படையப்பா படத்துல ரஜினிகாந்த் செய்த உள்குத்து வேலை! சிவாஜி கோபப்பட்டுட்டாரு! கேஎஸ் ரவிக்குமார் பளிச்
சென்னை: இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது தான் இயக்கி நடித்த படையப்பா திரைப்படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் தன்னைப் பார்த்து சிவாஜி கணேசன் "பொறுக்கி" என்று திட்டியதையும், அப்போது என்ன நடந்தது என்பதையும் கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றி அடைந்திருக்கிறது. அதிலும் இவருடைய திரைப்படங்கள் அதிகமானவை 90ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படங்களாக இப்போதும் கொண்டாடப்படுகிறது. டிவி சேனல்களில் இவருடைய படங்கள் வெளியாகும் போது பல ரசிகர்கள் ஏதோ முதல் முறை பார்ப்பது போலவே சேனல்லை மாற்றாமல் பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம்.

அந்த அளவிற்கு குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை கே.எஸ். ரவிக்குமார் இயக்கி அந்த திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தும் இருக்கிறார். அந்த வரிசையில் படையப்பா திரைப்படமும் ஒன்று. படையப்பா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மறைந்த நடிகை சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், ராதாரவி என்று அதிகமான திறை பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள்.
அவர்களோடு நடிகர் சிவாஜி கணேசனும் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். இந்த நிலையில் இந்த திரைப்படம் உருவாகும்போது நடந்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டியில் கே எஸ் ரவிக்குமார் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், படையப்பா திரைப்படத்தில் ரஜினிகாந்த் சில உள்குத்து வேலைகளை செய்துட்டு இருப்பாரு. எதாவது ஷார்ட் மாற்ற வேண்டும், காட்சிகளை இப்படி வைத்தால் சரியா இருக்காது என்பதை என்னிடம் நேரடியாக சொல்லாமல் ரமேஷ் கண்ணாவிடம் சொல்லி என்னிடம் சொல்ல சொல்லுவார்.
ரமேஷ் கண்ணாவும் ரஜினிகாந்தின் பேச்சை கேட்டுக்கொண்டு இந்த காட்சியை மாற்றி விடலாம். இதை இப்படி செய்யலாம் என்று என்னிடம் விவாதம் செய்து கொண்டிருப்பார். இது பல இடங்களில் நான் கவனித்தேன். ஆனாலும் ரஜினியிடம் அதைப் பற்றி நான் அப்போது பேசவில்லை. அதுபோல அந்த திரைப்படத்தில் சிவாஜி சார் அப்பாவாக நடித்திருந்தார். அதுபோல திரைப்படத்தில் ஒரு காட்சியில் அவர் இத்தனை வருடங்களாக வாழ்ந்த வீட்டிலிருந்து வெளியே போகும்போது உணர்ச்சிவசப்படுவார்.
அந்த காட்சி எடுக்கப்படும் போது அங்கு சில ஐயர் வேஷமிட்ட நடிகர்கள் இருந்தார்கள். அவரில் ஒருவர் திடீரென்று சூட்டிங் எடுத்துக்கிட்டு இருக்கும்போதே உள்ளே வந்து விட்டார். அதை பார்த்து எனக்கு கோபம் வந்துவிட்டது. பிறகு டேக் எடுத்து அந்த காட்சியை முடித்துவிட்டு அந்த நபரை பிடித்து சத்தம் போட்டு அவரை சின்னதாக அடித்து விட்டேன்.
அதை அப்போது பார்த்த சிவாஜி கணேசன், ரஜினியிடம் இவன் நல்ல டைரக்டர்னு சொன்னியே ஆனால் இவன் ஐயர்களை எல்லாம் போட்டு அடிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு ரஜினியும் சிரித்துக் கொண்டே அது நிஜ ஐயர்கள் கிடையாது அய்யர் வேஷம் போட்ட நம்ம ஆளுங்க தான். ஷார்ட் எடுத்துக்கிட்டு இருக்கும்போது இடையில் வந்து விட்டதால் டைரக்டர் கோவப்பட்டுட்டாரு.
ஆனா இப்போ சமாதானம் ஆகிடுவாரு என்று சொன்னாலும் சிவாஜி கணேசன் என்னை அந்த இடத்தில் திட்டிக்கொண்டே இருந்தார். அதற்குப் பிறகு ஒரு காட்சியில் சிவாஜி கணேசன் பத்திரத்தில் கையெழுத்து போடுவது போன்று எடுத்துக் கொண்டிருந்தேன். அதில் தன்னுடைய மகள் கையெழுத்து போடும்போது சிவாஜி கணேசன் கண்ணீர் விட்டு அழ வேண்டும். அந்த காட்சியை சொல்லும்போது நான் அப்படியே நடித்துக் காட்டினேன்.
அதை பார்த்து சிவாஜி நீ டைரக்டரா வந்திருக்க வேண்டியவனே இல்லை, நடிகனா ஆக வேண்டியவர் என்று சொன்னாரு. அதோடு இந்த காட்சியை நீ எப்படி இவ்வளவு அழகா பண்ணுற என்று கேட்க நான் எனக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கு சார் என்று சொன்னேன். அவர் உடனே சிரித்து விட்டார்.. என்று படையப்பா திரைப்பட அனுபவங்களை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பகிர்ந்து இருக்கிறார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications