Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் மனைவி இவரா? அந்த பிரபலத்தின் மகளாமே! லீக்கான போட்டோஸ்
சென்னை: இன்று இந்திய அளவில் எல்லா முன்னணி நடிகர்களாலும் தேடப்படும் இயக்குநராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம்' படத்தில் தொடங்கி தற்போது வெளியாகி இருக்கும் 'கூலி' படம் வரை இவர் இயக்கியுள்ள ஆறு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட். திரைத்துறையில் பல கனவுகளுடன் நுழைந்த ஒரு இளைஞனின் உணர்வுபூர்வமான சினிமா பயணத்தை இந்தக் கதை சொல்கிறது.

லோகேஷின் சினிமா பயணம்
சென்னையில் ஒரு வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீதான தீராத ஆர்வத்தால் குறும்படங்கள் எடுத்து சினிமாவை கற்றுக்கொண்டார். இவர் எடுத்த ஒரு குறும்படத்தை பார்த்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இவரை 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். ஒரு சிறு பட்ஜெட் படமாக உருவான 'மாநகரம்' ரசிகர்களின் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
'மாநகரம்' படத்திற்குப் பிறகு இவர் இயக்கிய 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ', 'கூலி' என அனைத்து படங்களுமே பெரிய ஹீரோக்களின் படங்கள். வர்த்தக ரீதியாக அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. விக்ரம் லியோ படத்தில் பார்த்து வியந்து போன ரஜினிகாந்த் தனக்கு கதை இருக்கிறதா என்று தானே போன் செய்து கேட்டதாக பேசி இருந்தார். இதனால் லோகேஷ் கனகராஜ் முன்னணி நடிகர் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்று தெரிகிறது.
ரகசியமான தனிப்பட்ட வாழ்க்கை
சினிமாவில் என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து லோகேஷ் கனகராஜ் மீடியா வெளிச்சம் படாமல் ரகசியம் காத்து வருகிறார். சமீபத்தில் அவந்திகா கனகராஜ் என்ற ஐடியில் இன்ஸ்டாகிராமில் இருக்கும் ஒரு பெண்ணுடன் இவர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது. ராமேஸ்வரம் கோயிலுக்கு அந்த பெண்ணுடன் லோகேஷ் கனகராஜ் வந்ததால் அவர்தான் லோகேஷ் கனகராஜ் மனைவி என சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். ஆனால் உண்மையில் அவர் லோகேஷ் கனகராஜின் மேனேஜர்களில் ஒருவர்.
லோகேஷ் கனகராஜ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்துவிட்டார். அவருடைய திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒரு அரேஞ்ச் மேரேஜ். கேப்டன் விஜயகாந்த் 90களில் ராவுத்தர் பிலிம்ஸ் என்ற பெயரில் ஒரு படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்து அதில் பல படங்களில் நடித்து வந்தார். அந்த நிறுவனத்தில் கதை கேட்கும் பொறுப்பில் இருந்த சௌந்தர் என்பவருடைய மகளைத்தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திருமணம் செய்துள்ளார் இன்று திரை விமர்சனம் செய்யாறு பாலு ஏற்கனவே பேசி இருக்கிறார்.
வருங்கால திட்டங்கள்
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் 'கைதி 2' படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை முடித்த கையோடு அமீர்கான் நடிப்பில் ஒரு பான் இந்தியா படத்தை இயக்க உள்ளார். 'கூலி' படத்துக்காக ₹50 கோடி சம்பளம் வாங்கிய லோகேஷ் கனகராஜ் ஆமீர் கான் படத்துக்காக ₹100 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வங்கி ஊழியராக இருந்து இன்று இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட லோகேஷ் கனகராஜின் பயணம் பலருக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications