Naam iruvar namakku iruvar serial: தொட்டால் பூ மலரும்.. இங்கே பூ எப்படி எல்லாம் மலருது...!
சென்னை: தொட்டால் பூ மலரும்.. இங்கே கோவத்தில் குஸ்தி வாத்தியார் கன்னத்தில் அடித்தாலும் பூ எப்படி எல்லாம் மலருது பாருங்க...
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனை தங்கையின் கல்யாணத்தை பார்க்க கூடாது என்று சொன்ன மாப்பிள்ளையின் கன்னத்தில் அறைந்துவிட்டு பெண்ணை அழைத்துச் செல்கிறார் அப்பா.
அப்போது ஒலிக்கிறது இந்த பாடல் தொட்டால் பூ மலரும் என்று. காலம் சென்றாலும் வெவ்வேறு காட்சிகளுக்கும் பொருந்தும் படியான இந்த பாடலின் அர்த்தம் அத்தனை மகத்துவமானது.விஜய் டிவி ட்வீட்டர் வலைத் தளத்தில் இதை வெளியிட்டுள்ளது

உழைக்கும் மாயன்
தங்கையின் கல்யாணத்துக்கு என்று ஓடி ஓடி உழைக்கும் அண்ணன் மாயன் யாருக்கும் எதற்கும் பயப்படாத ஒரு ரவுடி. இவனை எந்த நேரத்தில் தன் வசப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டு காத்துக் கிடந்த கார்த்திக், மாயனின் தங்கையை கல்யாணம் செய்து கொள்வதை சாக்காக வச்சு அவனை பழி வாங்க நினைக்கறான்.

பிடிக்காத மாயன்
அப்பா குஸ்திக்கும் பிடிக்காத மாயன் முரடன்தான். ஆனால், அவனை மாதிரியே இருக்கும் இன்னொரு பிள்ளையான அரவிந்த் டாக்டருக்கு படித்து பரம சாதுவாக இருப்பதால் எல்லாருக்கும் பிடித்த பிள்ளையாகிடறான் மாயன் பிடிக்காத ரவுடி பிள்ளையாகிடறான்.

பிளாக் மார்க் மாயன்
கோல்மால் பண்ணி தேவியை கல்யாணம் செய்துக்கிட்டதில் தேவிக்கு பிடிக்காத கணவனாகி தேவியின் வீட்டுக்கு பிடிக்காத மருமகனாக வாழ்ந்து இப்படி ஏகப்பட்ட பிளாக் மார்க்கில் இருக்கும் மாயன் காலப்போக்கில் எல்லா மார்க்கையும் அழித்துவிட்டு வாழ்ந்து வருகிறான்.

அப்போதுதான் கல்யாணம்
நல்லவனாக வாழ்ந்து வருகையில்தான் தங்கையின் கல்யாணம் கூடி வருகிறது,.அதுவும் சொந்த மச்சினன் தங்கையை காதலித்து கல்யாணம் செய்து கொள்ள முன்வருகிறான். சமயம் பார்த்து பழிவாங்க. தாலி கட்டும்போது மாயன் மணவறையில் இருக்கக் கூடாது என்று கட்டளையிட மாயனும் கண்ணீருடன் கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறுகிறான்.

பூ மலரும்
இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த மாயனின் அப்பா குஸ்தி வாத்தியார் என்னதான் பிள்ளை தனக்கு ஆகாதவனாக இருந்தாலும், பிள்ளை இல்லாத இந்த கல்யாணம் வேண்டாம் என்று தனது பெண்ணை மனமேடையை விட்டு எழுந்திரிக்க சொல்கிறார். இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்கிறார்.
நடக்கும் என்று மாப்பிள்ளை சொல்லி, அவரின் கையைத் தட்டிவிட, பொளேர் என்று கன்னத்தில் விடுகிறார் ஒரு அறை.. அப்போதுதான் தொட்டால் பூ மலரும் என்று பாடல் ஒலிக்கிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications