல சார்.. இவ்வளவு ஒர்க் அவுட் பண்ணுறேன் ஆனாலும் நேற்று ஒரு நாள் தான் கொஞ்சமாக சாப்பிட்டேன். உடனே இங்கு தொங்கிடுச்சு என்று புலம்புவார்.
சூர்யா வயசுக்கு ஆதவன் படத்தில் நடிக்கும் போது அப்படி புலம்புகிறார் என்றால், சரத்குமார் இப்போதும் இப்படி பிட்டாக இருப்பதற்கு எவ்வளவு உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்? ஆனால் சரத்குமார் உடற்பயிற்சியை சந்தோஷமாக செய்வதால் அவரால் இன்னமும் இளமையாக இருக்க முடிகிறது. அவருடைய உண்மையான வயது என்ன என்பதை அவரே ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருடைய மனதில் எப்போதும் 20 வயசு பையனாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று அந்த பேட்டியில் நடிகர் கே.எஸ் ரவிக்குமார் பேசி இருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications