For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Lakshmi Stores Serial: நல்ல நாளும் அதுவுமா பூர்ண கும்பத்தை தூக்கி எரிவதா?

Google Oneindia Tamil News

சென்னை: நட்சத்திரம் செய்யாததை நாள் கிழமை செய்யும் என்பார்கள். செவ்வாய் வெறும் வாய், பொண்ணு கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள்.

இப்படிப்பட்ட நாட்களில் நல்ல காரியத்தை செய்ய சொல்வார்கள். இதை வழி வழியாக வளரும் தலைமுறையினர் கடைப்பிடித்தும் வருகிறார்கள்.

பாரம்பரியம், பண்பாடு என்பவை காலத்தால் அழிக்க முடியாதவைகளாக இருக்க வேண்டும். எனவேதான் வீட்டுப்பெரியவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும் என்பார்கள்.

ரவிக்கு தேஜாவுடன்

ரவிக்கு தேஜாவுடன்

ரவிக்கு தேஜாவுடன் கல்யாணத்தை நடத்த திட்டமிட்டு, மினிஸ்டரின் தங்கையும், தம்பியும் ஏற்பாடு செய்கிறார்கள். கல்யாண நாளும் வந்தது, ரவியின் அண்ணி, அண்ணனை கொல்கத்தாவில் கடத்தி வச்சு, ரவியை மிரட்டி தாலி கட்ட ஏற்பாடு செய்கிறார்கள். ரவியும் கடைசி வரை அண்ணி மகாலட்சுமி அண்ணனை கூட்டி வந்துவிடுவார் என்று நம்பிக்கையில் இருக்க நம்பிக்கை வீணாகிப் போகிறது.

Ayutha pooja speciel: விஜய் டிவியில் ஆயுத பூஜை ஸ்பெஷல்.. கொலைகாரன்!Ayutha pooja speciel: விஜய் டிவியில் ஆயுத பூஜை ஸ்பெஷல்.. கொலைகாரன்!

ரவி பாக்கியலட்சுமி

ரவி பாக்கியலட்சுமி

ரவிக்கு கல்யாணம்..தனது கழுத்தில் ரவி தாலி கட்டிவிட்டு, கட்டாயத்தால் தேஜாவுக்கு தாலி கட்டப்போவதை அறிந்து, தற்கொலைக்கு முயற்சிக்கிறாள் பாக்கியலட்சுமி. தாத்தா பார்த்துவிட்டு, ரவியின் கல்யாணத்தை நிறுத்த பாக்கியலட்சுமி குடும்பமே புறப்பட்டு வருகிறது.

ரவி கட்டிய தாலி

ரவி கட்டிய தாலி

ரவி கட்டிய தாலி பாக்கியலட்சுமி கழுத்தில் இருக்கிறது என்று தங்கை வனிதா கூறியும், மினிஸ்டரின் தங்கையும், தம்பியும் நம்பவில்லை. ஆதாரம் கேட்கிறார்கள். மகாலட்சுமியின் உறவுப்பெண் கியூ பிரான்ச் ஆபீசர் என்று சொல்லி ஆதாரத்தை காட்டுகிறாள்.

போன் மகாலட்சுமி

போன் மகாலட்சுமி

அதற்குள் மாகலட்சுமியிடம் இருந்து போன் வருகிறது.கொல்கத்தாவில் தான் தப்பித்து விட்டதாகவும், உன் அண்ணனும் இப்படித்தான் தப்பித்து இருப்பார்.அவரை தேடி கண்டு பிடிச்சு அழைச்சுட்டு வருவதாகவும் கூறுகிறார். நீ தேஜா கழுத்தில் தாலி கட்டாதே ரவி என்று கூறுகிறார்.

பூர்ண கும்பம்

பூர்ண கும்பம்

கல்யாணம் நின்று போன ஆத்திரத்தில் தேஜா பூஜை பொருட்கள் அத்தனையையும் எட்டி உதைக்கிறாள். பூர்ண குமபத்தை எடுத்து தூக்கி எறிகிறாள். தாம்பாளத்தில் இருந்த அரிசியைத் தட்டி விடுகிறாள். அதே அரிசியை எடுத்து வாயில் போட்டு, ரவி உனக்கு வாய்க்கரிசி போடப் போறேண்டா என்று வசனம் பேசுகிறாள்.

எல்லார் வீடுகளிலும் நவராத்திரி பொழுதுகளின் 9 நாட்கள் ஒவ்வொன்றாக கடந்து வரும் காலக்கட்டத்தில் தொலைக் காட்சியில் இப்படிப்பட்ட காட்சிகளை காண்பிப்பது அபத்தமாக இருக்கிறது.

English summary
Tradition and culture must be indestructible. That is why the elders should listen and listen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X