சரத்குமார் அந்த பொண்ணோட 2 வருஷமா சுத்திட்டு இருந்தாரு! ரகசியத்தை அம்பலப்படுத்திய கே.எஸ் ரவிக்குமார்
சென்னை: கே.எஸ் ரவிக்குமார் மற்றும் சரத்குமார் இருவரும் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது, கே எஸ் ரவிக்குமார் தான் ஸ்கூல் படிக்கும்போது பெசன்ட் நகரில் ஒரு பொண்ணோடு சரத்குமார் சுற்றி கொண்டு இருந்தார் என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகர் சரத்குமார் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் சேரன் பாண்டியன், நட்புக்காக போன்ற திரைப்படங்கள் இப்ப வரைக்கும் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்போது இவர்கள் இருவரும் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது சரத்குமார் பற்றி யாருக்கும் தெரியாத ரகசியத்தை கே எஸ் ரவிக்குமார் உடைத்திருக்கிறார்.

அதில் கேஎஸ் ரவிக்குமார் பேசுகையில், நான் சரத்குமாரோடு ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய நண்பர் சூட்டிங் பார்க்க வந்திருந்தான். அவன் சரத்குமாரை பார்த்ததும் இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு இவர் யார் என்று என்னிடம் கேட்டார். நான் அவரிடம் இவர் நடிகர் சரத்குமார் என்று சொன்னேன். அப்போது அவர் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு பிறகு இவரை உனக்கு ஞாபகம் இருக்கா? என்று கேட்டார்.
நான் ஆமாம் நான் சேரன் பாண்டியன் படத்தில் இவரை வைத்துதானே இயக்கினேன் என்று சொன்னேன். அதற்கு அவர் இல்லைடா நம்ம ஸ்கூல் படிக்கும்போது இவர் பெசன்ட் நகரில் ஒரு பொண்ணோட சுத்திட்டு இருப்பாரு. உனக்கு ஞாபகம் இருக்கா? என்று நினைவுப்படுத்தினான். அதற்குப் பிறகு தான் எனக்கும் அந்த நினைவு வந்தது. அது பற்றி சரத்குமாரிடம் நாங்கள் கேக்க, வணக்கம் அங்கிள் என்று சொல்ல சரத்குமார் முதலில் எதுவும் நினைவில்லாமல் முழித்துக் கொண்டிருந்தார்.
பிறகு சார் நீங்க பெஷண்ட் நகரில் குறிப்பிட்ட ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி அந்தப் பெண்ணின் வீட்டு மாடியில் வாடகைக்கு இருந்தீங்களா? என்று கேட்க ஆமாம் என்று சரத்குமார் சொன்னார். உடனே நீங்க கூட அந்த பெண்ணை ஸ்கூல் பஸ்ஸில் ஏத்தி விட வருவீங்களே? என்று கேட்க, ஆமாம் என்று சொன்னார். அப்போ ஒரு நான்கு ஐந்து பசங்க வருவாங்க ஞாபகம் இருக்கா! என்று நான் கேட்க ,அதற்கு அவர் ஆமாம் எனக்கு ஞாபகம் இருக்கு.
நான் அந்த வீட்டு மாடியில் குடி இருந்த போது அந்த வீட்டுக்காரங்க நம்ம பாப்பா கிட்ட ஒரு அஞ்சு ஆறு பசங்க பிரச்சனை பண்ணுறாங்க. நீங்க டென்னிஸ் விளையாட வரும்போது பாப்பாவ ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றிவிட்டுறீங்களான்னு கேட்டாங்க நானும் சரின்னு வந்தேனே என்று சரத்குமார் சொல்ல, அதற்கு நான் ஆமாம் அந்த பசங்க நாங்க தான். அப்போ கூட உங்களுக்கு வணக்கம் சார் என்று சொல்லிட்டு போவமே என்று சொன்னேன்.
அதற்கு பிறகு தான் சரத்குமாருக்கு ஞாபகம் வந்தது என்று சிரித்தபடியே பேசிய கே எஸ் ரவிக்குமார், உங்களுக்கு சந்தேகம் வந்து இருக்கலாம் கேஸ் ரவிக்குமார் ஸ்கூல் படிக்கும்போது சரத்குமார் அவ்வளவு பெரிய ஆளா இருந்தாரா? என்று ஆமா நாங்க ஸ்கூல் படிக்கும்போது அந்த பெசன்ட் நகர் பொண்ணை எங்க பிரண்டு ஒருத்தன் லவ் பண்ணுனான். அவனுக்கு துணைக்காக நாங்களும் நாலு அஞ்சு பேரு அவன் கூட போவோம்.
சரத்குமார் அப்போவே ஜிம் பாடியா இருப்பாரு. அவர் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்ததால அவங்க சரத்குமாரை நம்பி அந்த பொண்ணை அனுப்புனாங்க. சரத்குமார் தான் அந்த பொண்ணை ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றிவிட்டு, ஈவினிங் கூட்டிட்டு வருவாரு. முதல் நாள் நாங்கள் இவரை பார்க்கும்போது இவர் ஒரு நாளில் போயிடுவார்னு நினைச்சோம். பிறகு தொடர்ந்து வந்த போது தான் இவரை எப்படியாவது ஃப்ரெண்ட் பிடிக்கணும்னு சொல்லி நாங்க வணக்கம் அங்கிள் என்று சொல்லிவிட்டு போவோம் என்று பழைய நினைவுகளை கே.எஸ் ரவிக்குமார் பகிர்ந்து இருக்கிறார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications