குபேரா பிச்சிக்கிட்டு போகுது.. தனுஷ், ராஷ்மிகா குஷி.. வெற்றிப்படம் தந்த நாகார்ஜுனா ஹேப்பி: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டைரக்டர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சாயாஜி ஷிண்டே மற்றும் பாக்கியராஜ் நடித்துள்ள குபேரா திரைப்படம்.. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை தந்து வருகிறது..தனுஷுக்கும் தமிழ் சினிமாவுக்கும் சக்ஸஸ் தரும் படமாக இது அமைந்துள்ளதால், தனுஷ் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்து வருகிறது. இந்நிலையில் குபேரா படம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

Fine Time Cine என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "படம் எப்படி இருக்குனு கேட்குறீங்க.. இதை சொல்றதுக்கு நான் எங்கேயும், யார்கிட்டயும் காசு வாங்கல.. காசு வாங்காமலேயே சொல்றேன், குபேரா படம் அருமையாக இருக்கிறது.. ரொம்ப நல்ல படம்.. ஏற்கனவே நடிப்பில் சிறந்து விளங்கும் தனுஷ், இந்த படத்தில் இன்னொரு கட்டத்துக்கு போயிருக்கிறார்..

Television Kubera dhanush

பெரிய ஓபனிங் இல்லை

இந்த படத்துக்கு முதல்நாள் பெரிய ஓபனிங் கிடையாதுதான்.. ஆனால், இன்னும் 2 நாளில் பிச்சிக்கிட்டு போகப்போகுது.. ஏனென்றால், இயற்கையான விமர்சனம், அதாவது மக்களிடமிருந்து கிடைக்கும் விமர்சனம் மட்டுமே பேசப்படும். ரிவ்யூ தருபவர்கள் என்னதான் படம் நல்லா இருக்கு, நல்லா இல்லை என்று சொன்னாலும், இரண்டுக்குமே காசு வாங்கி கொண்டு பேசுவதாகத்தான் ஒரு பிம்பம் இன்று விழுந்துள்ளது. ஆனால், மக்கள் விமர்சனம் அப்படியில்லை.

குபேரா படத்தில் ஒரு எல்லையை தனுஷ் தாண்டியிருக்கிறார் என்றே சொல்லலாம். அந்த பிச்சைக்கார ரோலுக்கு பொருத்தமாக இருக்கிறார்.. கவின் நடித்த ப்ளடி பெக்கர் படம் போல சாயல் என்கிறார்கள்.. அந்த படத்தின் கதை, இந்த படத்தின் கதை வேறு வேறாகும். தனுஷின் ஆரம்ப காட்சியிலிருந்து முடியும்வரை சிறப்பாக நடித்துள்ளார்.

ஸ்கிரீன் பிளே அருமை

3 மணிநேரம் என்பதால், நெகட்டிவ்வாக பேசுகிறார்கள்.. ஆனால் இதில் ஸ்கீரீன் பிளே பக்காவாக உள்ளது.. பிளாஷ்பேக் காட்டினாலும் சரி, இந்த படம் தொய்வில்லாமல் உள்ளது.. இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட்டே கதைதான்.. மிகவும் வலுவான கதையாக உள்ளது..

கார்ப்பரேட் + அமைச்சர் சேர்ந்து செய்யக்கூடிய ஒரு மோசடிக்கு பிச்சைக்காரர்களை பயன்படுத்துகிறார்கள்.. இதுதான் கதையின் ஒன்லைன் என்று சொல்லலாம்.. பிச்சைக்காரர்களை பினாமியாக பயன்படுத்துகிறார்கள்.. எனவே 3 மணி நேரம் போனதே தெரியவில்லை. நாகார்ஜுனா மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்..

தெலுங்கு படம் போல இருக்கா

தெலுங்கு படம் போலவே இருப்பதாக சொல்கிறார்கள்.. நாசர் ஏற்கனவே தெலுங்கில் நடித்துள்ளதால் அப்படி சொல்கிறார்கள்.. கிடையாது, தமிழ் சினிமாவில் நடித்துள்ளவர்கள்தான் அதில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள்..

ராஷ்மிகாவை பயன்படுத்தியதுகூட இது பேன்-இந்தியா படம் என்பதற்காகத்தான்.. எனவே இந்த படத்தில் நடிகர்கள் தேர்வு மிகச்சிறப்பாக உள்ளது. எல்லா காட்சிகளிலுமே பர்பெக்‌ஷன் இருக்கிறது. ஒரு காட்சியில்கூட லாஜிக் மிஸ்ஸாகவில்லை.

இயக்குனர் மிக அருமை.. சென்ட்டிமென்ட், காட்சிகள் அழுத்தமாக பதிகிறது, கோயிலும், கோர்ட்டும் ஒன்றுதான், போன்ற சில வசனங்கள் அழுத்தமாக பதிகிறது.. சண்டைக்காட்சிகள் அளவாக இருக்கிறது. ராஷ்மிகா சிறந்த நடிகை.. புஷ்பா படம்வரைக்கும் எனக்கு அது தெரியவில்லை.. ஆனால், இந்த படத்தில் கேரக்டருக்கு பொருத்தமாக, அளவாக நடித்துள்ளார்.. படம் வெற்றி பெறும்" என்று தெரிவித்துள்ளார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+