Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சம்பளமே வாங்காமல் நடித்தது இவரா? அதுவிடுங்க, ரஜினி அப்படி சொன்னதுமே அனிருத் வெட்கப்பட்டு.. வேற லெவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் அனிருத் ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால சினிமா பயணத்திற்கும், நாளை வெளியாகவுள்ள கூலி படத்திற்கும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "50 ஆண்டுகள்... ஒரே சிம்மாசனம்... ஒரே மனிதர்...நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகும் 'கூலி' யுடன், தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பொன் விழாவை நாம் அனைவரும் கொண்டாடுவோம். சர்வ வல்லமை கொண்டவர்களின் ஆசீர்வாதங்களுடனும் உங்கள் அனைவரின் அன்புடனும்" என பதிவிட்டுள்ளார்.. இந்நிலையில், அனிருத் பற்றி ரஜினிகாந்த் பேசியதை பேட்டி ஒன்றில் பாலாஜி பிரபு பகிர்ந்து கொண்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், சவுபின் ஷாகிர், அமிர்கான், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் நாளை வெளியாக உள்ளது கூலி படம்.

Television Anirudh Rajijni

வசூலில் சக்ஸஸ்

இந்த படம், தமிழ்நாட்டில் மட்டுமே 120 கோடி, வெளிநாடுகளில் 75 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 45 கோடி, கர்நாடகாவில் 20 கோடி, கேரளாவில் 15 கோடி, வட இந்தியாவில் 50 கோடிக்கு வியாபாரம் நடந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.. அதாவது, 325 கோடியில் எடுக்கப்பட்ட இப்படத்தின் வசூல், 625 கோடியை கடந்துவிட்டால், படம் லாபம்தான் என்கிறார்கள். எனவே இந்த படத்தின்மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

சம்பளமே இல்லையா

அதுமட்டுமல்ல, இப்படத்திற்காக ரூ.200 கோடி சம்பளம் ரஜினி பெற்றுள்ளதாக தெரிகிறது. சைமனாக நடித்திருக்கும் நாகார்ஜுனா ரூ.10 கோடியும், ஸ்ருதிஹாசன் ரூ.4 கோடியும் பெற்றதாக தெரிகிறது. அதேபோல், சத்யராஜ் ரூ.5 கோடியும் கன்னட நட்சத்திரம் உபேந்திரா ரூ.5 கோடியும் பெற்றதாக கூறப்படுகிறது. டைரக்டர் லோகேஷ் கனகராஜ் ரூ.50 கோடியும் இசையமைத்த அனிருத் ரூ.15 கோடியும் சம்பளம் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

அமீர் கான் ரூ.20 கோடி பெற்றதாக தகவல் வெளியாகி இருந்தாலும், ரஜினிகாத் மீதான மிகுந்த அன்பு மற்றும் மரியாதை காரணமாக தனது கதாபாத்திரத்திற்காக அவர் ஒரு பைசா கூட வாங்கவில்லையாம்

லதா ரஜினிகாந்த்

இதற்கு நடுவில், லதா ரஜினிகாந்த் கூலி படத்தை பார்த்துவிட்டதாக தெரிகிறது.. பொதுவாகவே ரஜினியின் படங்களை ரிலீசுக்கு முன்பே பார்த்துவிடும் லதா ரஜினி, கூலி படத்தையும் சமீபத்தில் பார்த்துள்ளார்.. படத்தை பார்த்துவிட்டு ரஜினியின் டாப் படங்களில் கூலியும் ஒன்றாக இருக்கும் என்று லதா சொன்னாராம்.. இந்த தகவலானது, ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு இசையமைப்பாளர் அனிருத் பற்றி கூறியிருக்கிறார்.. அதில், "ரஜினி தூக்கி வளர்த்த பிள்ளைதான் அனிருத்.. இன்று மிக உயரத்தில் வளர்ந்திருக்கிறார் அனிருத்.. உண்மையிலேயே அனிருத்தின் திறமை அபாரமானது.. இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகளவில் அனிருத்தை பாராட்டுகிறார்கள்.

உயரத்துக்கு சென்ற அனிருத்

வெளிநாடுகளில் ஷோ செய்ய வாய்ப்பிருந்தும் நேரம் கிடைப்பதில்லை.- நிறைய படங்களை அடுத்தடுத்து செய்து வருகிறார்.. அவர் இசையமைக்கக்கூடிய படங்கள் அனைத்துமே பெரிய ஸ்டாருடைய படங்கள்தான்.. அதிலும் ரஜினி படம் என்றாலே சற்று கூடுதலாகவே மியூசிக் கலக்கிவிடுவார்.. அந்தவகையில், கூலி படத்திலும் அனிருத் அசத்தியிருக்கிறார்..

கூலி பட விழா மேடையிலும் அனிருத்தை ரஜினிகாந்த் மேடையிலேயே பாராட்டியிருந்தார்.. Most eligible Bachelor in India என்று சொன்னார்.. அதுமட்டுமல்ல, டேலண்ட், பணம், கேரக்டர், குடும்ப பின்னணி அனைத்துமே அனிருத்துக்கு இருக்கிறது, what Not என்பதுபோல ரஜினிகாந்த் பேசியிருந்தார்.. அதாவது படத்தையும் தாண்டி பர்சனலாகவும், அனிருத்தை புகழ்ந்து பேசியிருந்தார்.

ரஜினி தந்த சர்ட்டிபிகேட்

குறிப்பாக, "அனிருத் நடத்தும் இசைக்கச்சேரிகளுக்கு பாட்டு கேட்க சிலர் வருகிறார்கள்.. ஆனால், அதைவிட அனிருத்தை பார்க்கத்தான் பெண்கள் அதிகம் வருகிறார்கள்.. அனிருத் பாடும்போது, அந்த இருட்டுக்குள் ஆண்களும், பெண்களும் இருப்பதை நினைத்து பாருங்கள்" என்றெல்லாம் ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

Most eligible Bachelor என்று ரஜினியே சர்டிபிகேட் தந்திருக்கிறார்.. அநேகமாக அனிருத்துக்கு பெண் பார்ப்பதாகவே தெரிகிறது.. இனி கோடீஸ்வரர்கள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு பெண் தர வாய்ப்புள்ளது.. ஆனால், ரஜினி தன்னை புகழ்ந்ததுமே, வெட்கப்பட்டு சிரித்தவாறே இருந்தார் அனிருத்.

லோகேஷ் கனகராஜ்

ஆடியோ வெளியீட்டு விழாவில் அனிருத்தை மட்டுமல்ல, லோகேஷ் கனகராஜையும் ஜாலியாக கிண்டலடித்து பேசியிருந்தார்.. டிவியில் லோகேஷ் பேட்டியை, நின்னுட்டு பார்த்தேன், உட்கார்ந்துட்டு பார்த்தேன், படுத்துட்டு பார்த்தேன், அப்பறம் தூங்கி எழுந்து பார்த்தேன், அப்போதும் லேகேஷின் பேட்டி ஓடிக் கொண்டிருந்தது என்று கிண்டலாக கூறியிருந்தார். இதற்கு லோகேஷூம் வெட்கப்பட்டு சிரித்தார்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+