மனோபாலாவின் ஆத்மா சாந்தி அடைவதற்கு அரவிந்த் சுவாமி இதை பண்ணலாம்.. வேண்டுகோள் வைத்த பிரபலம்
சென்னை: நடிகராகவும் இயக்குனராகவும் இருந்து வந்த மனோபாலா சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார்.
அவருடைய இறப்பு பற்றி பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தன்னுடைய வருத்தத்தையும் மனோபாலா பற்றிய பல தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் நடிகர் அரவிந்தசாமி மனோபாலாவிற்காக சதுரங்க வேட்டை 2 படம் வெளியாவதற்கு முயற்சி செய்யலாம் என வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

நடிகராகவும், இயக்குனராகவும் இருந்து வந்த மனோபாலாவின் மறைவு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரையும் பாதித்திருக்கிறது. அனைவரிடமும் அன்பாக பழக கூடிய ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் ஒரு சிறந்த மனிதராகவும் வலம் வந்தார் என்று பலரும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
யாரிடமும் பகைமை பாராட்டாமல் அனைவரிடமும் நல்ல மனதோடு பழகக்கூடிய ஒரு மனிதர் என்றும் கோபத்திற்கும் மனோபாலாவிற்கும் மிகப்பெரிய தூரம் என்றும் அவரை சுற்றியுள்ள நெருங்கிய நண்பர்கள் பலர் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். ஆகாய கங்கை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் முதன் முதலில் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த மனோபாலா பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட பல படங்களை இயக்கியும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகை ராதிகாவை வைத்து மனோபாலா பல படங்களை இயக்கியுள்ளாராம். திரைத்துறையில் சிக்கனமாக படம் எடுப்பதில் மனோ பாலாவை மிஞ்ச வேறு யாரும் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு வெளியான சதுரங்க வேட்டை திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த திரைப்படத்தை தயாரித்தவர் மனோபாலா தான். எச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த அந்த படம் மிகப்பெரிய வசூலையும் பெற்று தந்தது. அதை தொடர்ந்து பராசுரன் என்ற திரைப்படத்தை மனோபாலா தயாரித்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் பிரபல சினிமா தயாரிப்பாளரான கே. ராஜன் மனோபாலாவை குறித்து ஒரு செய்தியை பகிர்ந்து இருக்கிறார். அதில் சதுரங்க வேட்டை படம் நல்ல ஒரு வரவேற்பு பெற்று தந்தது. அதை தொடர்ந்து இரண்டு மூன்று படங்களை தயாரித்த மனோபாலாவிற்கு ஓரளவுதான் வசூல் வந்ததாம். ஆனால் நடிகர் அரவிந்த்சுவாமியை வைத்து தயாரித்த படமான சதுரங்க வேட்டை 2 படம் முற்றுப்பெற்ற நிலையிலும் இன்னும் அந்த படம் வெளிவராமல் இருக்கிறதாம்.
அந்தப் படத்தில் ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதாகவும், அந்த பிரச்சனை காரணமாக வழக்கு தொடரப்பட்டதாகவும் கூறுகிறார். ஆதனால் அரவிந்த்சுவாமி நினைத்தால் அந்த வழக்கை விரைவில் முடித்து அந்த படத்தை வெளியிட உதவலாம் எனவும் அதில் கூறி இருக்கிறார். மேலும் மனோபாலாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் அரவிந்தசாமி இதை செய்ய வேண்டும் என்று வேண்டுகோளையும் கே. ராஜன் வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications