நட்பு காதலாக மாறுமா? இன்ஸ்ட்டாவில் விளக்கம் கொடுத்த மகாநதி சீரியல் நடிகை.. அடடா சூப்பர் முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை லட்சுமி பிரியாவும், விஜய் டிவியில் பொன்னி சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் சபரியும் சேர்ந்து ஒரு வீடியோ எடுத்திருக்கிறார்கள். அதை சபரி சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இவர்களுடைய நட்பு காதலாக மலருமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும் நிலையில் இது குறித்து லட்சுமி பிரியா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பொதுவாக சீரியல் மற்றும் சினிமாவில் ஒன்றாக நடிப்பவர்கள் பலர் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். ஒரு சிலர் ஜோடியை பார்க்கும்போது இவர்கள் ரியல் ஜோடியாக மாறினால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கும். ஆனால் அது அவர்களுடைய தனிப்பட்ட முடிவில் வேறுவிதமாக இருக்கும். ஆனாலும் ஒரு சிலர் தொடர்ந்து இவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கமாண்டுகளில் வற்புறுத்தி வருகிறார்கள்.

மகாநதி சீரியல் பிரபலம்
இது போன்ற சம்பவம் தான் விஜய் டிவியில் மகாநதி சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் லட்சுமி பிரியாவிற்கும் நடந்திருக்கிறது. இந்த சீரியலில் காவிரி மற்றும் விஜய் ஜோடிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் காவிரிக்கு வேறு ஒரு கேரக்டர் ஜோடியாக இருந்தாலும் பாதியில் வந்த விஜய் இப்போது ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக வந்து விட்டார்.
வருத்தத்தில் நடிகை
லட்சுமி பிரியா மகாநதி சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உட்பட ஒரு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருக்கிறார். அவரைப் போலவே பொன்னி சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சபரியும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர்கள் இருவரும் ஒரு வீடியோ எடுத்து அதை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள். அந்த வீடியோவிற்கு வந்த கமெண்ட்கள் தான் இவர்களை வருத்தமடைய செய்திருக்கிறது.
வைரல் வீடியோ
நிஜத்திலும் இவர்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்று சோஷியல் மீடியாவில் இவர்களுடைய ரசிகர்கள் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது பற்றி சமீபத்தில் சபரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்து இருந்தார். அதில் சபரி மற்றும் லட்சுமி பிரியா இருவரும் அந்த வீடியோவில் இருக்கிறார்கள். அதற்கு கீழே ஒருவர் "அழகு பிள்ளைங்க, இந்த நட்பு என்றும் தொடரட்டும்" என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்.
ரசிகர்களின் கமெண்ட்
அதற்கு இன்னொருவர் இந்த "பிரண்ட்ஷிப் கல்யாணத்தில் முடியட்டும்" என சொல்ல, இவர்களது ரசிகர்கள் நெகட்டிவ் கருத்துக்கள் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு நடிகர் சபரி "சத்தியமா இல்லை" என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து இன்னொரு ரசிகர் "நீங்க இந்த மாதிரி கமெண்ட்டுகளுக்கு ரிப்ளை பண்ணாதீங்க" என்று பதிவிட்டு இருக்கிறார். அந்த கமெண்டை சபரி தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவை நடிகை லட்சுமி பிரியாவும் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications